Show all

கடவுள் பகிரும் புலமைஆதாயத்தை, நீங்களும் பேரளவாகப் பெறமுடியும்

புலமைஆதாயம் என்றால் என்ன? அதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? கடவுள் எனக்கு புலமைஆதாயத்தை வழங்க நான் என்ன செய்ய வேண்டும்? என்கிற வினாக்களுக்கு விடையளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

28,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5126: 

ஆங்கிலத்தில், ராயல்டி என்று பேசப்படுகிற உடைமைஆதாயம் இரண்டு வகையாகும். அவற்றுள் ஒன்று அறிவுசார்சொத்துரிமை என்றும் மற்றொன்று பொருள்சார்சொத்துரிமை என்றும் புழக்கத்தில் உள்ளன. அறிவுசார்சொத்துரிமை என்கிற தலைப்பிற்கு புலமைஆதாயம் என்கிற தலைப்பே அடிப்படையாக சரி என்கிற காரணம் பற்றி, இந்தக் கட்டுரையில் புலமைஆதாயம் என்கிற தலைப்பே முன்னெடுக்கப்படுகிறது.

இயல்அறிவு {01} அடிப்படையில், பொருள்உடைமை ஆதாயம், புலமைஉடைமை ஆதாயம் ஆகிய இரண்டு ஆதாயங்களை, உரியவர்கள் (உடைமையாளர்கள்) பெற்று பயனடைவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு சட்டங்களையும் உரிமைகளையும் வழங்கியுள்ளன.

உலகின் இந்த இயக்கக் காரணம்பற்றி, நம் ஒவ்வொருவர் இயக்கத்திற்கும் முயக்கம் தருகிற கடவுளும், உடைமை ஆதாயத்தை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் கொண்டிருக்கிற உடைமை அடிப்படையில் பகிர்ந்து அளிக்கிறது.

நாவலந்தேயம் {02} என்கிற சொந்த நாடு இழந்து,  சொந்த மொழியான தமிழுக்கும் ஆட்சி அதிகாரம் இல்லாமல், கல்வி உரிமை, வரிவாங்கும் உரிமை போன்ற உரிமைகளை, அயல்மொழி ஆட்சியாளர்களின் ஒன்றிய ஆட்சிக்குப் பறிகொடுத்து, தம்பிள்ளைக்குச் சமஸ்கிருத பெயர்கள், ஆங்கிலவழிக்கல்வி, ஒன்றியப்பாடத்திட்டக் கல்வி என்று பேரளவாக அயல்இயல்களிலேயே நடப்புத் தமிழினம் உலா வருகிற காரணம் பற்றி, உலகிலேயே, 'உலக சமுக சட்டங்கள் உரிமை அளிக்கும் இருவகை உடைமைஆதாயத்தை' மிகமிக குறைவாகப் பெறுவது தமிழினம் என்பதைச் சட்டத்தரவுகள் நமக்குத் தெளிவாக அறிவிக்கின்றன.

உலகில் முதல் பத்து பணக்காரர்களில், தமிழினத்தில் இருந்து ஒருவரும் இல்லை.
உலகின் முதல் பத்து விளையாட்டு வீரர்களில், தமிழினத்தில் இருந்து ஒருவரும் இல்லை.
உலகில் முதல் பத்து பணக்காரர்களில், தமிழினத்தில் இருந்து ஒருவரும் இல்லை.
உலகில் முதல் பத்து ஆட்சியாளர்களில், தமிழினத்தில் இருந்து ஒருவரும் இல்லை.
உலகில் முதல் பத்து வணிகர்களில், தமிழினத்தில் இருந்து ஒருவரும் இல்லை.
உலகில் முதல் பத்து கலைஞர்களில், தமிழினத்தில் இருந்து ஒருவரும் இல்லை.
உலகில் முதல் பத்து படைப்பாளிகளில், தமிழினத்தில் இருந்து ஒருவரும் இல்லை.
உலகில் முதல் பத்து அறங்கூற்று ஆள்பவர்களில், தமிழினத்தில் இருந்து ஒருவரும் இல்லை.
மொத்தத்தில் உடைமையாளனாக உலகின் முதல் பத்தில் ஒற்றைத் தமிழனும் இன்றுவரை இல்லை.

அனால் உலகிலேயே, கடவுள் பகிரும் புலமைஆதாயத்தை, மிகமிகப் பேரளவாகப் பெறுவது தமிழினம் என்பதை, உலக வரலாற்றில் தமிழ்முன்னோர் உலகினருக்கு அளித்துள்ள அம்மா {03} அப்பா, திருமணம் {04} எண்கள் {05} போன்ற கொடைகள், தமிழ்முன்னோர் நிறுவிய மந்திரத்தரவுகள் ஆகியன நமக்குத் தெளிவாக அறிவிக்கின்றன. 

பல ஆயிரம் ஆண்டுகளாக, உலக மொழிகளில் தமிழ் ஒன்று மட்டுமே தனித்துவம் {06} பேண முடிகிற மொழியாக இருப்பதற்கும் காரணம், கடவுள் பகிரும் புலமை ஆதாயம் ஒன்று மட்டுமே ஆகும்.

தமிழே முதல் உடைமை {07} என்கிற தலைப்பில் மிகமிகக் குறைவாக ஈடுபடுகிற திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும், எந்த அமைப்பும் பேரளவாக 'கடவுள் பகிரும் புலமைஆதாயத்தை' பெறுவதை அவர்களின் தனிப்பட்ட திறமையாக பிழையாக எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

கடவுள் நம்மிடம் இருந்து பெறுகிற இயக்கத்திற்கு நம்மை முயக்குவது. அதனால், கடவுளில் இருந்து எதை வேண்டுமானாலும் கேட்டுப்பெற முடியும் {08} என்கிற உறுதியான உண்மையை, உலகில் தமிழினம் மட்டுமே நூறுவிழுக்காடு தெளிவாக நிறுவியுள்ளது.

இந்த உண்மைக்குக், கடவுள் தமிழினத்திற்கு மட்டுமே காப்புரிமையைப் பதிவு செய்து கொண்டுள்ளது.

கடவுள் {09} என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லில் பொதிக்கப்பட்ட பொருளில் உலகினர் யாரும் இன்றுவரை எந்தச் சொல்லையும் கொண்டிருக்கவில்லை. 

கடவுளில் இருந்து எதை வேண்டுமானாலும் கேட்டுப்பெற முடியும் என்கிற உறுதியான உண்மையை முதலாவது உலகினருக்குக் கொடுத்தது உலக மதங்கள் சாத்தான் {10} என்று அடையாளப்படுத்தி அஞ்சுகிற தமிழ்வணிகக் கூட்டமே. 

உலகின் அனைத்து தனிமனித வழிகாட்டிகளும், உலகின் அனைத்து மதங்களும், கடவுளை மிகமிக குறைந்த பகுதியாகப் புரிந்து கொண்டு பயணித்து வருகின்றன. 

ஒவ்வொரு கூட்டமும் அவர்கள் வழிகாட்டியால் மட்டுமே, கடவுளிடம் இருந்து நமக்கு எதையும் பெற்றுத்தரமுடியும் என்று கருதியிருக்கின்றார்கள். தங்களே கடவுளிடம் நேரடியாகக் கேட்டுப் பெறமுடியும் என்கிற தமிழ்முன்னோர் நிறுவலை அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.

கடவுளை நான் முழுமையாகக் புரிந்து கொண்டேன் என்று தமிழ்முன்னோர் நிறுவிய உண்மையைத் தலைப்பாக்கிக் கொள்கிற ஒவ்வொரு தமிழனுக்கும் கடவுள் பதிவு செய்து கொண்டுள்ள காப்புரிமை அடிப்படையில், அவர்கள் அனைவரும் (தனிமனித வழிகாட்டிகள் மற்றும் மதங்கள்) கடவுளிடம் இடம் இருந்து பெறும் அனைத்து வகைமைகளில் இருந்தும், நாமே கடவுளின் காப்புரிமைப் பதிவுக்கு சொந்தக்காரர்கள் என்கிற நிலையில், நமக்கான புலமைஆதாயத்தை கடவுள் பேரளவாக வழங்கமுடியும்.

அந்த வகைக்கு நீங்களும் கடவுளில் ஒரு பயனாளியாக, கடவுளில் உங்களுக்கான சொந்த இடத்தை {11} அமைத்து இயங்குங்கள். தெய்வங்களை {12} அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் அவற்றைக் கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியும் வாழ்த்தியும் நிறைகிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,222. 

இந்தக் கட்டுரையைத் தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்து கொள்ளவும், கடவுள் பகிரும் புலமை ஆதாயத்திற்கு உங்களைப் பதிவு செய்து கொள்ளவும், கீழே பட்டியல் இட்டுள்ள கட்டுரைகள் அனைத்தையும் கட்டாயம் படிக்கவே வேண்டும்.

{01}. இயல்அறிவு. அறிவியல். எது சரி? இடமாறு தோற்றப் பிழை வரிசையில்.

{02}. நாவலந்தேயம்.

{03}. அம்மாவை அழைக்கின்றன. அம்மா என்ற தமிழ்ச் சொல்லின் வேரடியாகவே! உலகின் அத்தனை மொழிகளும்

{04}. திருமணம் உலகிற்கு தமிழர் அளித்த கொடை!

{05}. நான்கு யுகங்கள், அவற்றின் பெயர்கள், கால அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது, தற்போது கலியுகம், இது 432000 ஆண்டுகள். அனைத்தும் உண்மையா?

{06}. பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது?

{07}. முதலாவது உடைமை

{08}. எல்லையில்லாத முன்னேற்றம்! எப்படிக் கிடைக்கும்?

{09}. கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே.

{10}. உலகம் அஞ்சிய சாத்தான் யாரென்று தெரிந்தால் வியந்து போவீர்கள்!

{11}. கடவுளிடம் உங்களுக்கு அமைந்த சொந்த இடத்தை எளிதாகப் பற்றிக் கொள்ள

{12}. தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் அவற்றைக் கொண்டாடுங்கள்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.