ஓம் என்ற பிரணவ மந்திரம் உண்மையில் தமிழா சமஸ்கிருதமா? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கூகுள் தேடலில் ஓம் என்று பதிவிட்டுத் தேடினால், 57 நொடிகளில் 41,80,000 முடிவுகள் கிடைக்கின்றன. அந்த முடிவுகளை ஓரளவிற்குப் படித்தாலே- ஒரு மனிதனுக்கு எந்தமொழியோ, அந்தந்த மொழிகளில் இருக்கிற எந்தவொரு சொல்லோ தேவையில்லை. ஓம் என்றே ஒற்றை சொல்லே போதும் என்கிற முடிவுக்கு வந்தால் பிழையாகாது. அந்த அளவிற்கு ஓம் என்ற சொல்லுக்கு பேரளவான மதிப்பீடு (மகத்துவம்) கற்பிக்கப்பட்டுள்ளது. மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். தமிழில் உள்ள எல்லாச் சொற்களும் பொருள்குறித்தனவே. மந்திரம் என்பது மன ஆற்றல். மனம் என்பது கடவுள் கூறு. மனம் கடவுளில் கேட்பது மந்திரம். நம் கேட்புக்கு கடவுள் ஒரு வேலையைக் கொடுக்கும் அதை முடித்துத் தருவது தவம். அவம் என்பது தவத்திற்கு எதிரான சொல். சமஸ்கிருதம், தமிழின் பெரிய என்ற சொல்லை பிர என்று ஒலிப்பாக்கம் செய்து பிர என்கிற முன்னொட்டில் பலநூறு சமஸ்கிருத சொற்களை உருவாக்கிக் கொண்டுள்ளது. அந்த வகையான ஒரு சமஸ்கிருதச் சொல்தான் பிரணவம். பிரணவம் என்பது பெரிய அவம் ஆகும். தமிழில் குறிஞ்சித் திணையொழுக்கம் என்று புழங்குகிற விடையத்தையே பிரணவம் என்கிறது சமஸ்கிருதம். ஆக குறிஞ்சித் திணையொழுக்கத்தை அவம் என்றே சுட்டுகிறது சமஸ்கிருதம். ஓம் என்கிற சொல்லுக்கு ஒப்புக் கொடுத்தல் என்று பொருள். தமிழில் ஓம் என்பதும் ஒரு பொருள் பொதிந்த சொல் என்கிற அளவினதே. ஓம் என்கிற சொல்லை பிரணவ மந்திரம் ஆக்கியதும், ஓம் என்கிற சொல்லுக்கு பேரளவான மதிப்பீடு கற்பித்ததும் சமஸ்கிருதமே. ஒரு தலைவி தலைவனிடம் ஓம் சொன்னால் அடுத்துத் தொடர்வது திருமணமும் குடும்பமும் ஆகும். ஒரு வழக்கறிஞரிடம் ஓம் சொல்லி வக்காலத்து படிவத்தில் ஒப்பம் இட்டால் அவரின் வாதத்திறமைக்கு ஏற்ப உங்கள் வழக்கு சாதகமாகவோ, பாதகமாகவே முடியும். ஒரு மத வழிகாட்டியிடம் ஓம் சொன்னால் உங்களுக்காக அவர் கடவுளிடம் மந்திரம் எழுத அவரை உங்கள் வாழ்க்கைக்கான வழக்கறிஞர் ஆக்குகின்றீர்கள் என்பது பொருள். ஒரு தலைவனிடம் ஒம் என்று ஒப்புதல் கொடுத்து திருமணமும் குடும்பமும் அமைந்தாலும், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு கடவுளோடு மந்திரம் ஓதி தவமியற்றும் கடமை பறிக்கப்பட மாட்டாது. இந்த ஓம் என்கிற ஒப்புதலை உங்கள் தலைவிக்குக் கொடுத்தால் அது பிரணவம் (தவமல்ல் பெரிய அவம்) எங்களுக்குக் கொடுத்தால் முன்னேற்ற மந்திரம் என்கின்றனர் சமஸ்கிருத மத வழிகாட்டிகள். ஓம் என்கிற மந்திரத்தை உங்கள் தலைவியைத் தவிர்த்து தலைவனைத் தவிர்த்து வேறு எங்கும் பயன் படுத்த வேண்டாம். மற்ற எங்கும் பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரத்தால், நீங்கள் பாடாற்ற வேண்டிய கடவுளோடான தவத்தை முடித்துக் கொள்ள வேண்டாம். என்கிறது தமிழ். கூகுள் தேடலில் ஓம் என்று பதிவிட்டுத் தேடினால், கிடைக்கிற 57 நொடிகளில் 41,80,000 முடிவுகள்- கடவுளோடு நீங்கள் நேரடியாக தவமியற்றுவதை பறிப்பதற்கான, அயலியல் சார்ந்த அறிவுறுத்தல் ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,483.