வடக்கில் தலை வைத்து படுப்பது தவறு என்று ஏன் கூறுகிறார்கள்? என்று, வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, ஆம் தவறுதான்! என்று, அதற்கான தமிழ்முன்னோர் அடிப்படையை தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. இந்த வகையால் இடம் மூன்று நிலைகளை எய்துகிறது. 1.வெளி, 2.விண்வெளி, 3.விசும்பு என்பதாக. முதலெனப்படுவதில் சுட்டப்படுகிற காலம்- குறித்த எண்ணிக்கையில், மிக மிக நுட்பமான, தான்தோன்றி இயக்கம் உடைய, எல்லை உடைய, தனி ஒன்றுகள் ஆகும். மின்சாரத் தயாரிப்பில் பயன்படுவதும், நடப்பில் பெரும் பயன்பாட்டில் உள்ளதுமான காந்தம்- தனிஒன்றுகளிலும் அமைந்திருக்க முடியும். தனி ஒன்றுகளின் இயக்கதிசையில் இடப்பக்கமாக வட விகற்ப, வலப்பக்கமாக தென் விகற்ப (துருவ) காந்தப்புலன் அமைந்திருக்கும். தனி ஒன்றுகள், இரண்டு நான்கு என்று பல்வேறு கூட்டியக்க அணிசேரலில் உருவான நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களிலும் அது பாடாற்றியிருக்க முடியும். ஆகவே, தனி ஒன்றுகள் தொடங்கி, அதன் கூட்டிய அணிகளான நிலம் நீர் தீ காற்று என்கிற நாற்திரங்கள், கோள்கள் விண்மீன்கள், கோள்களில் ஒன்றான புவி, புவியில் அமைந்த உயிரிகள், உயிரிகளில் ஒன்றான அறறிவு மனிதன் வரை அனைவருக்கும் காந்த ஆற்றல் இயல்பானது. நாம் வாழும் புவியானது மேற்கிலிருந்து கிழக்காக இயங்குகிறது என்பதை மேல் கீழ் என்று சொற்களிலேயே பொருள் பொதித்துள்ளனர் தமிழ் முன்னோர். புவி ஒரு காந்தம் என்பதையும், புவியின் வடக்கை வடவிகற்பம் என்றும், தெற்கை தென் விகற்பம் என்றும், இயல்அறிவும் (சயின்ஸ்) தெளிவாக நிறுவியுள்ளது. மேற்கிலிருந்து கிழக்காக பயணிக்கிற புவியை மனித இயக்கத்தோடு பொருத்தி, மேற்கு என்பது உடல் இயக்கத்தின் தொடக்கம் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். அதேபோல புவிக்கும் மனிதனுக்கும் அமைந்த காந்த ஆற்றல் அடிப்படையில் வடக்கு உயிர் இயக்கத்தின் தொடக்கம் என்று கருதியிருந்தனர் தமிழ்முன்னோர். அதனாலேயே வடக்கில் அமைந்த இமயமலை என்கிற சொல்லில் இம்மை அல்லது இந்தப் பிறப்பு என்கிற வேர்சொல்லை அமைத்துள்ளனர். இயக்கம் பெற்று முயக்கும் வெளியின் மூன்றாவது நிலையான விசும்பு- வான்காந்தமும், மனிதன் ஒரு உயிர்க்காந்தமும் ஆவார்கள். அதை சமஸ்கிருதம் ஜீவகாந்தம் என்று மொழிபெயர்த்துக் கொண்டது. மனித இயக்கத்தில் அவனுடைய தலைப்பகுதி இடமாகவும் கால்பகுதி வலமாகவும் அமைகிற நிலையில், மனிதனுடைய தலைப்பகுதி வடவிகற்பம் ஆகும். மனிதனுடைய கால்பகுதி தென் விகற்பம் ஆகும். ஆக புவியும் புவியல் வாழும் மனிதனும் காந்த ஆற்றல் பெற்றவர்கள் என்கிற நிலையில், மனிதனின் இரவுத் தூக்கத்தில் அவன் புவியில் எவ்வாறு பொருந்தியிருந்தால் காந்தஆற்றல் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்கிற ஆய்வுக்குத் தேவை எழுகிறது. இரண்டு காந்தங்களை, அவைகளின் காந்த ஆற்றல் இழக்காவகைக்கு வைத்திருக்க, ஒன்றின் வட விகற்பத்தோடு மற்றதன் தென் விகற்பம் பொருந்தியிருக்குமாறு வைக்கிற நிலை இயல்அறிவில் (சயின்ஸ்) பேணப்பட்டு வருகிறது. ஆகவே மனிதனின் இரவுத் தூக்கத்தில் அவன் புவியில் எவ்வாறு பொருந்தியிருந்தால் காந்தஆற்றல் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்கிற ஆய்வு அடிப்படையில் மனிதன் தெற்கில் தலைவைத்துப் படுப்பது முறையான காந்தஆற்றல் பேணல் என்றும், வடக்கில் தலையை (வடக்கை) வைத்துப் படுப்பது பிழையான காந்தஆற்றல் பேணல் என்றும் தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர்.
முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். இடம் என்பது வெளி ஆகும். அதற்கு எல்லையோ, தான்தோன்றி இயக்கமோ கிடையாது. ஆனால் இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற காலத்தால், இடம்இயக்கம் பெற்று, இயக்கம்பெற்ற வகைக்கு காலத்தை முயக்குகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,676.