Show all

இந்து மதம் அறம் அறிவியல் சார்ந்த மதமா? ஏன்? விளக்கமாகக் கூறவும்

இந்து மதம் அறம் அறிவியல் சார்ந்த மதமா? ஏன்? விளக்கமாகக் கூறவும், என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. உலகில் எந்த மதமும் அறம் சார்ந்தது அல்ல. இயல்அறிவு அடிப்படை மதத்திற்குப் பொருந்தது என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை. 

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 
இயல் என்றால் 
இயமும் இயக்கமும் ஆகும்.
இயம் என்பது கோட்பாடு.
இயக்கம் என்பது நடைமுறை.
இயல் உடையதை இயற்கை என்று தெரிவிக்கிறது தமிழ்.
ஆக இயற்கை என்பது, கோட்பாடும் நடைமுறையும் உடையவைகளின் தொகுப்பு.

இத்தனைத்தெளிவு காரணம் பற்றியே, தமிழில் உள்ள எல்லாச் சொற்களும் பொருள் பொதிக்கபட்டவை என்கிறார் தொல்காப்பியர்.

ஆக இயற்கையின் அனைத்தின் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் பற்றிய ஒட்டுமொத்த அறிவுத் தொகுப்பை இயல் என்கிறது தமிழ். இயலை வெறுமனே இயல் என்று சொல்லாமல் இயற்றமிழ் என்கிறது தமிழ்.

ஆங்கிலத்தின் சயின்ஸ், என்கிற தலைப்பும் இயற்கையின் அனைத்தின் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் பற்றிய ஒட்டுமொத்த அறிவுத் தொகுப்பை குறிப்பதற்கான சொல் ஆகும்.

ஆக இயல் என்கிற சொல்லின் ஆங்கில வடிவமே சயின்ஸ் ஆகும். ஆங்கிலத்தின் சயின்சை மலைத்து அதை அறிவியல் என்று தமிழ்படுத்துகிற போது மேற்சொன்ன ஒட்டுமொத்த தமிழ் அடிப்படையையும் ஐரோப்பிய மலைப்பில் ஆழக்குழிதோண்டி புதைத்துவிடுகிறோம்.

ஆக உங்கள் கேள்வி, ஹிந்து மதம் இயல்அறிவு (இயல்) அடிப்படையானதா? என்று அமைந்திருக்க வேண்டும்.

அடுத்து ஹிந்து மதத்தை இந்து மதம் என்று தலைப்பிடுவது வரலாற்றுப் பிழைக்கான முன்னெடுப்பாகும்.

தமிழர்தம் பொருள் (வாழ்க்கை) இலக்கணத்தில் அகன்ஐந்திணையின் உரிப்பொருட்களில் பேசுகிற கடவுள் இறை தெய்வம் என்கிற மூன்றின் மீதும் பேரளவான கற்பனைகளை கட்டி உருவாக்கப்பட்டதே அந்த ஹிந்து மதம் ஆகும். 

தமிழர்தம் பொருள் இலக்கணம் என்கிற வாழ்க்கை இலக்கணம் இயல் (இயல்அறிவு) அல்ல. கணக்கு (இயல்கணக்கு) ஆகும்.

வாழ்க்கையில் கணக்கு (இயல்கணக்கு) அடிப்படையைத்தான் தேட முடியும். இயல் (இயல்அறிவு) அடிப்படையைத் தேட முடியாது. எனெனில் வாழ்க்கை முயற்சியால் முன்னெடுக்கப்படுவது. ஆகவே வாழ்க்கையை முயற்சியின் அடிப்படையில் கணிக்க முடியுமே அன்றி கோட்பாடு நடைமுறையாக (இயல்) நிறுவிட முடியாது.

இயல்கணக்கு அல்லது இயல்கணிப்பு உலகின் தமிழர் மட்டும் முன்னெடுத்து நிறுவிய முன்னேற்றக் கலைகள் ஆகும்.

தமிழ்முன்னோர் இயல்கணிப்பு அடிப்படையில் நிறுவியுள்ள கலைகள் மூன்று ஆகும்.
அவைகள்

1.சாததகம் சோதிடம் என்கிற நிமித்தகம். இதற்கு நாற்பது மதிப்பெண்களே.

2.கணியம் நிமித்தகத்தின் மேம்பட்ட கணியத்திற்கு அறுபது மதிப்பெண்கள்.

3.மந்திரம் கணியத்தின் மேம்படுத்தப்பட்ட மந்திரம் கற்றலுக்கு எண்பது மதிப்பெண்கள், கற்றல் வழி நிற்றலுக்கு நூறு மதிப்பெண்கள் ஆகும்.

ஹிந்து மதம் மட்டுமல்ல உலகின் எந்தமதமும் தமிழ்முன்னோர் மட்டுமே நிறுவியுள்ள இயல்கணக்கின் தெளிவான அடிப்படையில் கட்டமைக்கப்பட்டவைகளோ, பொருந்தியவைகளோ அல்ல. 

அடுத்து உங்கள் வினாவில் ஹிந்து மதம் அறம் சார்ந்ததா? என்கிற குறிப்பும் இடம் பெறுகிறது. அறம் என்பது- ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் கடவுளின் முயக்தத்திற்காக தங்கள் தலையெழுத்தை தாங்களே எழுதிக் கொள்கிற சட்டம் அல்லது விதி ஆகும்.

தமிழின் முழுமையான முன்னேற்றக்கலையான மந்திரம் உங்களுக்கான தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்வதற்கான கலையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகினரின் மதங்கள்- அந்தந்த மத வழிகாட்டிகளுக்கு உங்களை ஒப்புக்கொடுத்து அவர்கள் வரிசைப்படுத்தும் வகையில் நீங்கள் முன்னேற்றம் அடைவது வழிகாட்டியின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஆக உலகின் எந்த மதமும் அறம் சார்ந்ததும் அல்ல. நீங்கள் வழிகாட்டிகளுக்கு உங்களை ஒப்புக் கொடுத்துவிட்டு அவர்கள் முன்னெடுக்கும் நீட் மாதிரியான தேர்வுத்தடைகளைத் தாண்டிக்கடக்க நீங்கள் போராட வேண்டியிருக்கிற மறம் ஆகும்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,688.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.