Show all

களமிறங்க, பட்டியல் இடவேண்டிய நான்கு! என்னிடம் மட்டுமே இருக்கிறது. என்னிடம் இருக்கிறது. என்னிடம் மட்டுமே இல்லை. என்னிடம் இல்லை

16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5125. 

ஒரு தொழில் தொடங்குவது என்றாலும் சரியே, ஒரு வணிகம் தொடங்குவது என்றாலும் சரியே, ஒரு போட்டியில் இறங்குவது என்றாலும் சரியே, ஒரு போராட்டத்தில் இறங்குவது என்றாலும் சரியே, உடமை மீட்புக்கான ஒரு போரில் இறங்குவது என்றாலும் சரியே, 1.என்னிடம் மட்டுமே இருக்கிறது 2.என்னிடம் இருக்கிறது 3.என்னிடம் மட்டுமே இல்லை 4.என்னிடம் இல்லை. 
என்கிற பட்டியலைத் தொகுத்துக் கொள்வது வெற்றிக்கான உத்தியாகும்.

இந்தப் பட்டியல் இல்லாமல் களம் இறங்குகிற யாரும் களத்தில் அவர்களுக்கான வெற்றியை அவ்வளவு எளிதாகச் சாதிக்க முடியாது.

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்தியாவின் ஒன்றிய ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ள பிராமணர்கள் தங்களிடம் என்ன இருக்கிறது. தங்களிடம் மட்டும் என்ன இருக்கிறது. தங்களிடம் என்ன இல்லை. தங்களிடம் மட்டும் என்ன இல்லை என்கிற பட்டியலை- புனைவுகள், மூளைச்சலவை, ஆதிக்க அடாவடி என்கிற நடவடிக்கைகளோடு சிறப்பாகப் பேணி வருகின்றனர்.

தங்களிடம் என்ன இருக்கிறது. தங்களிடம் மட்டும் என்ன இருக்கிறது. தங்களிடம் என்ன இல்லை. தங்களிடம் மட்டும் என்ன இல்லை என்கிற பட்டியல் குறித்த பார்வையே இல்லாத காரணம் பற்றி, இந்தியாவின் சொந்த இனமான தமிழர்கள், ஒட்டு மொத்த இந்தியாவைத் தொலைத்து, ஒற்றை மாநிலத்தில் மட்டும், ஆட்சிஅதிகாரம் இல்லாமல், வெறுமனே மேலாண்மையும், சாராய வணிகம் செய்வதற்கான உரிமையும் மட்டுமே கொண்டுள்ளளோம்.

ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ்மண்ணே என்பதை உலகிற்கு உணர்த்தவும், இருக்கின்ற மண்ணில் அதிகார ஆட்சிக்கு களமாடிடவும், தற்போதைக்குத் தமிழர்களிடம் என்ன இருக்கிறது. தமிழர்களிடம் மட்டும் என்ன இருக்கிறது. தமிழர்களிடம் என்ன இல்லை. தமிழர்களிடம் மட்டும் என்ன இல்லை என்கிற ஒரு பட்டியலை இயன்ற வரை தெளிவாகக் கட்டி அமைக்க முயல்வோம். 
தமிழர்களிடம் மட்டும் இருக்கிறது -1 
தமிழர்களிடம்; இருக்கிறது -2 
தமிழர்களிடம் மட்டுமே இல்லை -3
தமிழர்களிடம் இல்லை -4 

பிராமணியம் (பிள்ளைகளுக்கு வடமொழிப் பெயர் சூட்டல், பிராமணர்களை அனுமதிக்கும் சடங்குகளைக் கொண்டாடியிருத்தல்) அராபியம் (அராபிய மதத்தைக் கொண்டாடி- பிள்ளைகளுக்கு அராபியப் பெயர் சூட்டல், அராபியர் தந்த தலைப்பான ஹிந்துவைக் கொண்டாடியிருத்தல், அராபியர் ஆதிக்கக் கொடையான ஹிந்தி திணிப்பைக் கொண்டாடியிருத்தல்) ஐரோப்பியம், (ஐரோப்பிய மதத்தைக் கொண்டாடி- பிள்ளைகளுக்கு ஐரோப்பயப் பெயர் சூட்டல், ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டாடியிருத்தல்) மார்க்சியம், (சொந்தமான வரலாற்றை- பாடுகளில் பார்க்காமல், மார்க்சியக் கண்ணாடி அணிதல், முதலெனப்டுவது இடமும் காலமும் என்கிற தமிழியலைத் தொலைத்து, பொருள்முதல்வாதம் என்கிற முரண்பாட்டைக் கொண்டாடுதல்) என்கிற அயல்களில் ஒன்றிலோ, ஒன்றுக்குப் மேற்பட்டவைகளில் கலவையாகவோ இயங்கிக் கொண்டிருக்கிற பலர்- 
தமிழர்கள் என்கிற தலைப்பில் பொருந்தியும் பொருந்தாமலும் அமைவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக சாதியப்பாகுபாடு தமிழர்களுக்கானது இல்லை என்று பட்டியல் இடுகிறோம், அனால் சாதியப்பாகுபாடு என்கிற பிராமணியச்சார்ப்பில் தமிழர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள் அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

 

1 2 3 4
தமிழ் மொழி மதம் அதிர்ஷ்டம்
பொருள் இலக்கணம் தெய்வம் வேதம்  
கடவுள் நிமித்தம் சாதியப்பாகுபாடு  
இறை     இயல்அறிவு ஆன்மீகம்   
ஒலியன் எழுத்து தவம்    
இயல்கணிப்பு அம்மா, அப்பா காமசாஸ்திரம்
கொக்கோகம்
இதிகாசம்
பாலியல்கல்வி
 
முன்னேற்றக்கலைகள்      
விசும்பு      
குலதெய்வம்      
முத்தமிழ்      
இயல்      
கபடி      
பொங்கல்      
நடுகல்      
பெண்      
முதல்      
நவலந்தேயம்      
கணியம்      
கலி      
காப்பியம்      
முட்டாள்      
கலியாண்டு      
ஓகம்      
திருமணம்      
உலகம்      
இமயம்      
இறத்தல், காலமாதல்      
சுழியம்      
மனம்      
கடவுள்டகூறு, இறைக்கூறு      
ஐந்திரம்      
மந்திரம்      
ஓம்      
சித்திரை      

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.