சாத்தனார் என்பது தமிழ்வணிகர்களைக் குறிக்கும் பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். தங்கள் தெய்வத்திற்கு எதிரானது என்று உலகம் அஞ்சிய சாத்தான் வேறு யாருமன்றுளூ அந்தத் தமிழ்வணிகர் கூட்டமே என்று நிறுவதற்கு பேரளவான தரவுகள் உண்டு. என்று தெரிவிக்கும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. 09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126: சாத்து என்னும் வணிகர் கூட்டத்தின், ஒவ்வொருவரையும் சாத்தனார் என்கிற சொல்லால் அழைத்திருந்தனர் தமிழ்முன்னோர். பெரும்பெயர்ச் சாத்தன் எனப் போற்றப்படும் பாண்டியன் கீரஞ்சாத்தன்- தமிழ்ப்புலமை, போரியல் வல்லமையோடு, கப்பல் செலுத்தி கடலோடும் வணிகத்திலும் சிறப்பாகப் பாடாற்றியவன். அவர்தம், வணிகத்தில் தான் ஈட்டிய பொருள்களைத் தமிழ்மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகவும், விளங்கினார் என்பதை புறநானுற்றுப்பாடல் 178 பேசும். வல்வேல் சாத்தன் எனப் போற்றப்பட்ட ஒல்லையூர் கிழர் மகன் பெருஞ்சாத்தனை புறநானுற்றுப்பாடல் 242 பேசும். அறப்பெயர்ச் சாத்தன் எனப் போற்றப்பட்ட சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் வானம் வறண்டுபோன காலத்தில் உதவிய வள்ளல் என்று புறநானுற்றுப்பாடல் 395 பேசும். தொல்தமிழ்மன்னில், ஒவ்வொருவரும், போரியல் வல்லனாகவும், தமிழ்தெளிந்த புலவனாகவும், கடலோடிய சாத்தனாகவும். தமிழ்முன்னோர் நிறுவிய மந்திரக் கலையில் வல்லவர்களாகவும, விளங்கியிருந்த காரணம் பற்றியே உலகினர், தமிழ்வணிகர்களாக தம்மோடு தொடர்பில் வருகிற சாத்தனார்கள் அவர்கள் நாட்டு மக்களை அறிவைக் கொண்டாடும் மாண்பாளர்களாக ஆக்கிவிடுவார்கள் என்றும், தங்களைப் படைத்துக் காப்பதாகக் கருதியிருந்த வழிபாட்டு மூலத்திற்கு எதிராக பயணிக்கச் செய்து விடுவார்கள் என்றும் அஞ்சினர். நம்முடைய மண்ணில் இன்னும் பல சாத்தனார்கள். 1. உலகின் முதல் கடலோடியாக அமைந்து, உலகினருக்கு கடலோடி வணிகமாற்றும் ஆர்வத்தை வழங்கியவர்கள் உலகினர் சாத்தான் என்று அஞ்சியிருந்த தமிழ்வணிகர் கூட்டமே. 2. உல்டு என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு மூலம்- உலகு என்கிற தமிழ்ச்சொல்லே. அதை உலகினருக்கு கொண்டு சேர்த்தவர்கள் உலகம் அஞ்சியிருந்த சாத்தன் என்கிற இந்தத் தமிழ்வணிகர் கூட்டமே. 3. நடப்பில் உலகினர் எழுதிக் கொண்டிருக்கிற எண்கள் தமிழ் எண்களே. அதை உலகினருக்கு கொண்டு சேர்த்தவர்கள் உலகம் அஞ்சியிருந்த சாத்தன் என்கிற இந்தத் தமிழ்வணிகர் கூட்டமே. 4. உலகில் அனைத்து மொழிகளுக்கும் அம்மா, அப்பா என்கிற உறவு கொண்டாடத்தக்கது என்று அறிவுறுத்தியதும் சொற்களை வழங்கியதும் தமிழே. அதை உலகினருக்கு கொண்டு சேர்த்தவர்கள் உலகம் அஞ்சியிருந்த சாத்தன் என்கிற இந்தத் தமிழ்வணிகர் கூட்டமே. 5. உலகினருக்கு ஞாயிறு, திங்கள் என்கிற கிழமைகள் வழங்கியது தமிழ்முன்னோர் நிறுவியிருந்த முன்னேற்றக்கலை- சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகமே. அதை உலகினருக்கு கொண்டு சேர்த்தவர்கள் உலகம் அஞ்சியிருந்த சாத்தன் என்கிற இந்தத் தமிழ்வணிகர் கூட்டமே. 6. ஆங்கிலத்திற்கு பலதுறைகளையும் ஒவ்வொரு துறை சார்ந்த சொற்களையும் உலகினருக்கு கொண்டு சேர்த்தவர்கள் உலகம் அஞ்சியிருந்த சாத்தன் என்கிற இந்தத் தமிழ்வணிகர் கூட்டமே. அந்தச் சொற்களில் சில: காசு, அப்பம், கயிறு, குருந்தம், நாவாய், கீறல், கறி, கடி, கிடங்கு, இட்டவி, கபடி, முல்லைத்தீவு, மல், பந்தல், புங்கை, அப்பளம், பூவரசு, எறா, பொரை, துத்தநாகம், வழி, விழை. 7. தமிழ்முன்னோர் நிறுவியிருந்த முன்னேற்றக்கலைகளில் நான்காவதாக கணியத்தின் மூலமே நியுமராலஜி. அதை உலகினருக்கு கொண்டு சேர்த்தவர்கள் உலகம் அஞ்சியிருந்த சாத்தன் என்கிற இந்தத் தமிழ்வணிகர் கூட்டமே. தமிழ்வணிகர்கள் தங்கள் கடலோடும் திறமையை, அயலவர்களுக்கு விளக்கும் போது, அன்றைய தமிழ்மண்ணில் பேரளவாக புழக்கத்தில் இருந்த இலக்கியம், காப்பியம், நிமித்தகம், கணியம், மந்திரம் என்கிற ஐந்து முன்னேற்றக்கலைகளான இயல்கணக்கையும் கற்றுக் கொடுத்தார்கள். தமிழ்வணிகர்கள் இந்தக் வகைக் கல்வியை இலவயமாக கொடுத்தாலும், தமிழ்வணிகர்கள் தங்கள் நாட்டை கொள்ளையிட்;டுச் செல்வதாக, எகிப்தின் அறிஞர் தாலமி புலம்பியதும், மதங்கள் தமிழ்வணிகர்களை சாத்தான் என்று உருவகித்து அஞ்சியதும் ஒருசேர அரங்கேறியது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று பேசிய தமிழ்வணிகர்களை மதங்களுக்கு எதிரியாக சாத்தான் என்கிற தலைப்பின் மீது அச்சம் ஊட்டினர். சாத்தான் தங்களைப் படைத்துக் காக்கும் தெய்வத்திற்கு எதிராக அறிவுக் கனியை மக்களுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினர். அதன்பொருட்டே மகமதியம் இப்படி பேசுகிறது, தமிழ்வணிகர்களைச் சாத்தான் ஆக்கி: ஆனால் சைத்தான் (சாத்தான்) என்று கூறப்படுகின்ற இப்லீஸ் ஆதமுக்குச் சிரம் தாழ்த்தவில்லை. தவிர, நீ அவரை மண்ணிலிருந்து படைத்தாய். என்னையோ நெருப்பிலிருந்து படைத்தாய். நான் அவருக்குச் சிரம் பணிவதா என்றும், நான்தான் பெரியவன் என்றும் ஆணவம் கொண்டான். அதனால் இறைவனின் வெறுப்பால் பூமிக்கு விரட்டியடிக்கப்பட்டான். பிறகு இறைவன் ஆதமுடைய விலா எலும்பிலிருந்து அவருக்கு ஹவ்வாவைப் படைத்தான். ஆதமே இந்த சுவர்க்கத்தில் எதை வேண்டுமானாலும் உண்ணுங்கள். ஆனால் அந்த மரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் இருவரும் அந்த மரத்தின் பழத்தைச் சைத்தானின் அறிவுறுத்தலுக்கிணங்கிச் சுவைத்து இறைவனின் கட்டளையை மீறினர். அதனால் அவர்கள் இருவரும் பூமிக்கு அனுப்பப் பட்டார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் தாம் செய்த பாவத்திற்காக இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்டார்கள். அவர்களுக்கு ஹாபில், காபில் என்ற இரு மகன்களும் அவர்களின் இரட்டைச் சகோதரிகளும் இருந்தனர். கிறித்துவம் இப்படி பேசுகிறது, தமிழ்வணிகர்களைச் சாத்தான் ஆக்கி: ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறியவுடன் ஆதாம் வேலை செய்து ஏவாளுக்கு உணவு வழங்க வேண்டியதாயிற்று. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காயின், ஆபேல், சேத் என்ற மகன்கள் பிறந்ததாகத் தொடக்க நூல் (ஆதியாகமம்) கூறுகிறது. ஆதாம் மேலும் பல குழந்தைகளைப் பெற்றதாகவும் விவிலியம் கூறுகின்றது. ஆதாம் 930 வருடங்கள் பூமியில் வாழ்ந்ததாகவும் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளது. உலகளாவிய தமிழின வரலாற்றை, உலகளாவி தமிழினம் குறித்து கிடைத்திருக்கிற அனைத்து ஆவணங்களையும் ஆய்வதற்கு, உலக இனங்கள் முன்வந்தால் இந்தக் கட்டுரையில் சொல்ல முனைந்துள்ள அனைத்துக் கருத்துக்களையும் கூடுதல் ஆதாரங்களோடு நிறுவ முடியும்.
அழிசி நச்சாத்தனார்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆலம்பேரி சாத்தனார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஒக்கூர் மாசாத்தனார்
கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர்ச் சேரமான் சாத்தன்
கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
சாத்தனார்
சீத்தலைச் சாத்தனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
பிரான் சாத்தனார்
பெருஞ்சாத்தனார்
பெருந்தலைச் சாத்தனார்
பெருந்தோள் குறுஞ்சாத்தன்
பேரிசாத்தனார்
மோசி சாத்தனார்
ஆதாமை முதல் மனிதனாகவும், முதல் நபியாகவும், அவ்வாவின் (ஏவாளின் அரபு வடிவம்) கணவன் எனவும் குறிப்பிடுகிறது. இறைவன் தன் அற்புதம் என்னும் கரங்களால் முதல் மனிதர் ஆதமைப் படைத்தான். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். மற்ற அனைத்துப் படைப்புகளையும் அவருக்குச் சிரம்பணியுமாறு கட்டளை இட்டான். அதன்படியே வானவர்கள் மற்றும் அனைத்துப் படைப்புகளும் ஆதமுக்குச் சிரம் பணிந்தன.
கிறித்துவம் கொண்டாடும் வகைதெய்வம்- ஆதாமை, தனது சாயலில் படைத்து அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஆதாம் உலகின் எல்லா உயிரினங்களுக்கும் பெயரிடுமாறு தெய்வத்தால் அனுமதிக்கப்பட்டான். பின்பு தெய்வம் அவனது விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தார். ஆதாம் எல்லா மனிதருக்கும் தாயானவள் என்று பொருள்படும்படி அவளுக்கு ஏவாள் எனப் பெயரிட்டான். அவர்கள் சாத்தானின் அறிவுறுத்தலால், தெய்வத்தின் கட்டளையை மீறி, அவரால் தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் பறித்து உண்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,173.