Show all

மன்னிப்பு என்கிற சொல்லுக்கு நேரான சொல் ஏன் தமிழில் உருவாக்கப்படவில்லை

மன்னிப்பு தமிழ்ச்சொல் இல்லையா? மன்னிப்பு என்கிற சொல்லுக்கு நேரான சொல் ஏன் தமிழில் உருவாக்கப்படவில்லை. என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு ஆம்! மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அன்று. மன்னிப்பு என்கிற சொல்லில் பொதிக்கப்பட்ட பொருளில் ஒரு தமிழ்ச்சொல்லை ஆக்குவதற்கான தேவை தமிழ்முன்னோருக்கு எழவில்லை. என்று தெரிவித்து, தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126:

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் ஒவ்வொரு தனி மனிதனையும்- ஆதார் எண், பல்வேறு துறைகள், துறை அதிகாரிகள், காவல்துறை, மூன்று நிலை அறங்கூற்று (நீதி) மன்றங்கள் என்று, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் குற்றப்பின்னனியைக் கட்டுமானம் செய்வதற்கு கண்காணித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த அமைப்புகள்- இலஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள் இலஞ்சம் கொடுத்தேன் விட்டு விட்டார்கள் என்று ஒரு யாப்பு (புதுக்கவிதை) பகடியாடுவதற்கு உரித்தான நிலையில், யாரையும் (அதிகாரிகள், அதிகாரத்துறைகள்) விட்டுவைக்கமால் ஒவ்வொரு மனிதனுக்கும் குற்றப்பின்னனியைக் கட்டுமானம் செய்கிற நோக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உலக மதங்களும்- பாவம், புண்ணியம், கர்மா என்கிற தலைப்புகளில் ஒவ்வொரு தனி மனிதனையும் பிணைத்து அவனுக்குப் பாவமன்னிப்பு தம் மதங்களால் தரமுடியும் என்று ஒவ்வொரு தனி மனிதனுக்கும் குற்றப்பின்னனியைக் கட்டுமானம் செய்கின்றன.

பிரம்மணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், ஐரோப்பிய இயல்அறிவு (சயின்ஸ்), மார்க்சியம், திராவிடம் என்கிற எந்த அயலியல்களும் நுழைந்திராத தமிழ்த்தொடராண்டு 1400க்கு முன்பு, நாவலந்தேயம் என்கிற பெயரில் அமைந்திருந்த இந்தியாவில், முற்றாக தமிழ்முன்னோர் மட்டுமே வாழ்ந்திருந்தனர். அநதத் தமிழ் மண்ணில் எல்லா மனிதனுக்கும் சான்றாண்மை பின்னனியே பேணப்பட்டு இருந்தது.

அறிதோறு அறியாமை கண்டற்றால் என்று பேசுவதில், தவறு அறியாமையின் பாற்பட்டது என்று நிறுவுகின்றனர் தமிழ்முன்னோர். அது அறிநிலையில் தானாகக் காணாமல் போவது, அந்தத் தவறை அடையாளப்படுத்த முயன்றால் குற்றம் உருவாகிறது, என்று தெளிவாகப் புரிந்திருந்தனர் தமிழ்முன்னோர். 

அதனாலேயே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சான்றாண்மைப் பின்னனியை உருவாக்க முயன்றனர் தமிழ்முன்னோர். அதற்கு தமிழினம் போற்றியிருந்த தலைப்பு பொறை மற்றும் பொறையுடைமை ஆகும்.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சான்றாண்மைப் பின்னனியை உருவாக்கும் வகைக்கு- பொறையுடைமை என்கிற தலைப்பில் பத்து குறள்களைக் கொண்டுள்ளது திருக்குறள்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151  
தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகப் புவியின் சான்றான்மையை மனிதனும் பேண வேண்டும் என்கிறது இந்தக் குறள். 

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. 152   
ஒருவர் செய்த தீங்கை அது இறந்தே விட்டதே என்று, எப்போதும் அதனை நினையாமலே மறந்தே விடுதல் வேண்டும் என்று, தவறு செய்தவனை சான்றான்மையாளனாக்க அவன் செய்த தவறை இறக்கச் செய்ய வேண்டும் என்கிறது இந்தக் குறள்.

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. 153  
விருந்தைப் போற்றாமல் விடுவது வறுமையை விட வறுமை என்பதைப் போல, வலிமையுள்ளும் வலிமையாவது அறியாமையின் பாற்பட்ட தவறை பொறுத்தல் ஆகும். வலிமை தவறை தண்டிப்பதில் இல்லை, தவறைப் பொறுத்துக் கொள்வதில் என்கிறது இந்தக்குறள்.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும். 154 
நிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும். என்கிறது இந்தக் குறள். 

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 155  
தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார்;. ஆனால், பொறுத்தவர்களைப் பொன்போற் பொதிந்து வைப்பார்கள் என்று சான்றாண்மையை போற்றுகிறது இந்தக் குறள். 

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். 156  
தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் உண்டு என்கிறது இந்தக் குறள்.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. 157  
தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நல்லது என்கிறது இந்தக் குறள்.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.  158 
செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்று விட வேண்டும் என்கிறது இந்தக் குறள்.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159  
எல்லை மீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், தூய்மையாளர் ஆவர் என்கிறது இந்தக் குறள்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.  160 
உணவு உண்ணாமல் நோற்பவரைக் காட்டிலும், பிறர் கொடுஞ்சொற்களைப் ஏற்காமல் நோற்பவரே பெரியவர் என்கிறது இந்தக் குறள். 

ஒவ்வொருவரையும் குற்றப்பின்னனியில் நிறுத்தி, ஒவ்வொருவராக வந்து அரசிடமோ, ஆண்டவனிடமே பாவ மன்னிப்புக் கோருங்கள் என்று மக்களை அழைக்கிற கருத்தியலே உலகினர் கொண்டாடும் மதங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளாக இருக்கிறது. அதையே இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் பேணி வருகிறது.
ஒவ்வொரு தனிமனிதனுக்கும், சான்றாண்மைப் பின்னனி பேணிட- அறியாமையில் செய்த தவறை இறக்கச்செய்து மறந்து விடுங்கள் என்று அரசு, ஆண்டவன், உடன் மனிதர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துவது தமிழியல்.

ஒவ்வொரு தனி மனிதனையும்- ஆதார் எண், பல்வேறு துறைகள், துறை அதிகாரிகள், காவல்துறை, மூன்று நிலை அறங்கூற்று (நீதி) மன்றங்கள் என்று, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் குற்றப்பின்னனியைக் கட்டுமானம் செய்வதற்கு கண்காணித்துக் கொண்டிருக்கிற இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் மாற்றம் கொணர

ஒவ்வொருதனி மனிதனையும் குடும்பத்தில் வைத்துப் பேணுவதும், அரசின் ஆதயங்களை வழங்கிக் கொண்டிருப்பதுமான குடும்ப அட்டை சரி. ஒவ்வொரு தனிமனிதனையும் குற்றப்பின்னணி அடையாளத்திற்கு பயன்படுத்தும் ஆதார் நூறுவிழுக்காடு பிழை.

உற்பத்திக்கு விதிக்கிற வரிகள் சரி. ஆனால் பணத்தின் மீது தீண்டாமையைப் பயிற்றுவிக்கும் நோக்கத்திற்கு பயன்பட்டுவரும் வருமான வரியும் அதற்கான துறைகளும், கருப்பு பணம் என்கிற பாடுகளும், வரிஏய்ப்பு குற்றச்சாட்டுகளும், அதற்கான தளங்களும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் குற்றப்பின்னணி பேணும் வகைக்கானவைகளே. அவைகள் நூறுவிழுக்காடு பிழை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,045.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.