இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கி ஒன்பது மணிவரை தொடரும் இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள். 21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கி ஒன்பது மணிவரை தொடரும் இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள். உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் கண்டு மகிழும் வகையாக குவியம் (ஜூம்) செயலியில். இன்று மாலை 6.25 மணிக்கு குவியம் செயலியில் கூட்டஅடையாளஎண்: 5047479361. கடவுச்சொல்: 444555 நிமிர் இலக்கிய வட்டம் முன்னெடுக்கும் கவியரங்கம் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் யாரும் இரண்டு நிமிடங்களுக்குள் 20அடிகளில் கவிதை பாட அனுமதியளிக்கப் படுகின்றது. பங்கேற்பாளர்களின் கவியரங்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கவிதையும்.. நானும் என்ற தலைப்பில் தனித்தமிழ்த் தென்றல் செ.மன்னர்மன்னன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். உலகத்தமிழர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க நிமிர் இலக்கியவட்டம் அன்புடன் அழைக்கிறது. இன்று மாலை 5.00 மணிக்கு குவியம் செயலியில் கூட்டஅடையாளஎண்: 3562722898. கடவுச்சொல்: mtsacademy பேராசிரியர். முதுமுனைவர். மருத்துவர் தெய்வத்திரு. கண்ணப்பன் அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பத்தாம் ஆண்டு நினைவுநாள் இலக்கிய நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள் விருது வழங்கும் நிகழ்வும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நிறைவு நிகழ்வாக பட்டிமன்றப் பேச்சாளர் திரு.எஸ்.ராஜா அவர்களின் ‘இலக்கணம் மாறுதோ’ எனும் தலைப்பில் சொற்பொழிவு அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க முனவைர்.வாசுகி கண்ணப்பன் அவர்கள் அன்பு அழைப்பு விடுத்துள்ளார்.