நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் இந்தக் குறள் திருக்குறளில் தெரிந்து செயல் வகை என்கிற அதிகாரத்தில் வருகிறது. இந்தக் குறள்- முன்னிலையில் ஒருவரை, அதாவது ஒற்றைஆளை நிறுத்தி பேசுகிறது, அவருக்கு நாம் ஆற்றுவது நல்லதாக இருந்தாலும் கூட பிழையாகி விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று. இந்தக் குறிளில் ஆற்றுவதற்கு கொடுத்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். நாம் கொடுக்கிறவர் என்கிறபோது இந்தக் குறளில் சுட்டப்படுகிறவருக்கு என்ன இயல்பு வேண்டும்? ஆக வாங்குகிற இயல்பு அல்லது தேவை எழாதவர்களுக்கு கொடுக்கப்படுகிற உழைப்போ, அறிவுரையோ, பொருளோ பயனற்றது ஆகும். சில நேரங்களில் எதிர்வினையாற்றக் கூடியதாகவும் முடிந்து விடும் என்பதே இந்தக் குறளுக்கான பொருள்.
பண்பறிந் தாற்றாக் கடை.
என்ன கொடுக்கலாம்?
உழைப்பைக் கொடுக்கலாம்.
அறிவுரையைக் கொடுக்கலாம்.
பொருளைக் கொடுக்கலாம்.
வாங்குகிற இயல்பு வேண்டும்.