Show all

கடினமாக உழைத்தும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை, என்ன செய்வது?

கடினமாக உழைத்தும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை, என்ன செய்வது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க எழுதியது இந்தக் கட்டுரை.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கடினமாக உழைத்தும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை, என்ன செய்வது என்று கேட்டால், உழைப்பிற்கு அவ்வளவுதான் பலன் என்பதுதான் விடை. நீங்கள் செய்யவேண்டுவது உழைப்பின் அடுத்த நிலையான ஒருங்கிணைப்பிற்கு நீங்கள் மேம்படுவதுதான் கூடுதல் பலன் தேடலுக்கான செயல்பாடு ஆகும்.

உழைப்பிற்கான பலன்: 
உடலுழைப்புத் தளத்தில் என்றால் மிக அதிக பட்சம் பத்தாயிரத்தை தாண்டாது.
நிருவாகத் தளத்தில் என்றால் மிக அதிக பட்சம் இருபதாயிரத்தைத் தாண்டாது.
நிறுவனத்தில் வேலை என்றால் மிக அதிக பட்சம் ஐம்பதாயிரத்தைத் தாண்டாது.
சொந்தத் தொழில் என்றால் முதல் இரண்டு பட்டியல்களைத் தாண்ட முடியாது.
சொந்த வணிகம் என்றால் முதல் மூன்று பட்டியல்களைத்; தாண்ட முடியாது.

ஒருங்கிணைப்பிற்கான பலன்:
உங்கள் குடும்பத்தாரை ஒருங்கிணைத்தால் கொஞ்சம் கூடுதல் பலன் கிடைக்கும்.
கருவிகளை ஒருங்கிணைத்தால் அதை விட கூடுதல் பலன் கிடைக்கும்.
நிறைய மனித உழைப்பை ஒருங்கிணைத்தால் அதை விட கூடுதல் பலன் கிடைக்கும்.
நிறைய மனிதர்களோடு நிறைய கருவிகளையும் ஒருங்கிணைத்து வருமானம் பார்ப்பவர்கள் தாம் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள். 
கார்ப்பரேட்டின் நிருவாகக்கூலியாக சுந்தர் பிச்சை மாதிரி சாதிக்க மிகக் குறைந்த ஆட்களுக்கே இடம் இருக்கிறது.
எந்தத் தளத்திலும் கடின உழைப்பு தேவையில்லை. மிடுக்கு (ஸ்மார்ட்) உழைப்புதான் தேவை. உழைப்பிற்கேற்ற பலனைத்தான் நீங்கள் பெற்று வருவீர்கள். கூடுதல் பலனை உழைப்பால் சாதிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் எட்டுலிருந்து பனிரெண்டு மணிநேரம் மட்டுமே உழைக்க முடியும். ஒருங்கிணைப்பில்தான் சாதிக்க முடியும். ஆக நீங்கள் முன்னெடுக்காதிருப்பது இடர்பாட்டிற்கு (ரிஸ்க்) அஞ்சி எந்த சிறிய ஒருங்கிணைப்பையும் முன்னெடுக்காதிருப்பதே. புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,373.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.