Show all

விஜய் சேதுபதி அறிவோம்! நாமும் கூட அந்தப் பாதையில் பயணிப்போம் வரிசையில்.

தங்கள் இனமானவர்களை தேடிப்போய் அறிமுகப் படுத்திக் கொண்டு, பாரட்டுவதையும் அவர்களைக் கொண்டாடுவதையும் உலகில் இரண்டு இனங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. ஒன்று மலையாளிகள். இரண்டு பார்ப்பனியர்கள். நாமும் கூட அந்தப் பாதையில் நம் இனமானவர்களைக் கொண்டாடலாமே. 

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெயர்: விஜய் சேதுபதி. பிறந்தநாள்: 03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5079 தமிழ்த்தொடர்நாள்: 1855059. கிழமை: திங்கட் கிழமை.  ஆங்கிலம்: 16.01.1978 துறை: தமிழ் திரைப்பட நடிகர். சொந்த ஊர்: இராசபாளையம். படிப்பு: வணிகவியல் இளவல்

விஜய் சேதுபதி! தன் வாழ்க்கையை கணக்காளராக தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்பு பணியை தேர்ந்தெடுத்தார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னனி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற திரைப்படங்களில் கதைத் தலைவனாக நடித்துள்ளார்.

ராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும் சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். வணிகவியலில் இளவல் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து பார்க்;கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ் திரைப்பட விழாவில் பெற்றார்.

இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழ்-கன்னட இரு மொழிப்படமான அகண்ட என்பதின் தமிழ் பதிப்பில் முன்னனி கதை மாந்தராக நடித்தார், கன்னட பதிப்பில் எதிர்மாறான கதை மாந்தராக நடித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை. பின்பு பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு நான் மகான் அல்ல என்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இயக்குநர் சுசீந்திரனே முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தவர் என்று கூறினார். சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு ராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார், பின்பு சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் முன்னனி கதாபாத்திரம் வழங்கினார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்த மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. சுந்தரபாண்டினில் இவர் பகைவனாக நடித்திருப்பார். கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் முன்னனி கதை மாந்தராக நடித்தார். நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும் முன்னனி கதை மாந்தராக நடித்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து 6 படங்களை நடித்து முடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 5 படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு 7 படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் தனது 25-ம் படமாக சீதக்காதி திரைப்படத்தில் 75 வயது முதியவர் தோற்றத்தில் நடித்து பல சாதனைகளை புரிந்துள்ளார்.

பிரபல ஆங்கிலப் படத்திற்கு கதைத்தலைவனுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் தனக்கென தனி இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. எந்த ஒரு திரையுலக பின்னணியும் இல்லாமல் தனது உழைப்பு, திறமை என்னும் தாரக மந்திரம் மூலம் தனக்கென தமிழ் திரையுலகில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். நடிப்பைத் தாண்டிச் சிறந்த தயாரிப்பாளர், திரைக்கதையாளர், பாடலாசிரியர் எனும் பன்முகங்களைக் கொண்டவர்.

வளர்ந்து வரும் சேதுபதியின் கொள்கை: இதுவரை நடித்த யாரின் நடிப்புத் தோரணையும் தன்னில் வெளிப்படக் கூடாது என்பதுவே. அவர் யாருடனும் எனக்கு போட்டியில்லை என்று கூறும் பெரும்தகைமையாளர். கவண், விக்ரம் வேதா  என்று சக்கை போடு போடும் ஒவ்வொரு படமும் இவரின் அர்ப்பணிப்பின் அடையாளங்கள்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,157.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.