Show all

கடவுள் உங்களுக்கு ஓராயிரம் சொந்த அடையாளங்களை மீட்டுத்தர: நிங்கள் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் ஒரேயொரு சொந்த அடையாளத்தைத் தக்கவைத்தால், கடவுள் உங்களுக்குச் சொந்த வீடு, சொந்தத் தொழில், சொந்தத் தனிதிறன், சொந்தக் கல்வி, சொந்த நாடு என ஓராயிரம் சொந்த அடையாளங்களை மீட்டுத்தரும் என்பதை, தமிழின வரலாற்று அடிப்படையில் தெளிவு படுத்துவதற்கானது இந்தக் கட்டுரை.

நாம் இழந்த அடையாளங்களில் ஒன்றான இன்றைய நாள்: 26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:

நீங்கள் ஒரேயொரு சொந்த அடையாளத்தைத் தக்கவைத்தால், கடவுள் உங்களுக்கு ஓராயிரம் சொந்த அடையாளங்களை மீட்டுத்தரும்.

இது தமிழின வரலாறு தெரிவிக்கும் நூறுவிழுக்காடு உறுதியான உண்மை.

ஒரேயொரு சொந்த அடையாளத்தை இழந்து, ஒட்டு மொத்த சொந்த அடையாளத்தையும் இழந்து, பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம், திராவிடம் உள்ளிட்ட அயல்களுக்கு அடிமைகளாக மருத்துவ கல்வி உரிமைக்குக் கூட அயலானிடம் மண்டியிட்டுக் காத்திருக்கும், தனக்கென ஒரு நாட்டை ஆளும் அதிகாரம் இல்லாத, உலகின் ஒப்பற்ற ஒரு மிகப்பெரிய இனந்தான் தமிழினம்!

தமிழினம் தக்கவைக்காத, அந்த ஒற்றைச் சொந்த அடையாளம்: தனக்கான பெயரை, சொந்த மொழியான தமிழில் அமைத்துக் கொள்வது!

இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள, இந்த இரண்டு கட்டுரைகளைக் கட்டாயம் படியுங்கள்.

1. பெயரே முதல் அடையாளம்! புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள்

2. தமிழன் தனக்கான சொந்த வீட்டையும், தன் இனத்திற்கான சொந்த நாட்டையும் பற்றிட, பாடாற்ற வேண்டியது என்ன? ஏன்

நீங்கள் இழந்த ஓராயிரம் அடையாளங்களை மீட்க மிக மிக எளிமையான இந்தச் செயற்பாட்டை ஆற்றுங்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,161.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.