Show all

மின்னூல் அறிமுக விழா! 42வது நூலாக குமரிநாடனின் நம்முடைய தலைஎழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா

சான்றோர்த்தளம் அமைப்பு முன்னெடுக்கும் நாற்பத்தி இரண்டாவது மின்னூல் அறிமுக விழா. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு. திறனாய்வில் எடுத்துக் கொள்ளப்படுவது எனது (குமரிநாடன்) அமேசான் கிண்டில் பதிப்பு நூலான, நம்முடைய தலைஎழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா! என்கிற நூலாகும்.

26,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: எனது (குமரிநாடன்) அமேசான் கிண்டில் பதிப்பு நூலான, நம்முடைய தலைஎழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா! என்கிற மின்னூல் அறிமுக விழாவை செவ்வாய்க் கிழமை மாலை 6.30 மணிக்கு சிறப்பாக முன்னெடுக்கவுள்ளது 'சான்றோர்த் தளம்' அமைப்பு.

இந்த நிகழ்வைக் கூகுள் குவியம் செயலி மூலமாக முன்னெடுக்கிறது சான்றோர்த்தளம் அமைப்பு. இந்தக் குவியம் நிகழ்ச்சிகான கூட்டஅடையாளஎண்: 4775896897. கடவுச்சொல்;: 123456 ஆகும். 

மின்நூலைத் திறனாய்வு செய்யும் சான்றோர் பெருந்தகை: கவிஞர் வைரமணி, துணைப்பேராசிரியர், தமிழ்ப்பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் அவர்கள் ஆவார்கள்.

தலைமை ஏற்றுச் சிறப்பிக்கும் சான்றோர் பெருந்தகை: சாக்ரடீஸ் மு.சக்கையா அவர்கள் ஆவார்கள்.

தொடக்கவுரை ஆற்றி சிறப்பிக்கும் சான்றோர் பெருந்தகை: அமிர்தம் பீட்டர்ராசன், நிறுவனர், சான்றோர்தளம் அவர்கள் ஆவார்கள்.

சான்றோர் பலரின் கருத்துப் பகிர்வு எனது (குமரிநாடன்) ஏற்புரையைத் தொடர்ந்து நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்யவுள்ள சான்றோர் பெருந்தகை: பேராசிரியர், முனைவர், வெற்றிநிலவன் அவர்கள் ஆவார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பங்குபெற்றும் சான்றோர் பெருந்தகையாளர்கள்;: இயக்குநர் யேசுராஜ், ஜீவன்பாக் சிஸ்டம்ஸ் சென்னை., முனைவர் பாலமுருகன் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம்., பேராசிரியர், தமிழியலன், நான் ஓர் ஐஏஎஸ் அகடமி., பாவலர் மன்னர்மன்னன் ஆசிரியர் குத்தாலம் ஆகியோர் ஆவார்கள்.

உலகளாவிய தமிழ்ஆர்வலர்கள், சான்றோர் பெருமக்கள், நண்பர்கள், உறவுகள் ஆகியோர்கள், இதை அன்பழைப்பாக ஏற்று, சான்றோர்த் தளத்தின் இந்த நாற்பத்தி இரண்டாவது மின்னூல் அறிமுக விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,213.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.