வேறு ஒரு களத்தில், இராமன் எனும் கடவுள் என்று நம்பப்படும் ஒருவர் இருந்தார் என்பதற்கு வரலாறு, தொல்லியல் சான்று உள்ளதா, என்று கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5126: கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே. தெய்வங்கள் மூன்று வகைப்படும். கடவுள்கூறு தெய்வங்களும், இறைக்கூறு தெய்வங்களும் உருவகங்களே. அவைகள் உயிரிகளோ, வாழ்ந்திருந்த மனிதர்களோ அல்ல. குலதெய்வம் மட்டுமே வாழ்ந்த மனிதர்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இராமன் வாழ்ந்த மனிதன் இல்லை. ஆகவே இராமன் யாருக்கும் குலதெய்வம் இல்லை. பிராமணர்களுக்கு குலதெய்வ வழிபாடு கிடையாது. முல்லைத்திணை இறைக்கூறு தெய்வம் மாயோனை தங்கள் தெய்வமாக்க பிராமணர்கள் உருவாக்கிக் கொண்ட கற்பனைப் படைப்பே இராமன். கம்பராமாயணத்தை எழுதிய கம்பருக்கு சமஸ்கிருதம் தெரியவே தெரியாது. வான்மீகியால் வடிக்கப்பட்ட பிராமணிய இராமாயணமும் கம்பர் அறியமாட்டார். இராமயணம் வடிக்கப்பட்ட காலக்கட்டத்தில் பிரமாணர்கள் பேசிவந்த எந்தமொழிகளும் எழுத்தைக் கொண்டிருக்க வில்லை. கம்பர் காலத்தில் ஆரியக்கூத்து ஆட வந்த பிரமாணர்களிடம் இருந்து பெற்ற வான்மீகி இராமயணத்தை விரிவாக படைத்தளித்தார் கம்பர். கடவுள் குறித்தும், தெய்வம் குறித்தும் தமிழ்முன்னோர் நிறுவியிருந்த அடிப்படைகளை விரிவாகப் புரிந்து கொள்ள பின்வரும் மூன்று கட்டுரைகள் பேரளவாக உதவும்;. 1. கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே. 2. நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு! நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு 3. தேவன், தெய்வம், கடவுள், இறை, ஆண்டவன், சாமி மற்றும் கர்த்தர் ஆகிய சொற்களின் வரையறை என்ன?
கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லில் தமிழ்முன்னோர் பொதித்த பொருளில் உலகில் எந்த மொழியும் சொல் கொண்டிருக்கவில்லை.
கடவுள் ஆண்பாலோ பெண்பாலோ அன்று. அது ஒன்றன்பால். கடவுள் ஆற்றல் மூலம்.
கடவுள்கூறு தெய்வங்கள்
இறைக்கூறு தெய்வங்கள்
குலதெய்வங்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,215.