Show all

பிராகிருத மொழியின் வரலாறு என்ன

பிராகிருதம் என்கிற அந்தப் பெயர் அந்த மொழிக்கு அமைந்தது சமஸ்கிருத கட்டமைப்பிற்கு பின்னரே ஆகும். அதற்கு முன்னர் அந்த மொழிக்கு பெயர் வைக்கவேண்டிய கட்டாயம் எழவில்லை. பிராகிருத மொழியின் வரலாறு என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 

நாவலந்தேய இந்தியாவின் வடபுலத்தில், பிரம்மணர்கள் வரவுக்குப் பிறகு பிரம்மணர்களால் பேச்சு வழக்காக மட்டும் கொண்டுவரப்பட்ட பாரசீக மொழியும் வடபுல நாவலந்தேய மக்களால் பேசப்பட்டு வந்த கொடுந்தமிழும் இணைந்து உருவான மொழியும் வடநாவலந்தேய மக்களிடம் பெருவழக்காக வளர்ந்த மொழியும் ஆகும் பிராகிருதம்.

பிராகிருதம் என்றால் பேரங்கீகாரம் என்று பொருள். அதில் பிரா என்பது தமிழில் பெரு என்று வழக்கப்படுகிற சொல்லின் சமஸ்கிருத திரிபு ஆகும்.

பிராகிருதம் என்கிற அந்தப் பெயர் அந்த மொழிக்கு அமைந்தது சமஸ்கிருத கட்டமைப்பிற்கு பின்னரே ஆகும். அதற்கு முன்னர் அந்த மொழிக்கு பெயர் வைக்கவேண்டிய கட்டாயம் எழவில்லை.

சமஸ்கிருதம் ஆண்கள் மற்றும் படிப்பாளிகளால் மட்டும் பேசவும் எழுதவும் உருவாக்கப்பட்ட மொழி.

பிராகிருதம் வடபுல நாவலந்தேய மக்களால் மட்டும் பெருவழக்காக பேசப்பட்டுமட்டும் வந்த மொழியாகும். சமஸ்கிருதம் பெண்கள் உள்ளிட்ட பலருக்கு தடைமொழியாக இருந்த காரணம் பற்றி பிராகிருத மொழியை பேரளவாக வளர்க்கும் முயற்சியில் பல்வேறு அணிகள் கிளம்பியதால் இன்று நடப்பில் உள்ள பல்வேறு வடஇந்திய மொழிகள் தோற்றம் பெற்றன.

பிராகிருத மொழி வடஇந்திய மொழிகளுக்கு எல்லாம் அடிப்படை மூல மொழியாகும். வட இந்திய மொழிகள் மேம்பாட்டில் பாரசீகம், அராபி, பாஷ்து, உருது, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு.

பிராகிருத மொழிக்கு முதலாவதாக அமைந்த எழுத்து தமிழையொட்டி அமைக்கப்பட்டது ஆகும். அதற்கு தமிழின் முந்தைய வடிவம் முழுமையாகப் பயன்பட்டது. தமிழர்களை த்ரமிளா என்றும் தமிழைத் த்ராமி என்று அழைத்த பிரம்மணர்கள் தங்கள் முதலாவது எழுத்து வடிவத்திற்கு பிராமி என்று பெயர் சூட்டினர். 

தமிழ் (த்ராமி) எழுத்துக்களும் பிராமி எழுத்துக்களும் ஒன்றுதான். பிராமி எழுத்துக்கள், க நான்கும் ச நான்கும் ட நான்கும் த நான்கும் ப நான்கும் கூடுதலாகக் கொண்டிருக்கும். 

தமிழ் ஆய்வளார்கள், 1.தமிழ் (த்ராமி) 2.பிராமி இரண்டையும் இன்று வரை குழப்பிக் கொள்கின்றார்கள். தமிழில் இருந்து வந்த பிராமி தமிழ் போலவே இருப்பதால், பிராமியை முதலாவதாக்கி தமிழை (த்ராமி) தமிழ்ப்பிராமி என்றார்கள். அதில் தமிழுக்கு முந்தையது பிராமி என்கிற குறிப்பு தோன்றுவதைப் புரிந்து கொண்ட சிலர், தமிழை (த்ராமி) தமிழி என்றார்கள். 

எழுத்து வடிவ மாற்றத்தில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் தமிழ் புதிய புதிய பெயர்களையா பெற்றிருக்க முடியும்? எப்போதும் தமிழ் எழுத்துக்கள் தமிழே! என்கிற சிந்தனைக்கு வர தமிழ் ஆய்வாளர்களுக்கு எது தடையாக இருக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியவில்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,687. 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.