Show all

இறைமறுப்பு கடவுள்இல்லை என்கிற சொல்லாடல்கள் குறித்து!

ஹிந்துத்துவா எதிர்ப்புக்கு- மறுப்பு, இல்லை என்கிற எளிய தகவல்களுக்கு பொருள் பொதிந்த இறையையும், கடவுளையும் வீணடிக்கிறோம்.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இறைமறுப்பு என்றும், கடவுள்இல்லை யென்றும் முன்னெடுக்கப்படுகிற சொல்லாடல்கள் இறை, கடவுள் என்கிற பொருள் பொதிந்த தமிழ்ச்சொற்களை அடிப்படை இழக்கச்செய்ய- பயன்பட்டு விடுகின்றன. இந்த விடையத்தைப் புரிந்து கொள்ளாமலே, பார்ப்பனிய எதிர்ப்பு, ஹிந்துத்துவா எதிர்ப்புக்கு- மறுப்பு, இல்லை என்கிற எளிய தகவல்களுக்கு பொருள் பொதிந்த இறையையும், கடவுளையும் வீணடிக்கிறோம். 

இறை என்கிற தமிழ்ச்சொல்லுக்கு லார்ட் என்கிற ஆங்கிலச் சொல்லையோ கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லுக்கு காட் என்கிற ஆங்கிலச் சொல்லையோ இரண்டுக்கும் பகவான் என்கிற ஹிந்திச் சொல்லையோ மொழி பெயர்ப்பாக கொண்டு கருத்தாடலை முன்னெடுப்பது பெருந்தவறாகும். 

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சொல்லப்படுகிற லார்ட், காட், பகவான் என்பன- அந்த மொழிக்கான மக்கள்- படைப்பு மூலத்திற்கு வைத்த பெயர்கள் அவை. ஆனால் இயற்கை படைக்கப்பட்டதான கருதுகோளில் தமிழ் முன்னோர்களுக்கு உடன்பாடு இல்லை. 

தமிழர் இறையென்று, தெரிவித்தது ஐந்திரங்களில் (பஞ்சபூதம்) நிலம். நீர், தீ, காற்று என்கிற தான்தோன்றி ஆற்றல் உடைய நாற்திரங்களையே. அவை வெளியில் இறைந்து கிடப்பதால் அவற்றை இறை என்றனர் தமிழர். 

தமிழர் கடவுள் என்று தெரிவித்தது ஐந்திரங்களில்- எல்லையும், தான் தோன்றி இயக்கமும், இல்லாத- நிலம். நீர், தீ, காற்று என்கிற தான்தோன்றி ஆற்றல் உடைய நாற்திரங்களுக்கு- உள்ளும் கடந்தும் வெளியாக அமைந்து- நாற்திரங்களால் இயக்கம் பெற்று விண்வெளி ஆகி- நாற்திரங்களிடம் இயக்கம் பெற்ற வகைக்கு அவைகளை இயக்கும் விசும்பு ஆகி கடந்தும் உள்ளும் இருக்கிற கடவுள் என்பதாக தமிழ் முன்னோர்களால் விசும்பு ஆற்றல் இயக்க வகைக்கு பெயர் பெற்றது.

கடவுள் பெயர் விளக்கம் குறித்து இன்னும் விரிவாகப் படித்திட, இந்த இணைப்பில் சென்றிட வேண்டுகிறேன். http://www.news.mowval.in/Editorial/katturai/Kadavul-144.html   

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,084.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.