Show all

மந்திரம். தொடர்கட்டுரை: 8.ஒன்னே முக்கால் அடியில் மந்திரக்கலையின் முழு விழுமியங்கள்.

மந்திரம் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே. 
16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது கலை. மற்ற இரண்டு கலைகள் ஒன்று சோதிடம் சாதகம் உள்ளடங்கிய நிமித்தகம், இரண்டு கணியம் ஆகும். 

மந்திரக்கலையை முன்னேற்றக்கலையாக உங்கள் முன்னேற்றத்திற்கு முழுமையாக நீங்கள் முன்னெடுக்கும்போது மற்ற இரண்டு கலைகள் குறித்து நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. 

ஏனெனில் மந்திரக்கலை மற்ற இரண்டு கலைகளில் இருந்து மேம்படுத்தப்பட்ட கலையாகும்.

நிமித்தகக் கலையில் மற்றவரின் வழிகாட்டல் முதன்மையாக உள்ளது. நிமித்தகக் கலையை நாமே முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற தேவை எழவில்லை.

கணியக்கலையில் மற்றவரின் வழிகாட்டல் பகுதியாக இயல்புகள் குறித்த சில அடிப்படைகளை கற்றுக்கொள்வதற்குப் பயன்பட்டாலும் அதில் நாம் விரும்பும் ஒற்றை இயல்பை தொடர்ந்து வலுப்படுத்துவது நம்முடைய கடமையாகும்.

மந்திரக்கலை- நமது தலைஎழுத்தை, நமது விதியை நாமே எழுதிக் கொள்வதற்கானதாகும். இதில் யாருடைய வழிகாட்டலும் நம்முடைய தலைஎழுத்;தை, நம்முடைய விதியை நாம் எழுதிக் கொள்வதற்கு ஒரு வாழ்த்தாக மட்டுமே அமைய முடியும்.

நிமித்தகம் உங்களுக்கு நாற்பது விழுக்காட்டு முன்னேற்றத்தை தரமுடியும். கணியம் உங்களுக்கு அறுபது விழுக்காட்டு முன்னேற்றத்தைத் தரமுடியும். 

மந்திரத்தில் எண்ணுவது என்கிற பகுதி எண்பது விழுக்காட்டு முன்னேற்றத்தையும், திண்ணியராதல் என்கிற பகுதியில் நூறு விழுக்காட்டு முன்னேற்றமும் சாத்தியம் என்கிறது ஓர் ஒன்னே முக்கால் அடி திருக்குறள்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். அப்படி நினைப்பதோடு விட்டு விடாமல் அந்த நினைப்பு உங்களிடம் கேட்கும் வேலைகளை நீங்கள் கட்டாயம் முடித்துத் தரவேண்டும் என்பதே இந்த திண்ணியராதல் என்பதற்கான விளக்கமாகும். 

நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் காணும் கனவில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். அவைகளை நீங்கள் கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும். என்பதே இந்த திண்ணியராதல் என்பதற்கான விளக்கமாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,173.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.