வல்லபாய் படேல் பிறந்த நாளான இன்றைய நாளில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு புதிய ஒன்றியப் பகுதிகள் நடைமுறைக்கு வருவதைக் கொண்டு, வானொலி நிலையங்களும் மறுபெயரிடப்பட்டுள்ளன. ஜம்முவில் அமைந்துள்ள வானொலி நிலையம் அகில இந்திய வானொலி ஜம்மு என மறுபெயரிடப்பட்டது. சிறிநகர் மற்றும் லே ஆகிய நிலையங்கள் முறையே அகில இந்திய வானொலி, சிறிநகர் மற்றும் அகில இந்திய வானொலி லே என மறு பெயரிடப்பட்டுள்ளன. 14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் இணையத் தேடலில் வல்லபாய் படேல் என்று தமிழில் தேடிய போது 37,600 முடிவுகளும், ஆங்கிலத்தில் தேடிய போது 82,90,000 முடிவுகளும் வெளிப்பட்டன. அவற்றுள்ளும் பெரும்பான்மையான முடிவுகள் வல்லபாய் படேலின் மாஉயரச்சிலை திறப்பு தொடர்பானதாகவே இருந்தன. அதே சமயம் மகாத்மா காந்தி என்று தமிழில் தேடிய போது 3,05,000 முடிவுகளும், ஆங்கிலத்தில் தேடிய போது 5,45,00,000 முடிவுகளும் வெளிப்பட்டன. ஆக இதிலிருந்து- இந்திய ஒற்றுமை தலைப்பிற்காக வல்லபாய் படேலைத் திடீரென்று பாஜகவிற்கு ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற இந்திய அரசு தூக்கிப் பிடித்திருக்கிறது என்றும், இதற்கு முன்பாக மக்கள் அளவில் அவரைக் கொண்டாடிய வரலாறு இல்லை என்றும் தெரிய வருகிறது. காந்தியாரின் இந்திய ஒருமைப்பாடு தலைப்பும், வல்லபாய் படேலின் இந்திய ஒருமைப்பாடு தலைப்பும் வேறு வேறானது. காந்தியாரின் இந்திய ஒருமைப்பாடு தலைப்பு: இந்திய விடுதலைக்கு முன்பும் பின்புமாக நெடிய வரலாறு கொண்டது. காந்தியார் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சியைக் கலைக்கச் சொன்னார். புதிய இந்தியாவின் ஆட்சி பொதுமக்களிடம் இருந்து மலரவேண்டும் என்று விருப்பினார். அவரின் இந்திய ஒருமைப்பாட்டு வேட்கைக்காகவே- ஆதிக்கவாதிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய விடுதலைக்கு முன்னர், இந்தியாவில் மொத்தம் 562 இந்திய மன்னராட்சி அரசுகள் அல்லது சமஸ்தானங்கள் காணப்பட்டன. இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன. இந்திய விடுதலைக்கு பின்னர், இந்த 562 இந்திய மன்னராட்சி அரசுகளை இந்திய இராணுவத் துணையோடு உருட்டி மிரட்டி இந்தியாவுடன் இணைத்தது வல்லபாய் படேலின் இந்திய சர்வாதிகாரப்பாடு. அந்த காலக்கட்டத்தில் வல்லபாய் படேலின் அந்த சர்வாதிகாரப்பாடு சரியாகவே இருந்திருக்கலாம். ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் குடிஅரசு ஆக்கப்பட்ட இந்தியாவில்- அட்டவணை எட்டில் இந்திய ஆட்சி மொழிகளாக 22 மொழிகளை அங்கீகரித்துள்ள இந்தியாவில்- மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டு ஆட்சி நடத்தப்பட்டு வருகிற இந்தியாவில்- அந்தக் காலக்கட்ட சர்வாதிகாரத்தைத் கொண்டாடுவதோ தூக்கிப் பிடிப்பதோ வக்கிரமான செயலாகும். காஷ்மீருக்கு- இந்தியா, சிறப்பு தகுதி வழங்கிய சட்டப் பிரிவுகள் காஷ்மீர் மக்கள் நலனுக்காக, காஷ்மீரை ஆண்ட மன்னர் ஹிரிசிங்கோடு செய்து கொண்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை அந்த மண்ணின் மக்களின் ஒப்புதல் இல்லாமல் இரத்து செய்வதும் வக்கிரமான செயலே. ஐம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019க்கு குடியரசுத் தலைவர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ஒப்புதல் தந்தார். இதன்படி 72 ஆண்டுகளுக்கு பிறகு நள்ளிரவு 12 மணி முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு புதிய ஒன்றியப் பகுதிகள் பிரிந்து செயல்பட தொடங்கி உள்ளது. என்கிற இந்த வக்கிரமான செயலைச் செயல் படுத்துவதற்காகவே ஒற்றுமைக்கான சிலை என்ற பெயரில் வல்லபாய் பட்டேலின் சர்வாதிகாரப்பட்டை (வல்லபாய் படேலை அல்ல) போற்றிக் கொள்ளும் வகையாக அமைக்கப்பட்ட ஒரு சிலையாகும். இந்தச் சிலை இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சாது நர்மதா அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும். வடிவமைப்பு, கட்டுமானம், நிர்வகிப்பு என்ற நிலைகளில் குறைந்த அளவிலான ஒப்பந்தப்புள்ளி தந்ததன் அடிப்படையில் இந்த சிலையினை அமைப்பதற்கான திட்டம் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திடம் அக்டோபர் 2014இல் வழங்கப்பட்டது. 31 அக்டோபர் 2014இல் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு அக்டோபர் 2018 இல் இடையில் முடிவுற்றது. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியால் படேலின் பிறந்த நாளான 31 அக்டோபர் 2018 அன்று திறக்கப்பட்ட- இந்தச் செயல் நிறைவேற்றப்பட்டது. பாஜக நிதானமாக- ஒற்றை இனத்தின், ஒற்றை மொழியின், ஒற்றை மதத்தின் அட்சி அதிகாரத்தை இந்தியாவில் நிறுவ முற்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு ஒன்றியப் பகுதிகளாக இன்று பிரிந்ததைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் “அனைத்து இந்தியா வானொலி நிலையம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்றைய நாளில். ஐம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019க்கு குடியரசுத் தலைவர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ஒப்புதல் தந்தார். இதன்படி 72 ஆண்டுகளுக்கு பிறகு நள்ளிரவு 12 மணி முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு புதிய ஒன்றியப் பகுதிகளாகப் பிரிந்து செயல்பட தொடங்கி உள்ளது. இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் சட்டமன்றம் செயல்பட போகிறது. லடாக் ஒன்றியப்பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மட்டும் இடம் பெறும். இந்தியாவின் மற்ற ஒன்றியப் பகுதிகளை நிர்வகிப்பது போல் இந்திய அரசால் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நாளில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு புதிய ஒன்றியப் பகுதிகள் நடைமுறைக்கு வருவதைக் கொண்டு, வானொலி நிலையங்களும் மறுபெயரிடப்பட்டுள்ளன. ஜம்முவில் அமைந்துள்ள வானொலி நிலையம் அகில இந்திய வானொலி ஜம்மு என மறுபெயரிடப்பட்டது. சிறிநகர் மற்றும் லே ஆகிய நிலையங்கள் முறையே அகில இந்திய வானொலி, சிறிநகர் மற்றும் அகில இந்திய வானொலி லே என மறு பெயரிடப்பட்டுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,322.