இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக கூகுள் கணக்கெடுப்பில் தெரியவருகிறது. ஆனால் கலைக்களஞ்சியம் என்று சொல்லிக் கொள்கிற விக்கிப்பீடியாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழுக்கான இடம் இல்லை என்பதை- விக்கிப்பீடியா தேடலில் தெரிந்து கொள்ள முடிகிறது. விக்கிபீடியா தமிழ்- இதில் தமிழின் பரிமானங்கள் குறித்த கலைச்செல்வங்களை குவிக்க, தமிழறிஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லையா? விக்கிப்பீடியாவில் தமிழுக்கு மரியாதை இல்லையா? என்கிற ஐயம் எழுகிறது. எடுத்துக்காட்டாக உபநிடதங்கள் என்றோ, வேதங்கள் என்றோ, ஹிந்து என்றோ ஆரியம் சார்ந்த தலைப்புகளில், தேடினால் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள். களஞ்சியத்தில் நெல்மணிகளை- உமிகளிலிருந்து ஊதி ஊதி தேடவேண்டியதாக இருக்கிறது. ஆனால் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்தான 'ழகரம்' என்று தேடினால் களஞ்சியத்தில் ஒன்றும் காணோம்; களஞ்சியம் காலியாகக் கிடக்கிறது. உலக மொழிகளில் தமிழ்மொழிக்கே உரிய சிறப்பான 'பொருள் இலக்கணம்' என்று தேடினால், காயலான் கடை உதிரி பாகங்களை பொருள் என்று ஒன்றிரண்டை காட்டுகிறார்கள் களஞ்சியத்தில். அகத்திணை என்று ஒரு தலைப்பிட்டு தப்பு தப்பாக ஏதோ எழுதி வைத்திருக்கிறார்கள். தமிழறிஞர்களுக்கு அன்பான வேண்டுகோள்! விக்கிப்பீடியா களஞ்சியத்தில் தமிழ்க் கலைகளை கொட்டி குவியுங்கள். ஒருவேளை விக்கிப்பீடியாவில் தமிழுக்கு மரியாதை இல்லையென்றால் உடனடியாக தமிழுக்கான கலைக் களஞ்சியத்தை உருவாக்குங்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,333.
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக கூகுள் கணக்கெடுப்பில் தெரியவருகிறது. ஆனால் கலைக்களஞ்சியம் என்று சொல்லிக் கொள்கிற விக்கிப்பீடியாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழுக்கான இடம் இல்லை என்பதைத் தேடலில் தெரிந்து கொள்ள முடிகிறது.