கடவுளையும், மனதையும் புரிந்து கொண்டால், மனம் சார்ந்ததாக பிழையாக கருதப்பட்டு வருகிற, எந்தச் சிக்கலுக்கான எந்தத் தேவையும் எழாது என்பதை தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம் அடிப்படையில் விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. 13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126: மிகமிக நேர்த்தியான வடிவமைப்பையும், மிகப் பேரளவான தொடர்பு நரம்புகளையும் கொண்ட உறுப்பான மூளையே மனம் ஆகும். இவ்வளவு நேர்த்தியும் விரிவான தொடர்பும் ஆன மனம் என்கிற மூளை, நூறுவிழுக்காடு கடவுள் மாதிரியானது என்கிற கடவுள்கூறு ஆகும். தான்தோன்றி இயக்கமும், எல்லையும் இல்லாத வெளியைத்தான் கடவுள் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். மனித மனதிற்கும் கடவுள் மாதிரியான தான்தோன்றி இயக்கமும், எல்லையும் இல்லாத என்பதான இயல்பு உண்டு. தான்தோன்றி இயக்கம் இல்லாத கடவுளுக்கு, நிலம் நீர் தீ காற்று என்கிற நாற்திரங்கள் அந்த நாற்திரங்களின் தொடர்ச்சிகளான கோள்கள், நீங்கள், நான் என்று அனைவரும் கொடுக்கும் இயக்கத்திற்கு முயக்கத்தைக் கொடுப்பதே வேலை அல்லவா! மனித மனத்திற்கும் சொந்தமான ஆற்றல் என்று எதுவும் கிடையாது. மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐம்புலன்களின், அறிதல் ஆற்றலைப் பெற்றுக்கொண்டு, அதற்கு அந்த ஐம்புலன்கள் ஆற்றவேண்டிய பாடுகளை முயக்குவது மனதின் வேலையாகும். இன்பம், துன்பம், மனமகிழ்ச்சி, மனஅழுத்தம், மனஅமைதி எதுவும் மனம் சார்ந்தது அன்று என்பது நூறுவிழுக்காடு உண்மை ஆகும். அனைத்தும் மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐம்புலன்களின் அறிதல் சார்ந்தது மட்டுமே. பிறந்ததிலிருந்து, மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற உங்கள் ஐம்புலன்களின் அறிதலே நீங்கள் ஆவீர்கள். உங்களின் உண்மை அறிவு என்பது பிறந்ததிலிருந்து, மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐம்புலன்களின் அறிதலே. நீங்கள் மனம் போலவும், உங்கள் மனம் இந்த மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐம்புலன்களுக்கு தொடர்பு இல்லாத வேறு போலவும் கருதியிருப்பது உண்மை அல்ல. இந்த ஐம்புலன்களின் அறிதலே உங்கள் மனம் என்று நீங்கள் புரிந்து கொண்டால், அம்மாவின் இயல்பு தூக்கலாகவோ, அப்பாவின் இயல்பு தூக்கலாகவோ, உங்கள் பெற்றோரின் மறுபிறப்பான உங்கள் இயல்பு, உங்களின் ஒரு பகுதி ஆகும். நீங்கள் என்கிற உங்கள் இயல்பு இன்னொரு பகுதியாகும். ஆக, நீங்கள் என்கிற உங்கள் மனம் உங்களின் மரபாலும், உங்களின் ஐம்புலன் அறிந்த அறிவாலும் உருவாகும். உங்களுக்கான மகிழ்ச்சியை மட்டுமே உங்களால் உறுதியாகத் தக்கவைத்துக்கொள்ள முடியும், நீங்கள் ஐம்புலன்களுக்கு தருகிற அறிதலை மாற்றி, கல்வி என்பது புறத்திலிருந்து நம் அகத்திற்கு செல்வது. நம் உடம்பிலுள்ள அறியும் கருவிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி இவை மூலமாக வெளியிலிருந்து செய்திகள் உள்ளே செல்கின்றன. என்று கல்விக்கான வரையறை உண்டு இந்த அறிதல் பொதுவான பாடத்திட்டத்தின் கீழ்- ஒவ்வொரு மாணவனுக்கும், ஒவ்வொருவரின் எல்லாத் துறைக்கும், ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் திணிக்கப்படுகிறது. உண்மையில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அறிதலுக்கான பாடத்திட்டம் அவரவருக்கு தனியானது ஆகும். ஒருவருக்குத் தன் சொந்தப் பாடத்திட்டம் போலவே பொதுப்பாடத்திட்டம் அமைந்தால் அதில் அவன் திறமையாளனாக மிளிர்கிறான். மகிழ்ச்சியாக உலா வருகிறான். ஒருவருக்குத் தன் சொந்தப் பாடத்திட்டத்திற்கு மாறான பொதுப்பாடத்திட்டம் அமைந்தால் அதில் அவர் திறமையாளனாக மிளிர முடிவது இல்லை. அங்கேதான் மனஅழுத்தம் என்று சொல்லப்படுவதான சிக்கல் எழுகிறது. இதில் அவனது மனம் என்கிற மூளையை ஒருபோதும் குற்றப்படுத்த முடியாது. ஆனால் நடப்பில் அந்த வேலைதான் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மனநோய் மருத்துவம் என்கிற தேவையில்லாத துறையெல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த மருத்துவர்கள் யாரும் அவனுக்குத் திணிக்கப்பட்ட அல்லது அவன் அடிமையாக இருக்கிற அயல் பாடத்திட்டத்தின் வீரியம் குறித்து அறியமாட்டார்கள். மாறாக அவன் மூளையைக் குற்றப்படுத்தி அவன் மூளையைத் தூங்க வைப்பதற்கு மருந்து தருவார்கள். ஐம்புலன்களின் அறிதலே உங்கள் மனம் என்று நீங்கள் புரிந்து கொண்டால், உங்கள் அறிதலுக்கு, நீங்கள் சொந்தமாக உருவாக்கி வைத்துள்ள நீங்கள் யார்? அல்லது உங்கள் உண்மை அறிவு என்கிற பாடத்திட்டமே அதாவது அறிதல்திட்டமே மிகமிக எளிதானது என்பதைப் புரிந்து கொண்டால்,
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
என்பதைப் புரிந்து கொண்டு உங்கள் ஐம்புலன்களுக்கு நீங்கள் கொடுக்கிற தேவையற்ற அறிதலை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு மனஅழுத்தம், மனக்குழப்பம், மனக்கவலை என்கிற எந்த துன்பத்திற்குமான சூழலே எழாது.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
என்பதைப் புரிந்து கொண்டு உங்கள் ஐம்புலன்களுக்கு நீங்கள் கொடுக்கிற தேவையற்ற அறிதலை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு மனஅழுத்தம், மனக்குழப்பம், மனக்கவலை என்கிற எந்த துன்பத்திற்குமான சூழலே எழாது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,148.