Show all

சங்க காலத்தில் பார்ப்பனர்கள் எந்த மாதிரி வேலை செய்து தன் உடலை, தன்னை காப்பாற்றிக் கொண்டனர்

சங்க காலத்தில் பார்ப்பனர்கள் எந்த மாதிரி வேலை செய்து தன் உடலை, தன்னை காப்பாற்றிக் கொண்டனர்? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 
சங்ககாலத்தில் நாடோடிகளாகத் தமிழ்நாடு வந்த பார்ப்பனியர்களைப் பெரிதும் கவர்ந்தது கூத்துக்கலையே ஆகும். தமிழ்நாட்டின் கலைத்துறை கூத்தர்களிடம் இருந்தது. தமிழ்க்கூத்தர்கள் தமிழ்நாட்டிற்குள் பயணித்துவந்த நாடோடிகள். இனம் இனத்தோடு சேரும் என்கிற சொலவடைக்கு ஒப்ப பார்ப்பனிய நாடோடிகளைத் தமிழ்க்கூத்தர்கள் கவர்ந்தனர். 

தமிழ்க் கூத்தின் கதைக்கரு தமிழர் வாழ்வியல் செய்திகள் மற்றும் சேர சோழ பாண்டிய குறுநில மன்னர்களின் வரலாறாக அமைந்திருந்தது. 

ஆரியக் கூத்தைக் கட்டி ஆடிய பார்ப்பனியர்கள் ஆரியக் கூத்தின் கதைக்கருவை இராமயண மகாபாரதக் கதைகளாக அமைத்துக்கொண்டனர். அது அவர்களுக்கு ஒரு பக்கம் வருமானம் மற்றும் வாழ்க்கை தருகிற கலையாகவும், மறுபக்கம் தமிழ்மக்கள் மீதான கலாச்சாரத் திணிப்பாகவும் அமைந்தது. 
தமிழ்க் கூத்தர்களோடு ஆரியக் கூத்தர்களும் தங்கள் கூத்தை பொதுமக்கள் நடுவேயும், கோயில்களிலும், மன்னர் அவைகளிலும் ஆடிப்பாடி பரிசில் பெற்று வந்தனர்.

தமிழ்க் கூத்தர்களுக்கு நிலத்தை பரிசளித்து வந்த தமிழ்மன்னர்கள், ஆரியக்கூத்தர்களுக்கு, அவர்கள் அயல் மண்ணினர் என்கிற காரணம் பற்றி, பொன்னும் பொருளும் பரிசாக வழங்கினர்.

நாளடைவில் தமிழ்க்கூத்தர்கள் அனைவரும், தமிழ்க்கூத்தின் கதைக்கருவை விடுத்து, ஆரியக்கூத்தர்களின் கதைக் கருவில் கூத்து கட்டி ஆடி வந்தனர். 

பிற்காலத்தில் கம்பர் இராமயணத்தையும், வில்லிப்புத்தூரார் மகாபாரதத்தையும் இயற்றுவதற்கு இந்த ஆரியக்கூத்துக் கதைக்கருக்களே பேரளவாக உதவின. கம்பரோ, வில்லிப்புத்தூராரோ சமஸ்கிருதம் அறிந்தவர்களோ, இராமயண மகாபாரதத்தின் மூலக்கதைகள் அறிந்தவர்களோ அல்லர்.

ஆரியக் கூத்தாடிய தமிழ்க்கூத்தர்களுக்கும், தமிழ்மன்னர்கள் பொன்னும் பொருளும் பரிசளிக்கவே, தங்களுக்கு நிலமே வேண்டும் என்று வெகுண்டெழுந்தனர் தமிழ்க்கூத்தர்கள். அந்த அடிப்படையில் அமைந்ததுதான் ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்கிற சொலவடை ஆகும்.

கலைத்திறம் இல்லாமல் தமிழ்திறம் மட்டுமே கொண்ட புலவர்கள் நடப்பு நிலை செய்தி ஊடகங்கள் போல செயல்பட்டனர். மன்னருக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்தனர். அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட எட்டுத் தொகை தொகுப்பு நூல்களில் காணப்படும் யாப்புகளை கட்டி இலக்கியம் படைத்திருந்தனர். அவர்கள் மன்னர்களைச் சந்தித்த வரலாறை ஆற்றுப்படை நூல்களாகவும் இயற்றி இருந்தனர்.

ஆரியக்கூத்தாடிய பார்ப்பனியர்கள் தங்களின் தமிழ்ப் புலமையை வளர்த்துக் கொண்டு, தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்திட, தமிழோடு சமஸ்கிருதத்தை கலந்த மணிப்பரவாளம் என்கிற கலப்பு நடையை உருவாக்கி தமிழின் தொய்வுக்கும், தமிழில் இருந்து பலப்பல புதுமொழிகள் கிளைப்பதற்கும் காரணமானர்கள். 

பாலியலை முறைப்படுத்தும் வகைக்கு உலகுக்கு கொடையாக அமைந்த திருமணம் மற்றும் களவு கற்பு என்பதான அக இலக்கிய நெறியைக் கொண்டிருந்த தமிழில், பாலியல் கல்வி பேணும் வகை;கான காமசூத்திரம் கொக்கோகம் ஆகியவற்றைக் கலக்கச் செய்தார்கள். (மகப்பேற்று மருத்துவம் பாலியல் கல்வி ஆகாது) இன்றைக்கு அனைத்து செய்தி மற்;றும் கலை ஊடகங்கள், பாலியல் கல்வி புகட்டவே கதைக்கரு அமைத்துக்; கொண்டு இயங்குகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள் பண்பாடற்ற தொடர்கள் மூலம், குடும்ப நெறியையும் பேரளவாக ஊடாடி கெடுத்துக் கொண்டிருக்கின்றன.

தொழில் அடிப்படையில் வகைப்பாட்டு நிலையில் இருந்த தமிழ்நாட்டுச் சாதிய அமைப்புகளில், ஏற்றதாழ்வுக் கட்டமைப்பை நிறுவிய பெரும்பங்கும் ஆற்றியவர்கள் பார்ப்பனியர்கள் ஆவார்கள்.

பொருள் பொதிந்த தமிழர் வழிபாட்டு அடிப்படைகள் அனைத்திற்கும், பார்ப்பனியர்களால் புனைவுகள் கற்பிக்கப்பட்டு அவைகள் கோயில்கள் மூலமாக தமிழர்முன்னேற்றத்திற்கான அடிப்படைகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,686.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.