பொது அறம் என்பது யாது? சற்று தெளிவாக விளக்கவும், என்று வேறு ஒருதளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையாக்க உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. பொது அறம் கொண்டாடத்தக்கதாக முன்னெடுக்கப்பட வில்லை இந்தியாவில் என்கிற செய்தியும் கிடைக்கிறது நமக்கு- இந்த விடையளிப்புக்கு முயன்றிருந்த முயற்சியில். 09,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: என் முன்னேற்றத்திற்கு நான் வகுத்துக் கொள்ளும் என் அன்றாடக் கடமைகள் என் அறம் ஆகும். இதைக் கட்டாயம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கான தேவை ஆகும். அதன் பொருட்டே ஒளவை எழுதிய ஆத்திச்சூடியில் முதலாவது கட்டளையாக அறம் செய விரும்பு என்கிறார். பொது அறம் என்பது கூடிவாழும் மக்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை ஆகும். இந்தப் பொது அறம்- குடும்பம், இனம், மதம், நாடு என ஒவ்வொரு அமைப்புக்கும் வேறுவேறு வகையாக நீளும். தலைவன், தலைவி, பிள்ளைகள் என்று குடும்ப அறத்தையே (தனிக்குடும்பம்) பேரளவாகப் பேணும் பாங்குடையது தமிழினம். உலகினர் தனிமனித அறத்தைக் கொண்டாடும் பாங்கினராக தொடர்ந்து இயங்கி வருகின்றனர். பார்ப்பனியத்தின் அடிப்படை கூட்டுக் குடும்ப அறமாகும். உலக இனங்கள் பொது அறம் என்ற தலைப்பில், கோயிலோடு இணைந்த குடிகளாக மதத்தைப் பேரளவாகக் கொண்டாடி வருகின்றன. பார்ப்பனியர்கள் தங்கள் இனவளர்ச்சிக்கான அறத்தை ஒட்டுமொத்த இந்திய அறமாக நிறுவும் வகைக்கு ஆட்சி. தொழில், வணிகம், அறங்கூற்றுமன்றம் ஆகியவற்றில் தங்கள் இன அதிகாரத்தை நிலைநிறுத்தி வருகின்றார்கள். அவர்கள் காங்கிரஸ், பாஜக என்று எந்தக் கட்சியில் இருந்த போதும், இன ஒற்றுமையைத் தலைமைப்படுத்தி, இந்திய விடுதலையை கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். எந்த ஒற்றை மொழி ஆதிக்கமும் போற்றிக் கொள்ளத்தக்க பொது அறம் ஆகாது. நீட் உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வை முன்னெடுப்பதும் போற்றிக் கொள்ளத்தக்க பொது அறம் ஆக முடியாது. ஒன்றிய ஆட்சியில் அதிகாரத்தை குவிக்கிற முன்னெடுப்பு ஒருபோதும் போற்றிக் கொள்ளத்தக்க பொது அறம் அல்லவே அல்ல. போதை, சொகுசு உலா, மாறான உணவுப்பழக்கம் போன்ற உடலைப் பேணா வகைக்கான- தனி அறமோ, தனிமனிதர் நலம் கருதா வகைக்கான- குடும்ப அறமோ, மத அறமோ, ஒரு நாட்டின் சட்ட சமூக அறமோ கொண்டாடத்தக்க அறங்கள் ஆகமாட்டா
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,531.