Show all

உங்களுக்குக் கிடைக்கிற நன்மைகள், தீமைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல் மூலம் எது!

தமிழர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொய்யான வழிகாட்டுதலை- ஆற்றல் மூலம் என்று நம்பி- தன் கையில் வெண்ணெய்யாக இருக்கிற ஆற்றல் மூலத்தை கொஞ்சமும் கருதாது- கண்டதையும் போட்டு காய்ச்சி ஆற்றல் மூலமாக காட்டும் விளம்பர நெய்களுக்கு தம்தம் வாழ்க்கையை விலையாகக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: உங்களுக்குக் கிடைக்கிற நன்மைகள், தீமைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல் மூலம் எது! 

இந்தக் வினாவை எந்த மனிதரிடம் கேட்டாலும் குதுகலமாக உடனடியாக விடை அளிப்பார். ஆனால் நூறு மனிதரிடம் கேட்டால் கிடைக்கும் விடை நூறும்- நூறு வகையாக இருக்கும். ஆனாலும் மிக மிக நுட்பமாக அந்த நூறு விடைகளையும் அலசி ஆராய்ந்தால் அனைவருமே ஒன்றே ஒன்றைத்தான் ஆற்றல் மூலமாகத் தௌ;ளத் தெளிவாகப் பதிவிட்டு இருப்பார்கள். 

அந்த விடையைத்தான் தமிழ்முன்னோர்கள், ஆரியர் வரவிற்கு முந்தைய தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும், தெளிவாகப் பதிவு செய்து என்ப, என்மானார் புலவர் என்றெல்லாம் பதிவிட்டு, என்று சொல்வார்கள்- என்று கூறுவார்கள் என்று தெரிவித்து, இது தங்கள் கருத்து அல்ல எங்கள் முன்னோர்களின் கூட்டுச் சிந்தனையில் கிடைத்த ஆய்வு முடிவு என்று நிறுவியுள்ளனர்.

நமது தமிழ்;முன்;னோர் தெரிவிக்கும் கருத்து அடிப்படையில்- அந்த நூறு மனிதர்களிடம் கிடைத்த நூறு விடைகள் அவரவர் சொன்ன விடை அவரவர்க்கு மட்டுமே சோதனை முயற்சியில் வாகை தந்த விடைகள் என்பதை தெளிவாக பட்டியல் இட முடிகிறது.

ஒருவர் விடை குறித்து மற்றவரிடம் கருத்து கேட்டால், இல்லை அது சாத்தியம் இல்லை, என்னுடைய விடையே அனுபவ அடிப்படையில் கிடைத்தது என்பார். ஒவ்வொருவரும் இப்படியே தங்கள் அனுபவத்தையே தூக்கிக் பிடிப்பார்கள். ஆனால் அனைவரும் வேறு வேறு வழிமுறையைச் சொல்வார்கள். 

ஒருவர் அடித்துச் சொல்கிறார்! பெரும்பான்மையோர் மறுக்கிற ஒரு வழிகாட்டியின் பெயரைச் சொல்லி, அவர் சொன்ன வழிவகையில், எனக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன, கிடைத்துக்கொண்டும் இருக்கிறது. அவர் தெரிவிக்கும் ஆற்றல் மூலத்தை நான் உறுதியாக ஒப்புக்கொள்கிறேன் என்று. 

ஆனால் அவர் மீது வழக்கு இருக்கிறது. அவர் தவறானவர். அவர் ஓடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். அவரால் துணிச்சலாக பொதுவெளிக்கு வந்து கருத்து பகிர முடியுமா? என்றெல்லாம் பெரும்பாலானோர் வினா எழுப்புவதோடு, அந்த வழிகாட்டியைக் கொண்டாடிய ஆளை ஒரு மாதிரிப் பார்ப்பார்கள்.

ஒருவழிகாட்டி மிகப்பெரிய வணிகராக உலா வருகிறார். ஒரு வழிகாட்டியோ திரைப்பேரறிமுகங்கள் கொண்டாடும் பெரிய பெரிய விழாக்கள் எல்லாம் நடத்துகிறவராக இருக்கிறார். 

எல்லா மதங்களும் தங்கள் தெய்வங்களுக்குப் பின்னால் வந்தால் எல்லாம் கிடைத்து விடும் என்ற பறை சாற்றுகின்றன. நிறைய பேர்களுக்குக் கிடைக்கிறது. கிடைக்காதவர்களுக்கு அடுத்த மதத்தில் கிடைக்கிறது. 

சிலர் எதாவது ஒரு தெய்வம் நமக்கு நன்மை செய்துவிடாதா என்று நூறுவகையான தெய்வங்களில் படங்களை தனியாக அறைகட்டி பூசை அறை என்று வீட்டிலேயே ஒரு கோயிலைக் கட்டி விடுகின்றனர். 

ஒரே ஒருவருக்கு பலன் தந்தாலும் சரியே. பத்து பேருக்கு பலன் தந்தாலும் சரியே. ஆயிரம் பத்தாயிரம் பேருக்கு பலன் தந்தாலும் சரியே. 

பலன் கிடைத்தது என்பதை சும்மாவெல்லாம் தூக்கிப் போட்டு விட முடியாது. உங்களுக்கு இந்தியாவில் இருக்கிற, ஏன் உலகத்தில் இருக்கிற யாருமே ஒரு ரூபாய் தரவில்லை என்பது ஆய்வுக்கு உரிய தகவல் அல்ல. ஆனால் ஒரேயொருவர் உங்களுக்கு ஒரேயொரு ரூபாய் கொடுத்தார் என்பது ஆய்வுக்கு உரியது என்பதை உலகின் எந்த இயல்அறிவும் (சயின்சும்) மறுக்க முடியாது. 

ஆக எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆக எல்லா வழிகளிலும் கிடைக்கிறது. ஆக எல்லா வழிகாட்டிகள் பின்னால் சென்றாலும் கிடைக்கிறது. எல்லா மதங்களிலும் கிடைக்கிறது. எல்லா மதங்கள் பின்னால் சென்றாலும் கிடைக்கிறது. 

ஆனால் கிடைப்பது எந்த வழிகளாலும் அல்ல என்பதே உண்மை. ஆனால் கிடைப்பது எந்த வழிகாட்டிகளாலும் அல்ல என்பதே உண்மை. ஆனால் கிடைப்பது எந்த மதங்களாலும் அல்ல என்பதே உண்மை. ஆனால் கிடைப்பது எந்தத் தெய்வங்களாலும் அல்ல என்பதே உண்மை. நீங்கள் அந்த வழியில் உங்களுக்கு கிடைக்கும் என்று எண்ணினால் (நம்பிச்சென்றால்) கிடைக்கிறது எண்ண மறுக்கிற போது கிடைக்காமல் அடுத்த வழி தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. 

உண்மையில் எந்த வழியிலும் கிடைக்காது! நீங்கள் எண்ணினால் மட்டுமே கிடைக்கும் என்று நிறுவி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருந்தவர்கள்தாம் நம் தமிழ்முன்;;னோர்.

ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு அயலைப்பற்றி தொங்கிக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கிறான். தன்பிள்ளைகளின் ஆங்கில வழிக்கல்விக்கு தான் உழைத்த பணத்தையெல்லாம் கொட்டிக் கொடுத்து ஓட்டாண்டி ஆகிறான்.

தனது பிள்ளை ஹிந்தி படித்தால் சாதித்து விடும் என்று ஒன்றிய கல்விப் பாடத்திட்டத்தில் தனது பிள்ளையின் மீது இரு அயல்மொழிகளைத் திணித்து முதுகில் கூண் விழச் செய்கிறான். 

இப்படி மதம், கோயில், தெய்வங்கள், சாமியார் என்று யார் யார் பின்னலோ தானும் திரிந்து தனது குடும்பத்தையும் அலைகழிக்கிறான்.

உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுத முடியும்! யாரும் எழுத முடியாது என்கிறார் கணியன் பூங்குன்றனார்:
தீதும் நன்றும் பிறர் தர வாரா 
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன 
என்று.

உங்கள் தலையெழுத்தை நீங்கள் தாம் எழுத முடியும். நீங்கள் எழுதியவாறே சிறப்பான வாழ்க்கையை முன்னெடுக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்
என்ற குறளில்.

உங்களுக்கு இதுவரை கிடைத்து வந்தது- நன்மையோ தீமையோ எதுவானாலும் சரியே- அது, நீங்கள் கிடைக்க வேண்டும் என்று நினைத்ததால் கிடைத்தவை மட்டுமே. நீங்கள் பிழையாக யார் யாரோ தந்ததாக அவர்களுக்கு உங்கள் உழைப்பை காணிக்கை ஆக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதே முழுக்க முற்றான உண்மை.

ஆரியர் வரவு, பல்வேறு அயலவர் வரவுக்குப் பிறகு நமது உடமைகளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நமது வீட்டிற்கே நாம் வாடகை கொடுத்து பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

உங்களுக்குக் கிடைக்கிற நன்மைகள், தீமைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல் மூலம் உங்கள் எண்ணம் மட்டுமே என்று ஒவ்வொரு தமிழரும் தெளிக தெளிக என்று தெரிவிக்க விரும்புகிறேன்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,275.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.