Show all

யார் சிறப்பாக வாழ்கிறார்கள்?

சிறப்பாக வாழாதவர்கள் எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கிறார்வர்களாக இருக்கிறார்கள். இந்த புலம்பல்காரர்களின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு, 'கெட்டவர்கள் செழித்து வாழ நல்லவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்' என்கிற கேள்வியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.

18,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: உங்களுக்கு இது வரை கிடைத்திருந்தது எல்லாம், நீங்கள் கேட்டது மட்டுமே என்கிறது தமிழ்முன்னோர் முன்னெடுத்துள்ள மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரம்.

ஆக சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்- நான் சிறப்பாக வாழவேண்டும் என்று கேட்டவர்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

சிறப்பாக வாழாதவர்கள் எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கிறார்வர்களாக இருக்கிறார்கள். இந்த புலம்பல்காரர்களின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு, 'கெட்டவர்கள் செழித்து வாழ நல்லவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்' என்கிற கேளவியே ஆகும். இதையே கடவுளிடம் தொடர்ந்து இவர்கள் கேட்டுக் கொண்டிருந்தால், கடவுள் என்ன செய்ய வேண்டும்? கெட்டவர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கெடுக்க வேண்டும். 

கடவுள் யாரைக் கெட்டவர்கள் என்று கண்டுபிடித்து, எப்படிக் கெடுக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் மோடியைக் கெட்டவர் என்கிறோம். வடநாட்டுக்காரர்கள் மோடியை இந்திய தலைமைஅமைச்சர் ஆக்கி அழகு பார்க்கிறார்கள். இது புலம்பல்காரர்கள் கடவுளுக்குத் தரும் அறநெருக்கடி இல்லையா? 

புலம்பல்காரர்களைப் பற்றி கடவுள் என்ன புரிந்து கொள்கிறது? இவர்களுக்குப் புலம்பிக் கொண்டேயிருக்கும் வகைக்கு ஏதாவது சிக்கலைக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் போல. சரி! சிக்கலைக் கொடுப்போம் என்று புலம்பல்காரர்களுக்கு கடவுள் சிக்கலையே தொடர்ந்து கொடுக்கிறது. 

ஆக. உங்களுக்கு சிக்கல் ஏன் தொடர்கிறது என்பதற்கு நீங்கள் கொண்டிருக்கிற புரிதலில் 'கெட்டவர்கள் செழித்து வாழ நல்லவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்' என்று நீங்கள் முன்னெடுக்கும் உங்கள் கண்டுபிடிப்பு பிழையானது என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு இது வரை கிடைத்திருந்தது எல்லாம், நீங்கள் கேட்டது மட்டுமே என்கிறது தமிழ்முன்னோர் முன்னெடுத்துள்ள மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்- நான் சிறப்பாக வாழவேண்டும் என்று கேட்டவர்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஐந்து அகவை வரையிலான குழந்தைகளும், வெற்றியாளர்களும் நமக்கு என்ன வேண்டுமோ அதை அழுது அடம்பிடித்து கேட்கவேண்டும் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,540.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.