உலகினரால் சயின்ஸ் என்று அழைக்கப்படுகிற, இயல்அறிவு தமிழர் உள்ளிட்ட உலகினரால் சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. இயற்றமிழில் இருபெரும் பகுதியில் ஒன்றே இயல்அறிவு என்றும், இயற்றமிழை நிறைவிக்க இயல்கணக்கும் தேவை என்றும், தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகை முன்னெடுப்பிற்கு, இயல்அறிவு என்றால் என்ன? இயல்கணக்கு என்றால் என்ன என்று விளக்குவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5126: 1. உலகில் தமிழினம் மட்டுமே செம்மையாகவும் தெளிவாகவும் நிறுவியது இயல்கணக்கு 2. தமிழ்முன்னோரால் நிறுவப்பட்ட இலக்கியம், காப்பியம் (இலக்கணம்) நிமித்தகம் (சோதிடம் சாதகம்) கணியம் (நியுமராலஜியின் மூலம்) மந்திரம் (மாயமல்ல மனஆற்றல்) எனும் ஐந்து பெரும்பகுதிகளைக் கொண்டது இயல்கணக்கு. 2. தமிழ்முன்னோர் நிறுவலில்- இடத்தின் அடிப்படையானது இயல்கணக்கு 3. தமிழ்முன்னோர் நிறுவலில்- விசும்பின் முயக்கம் குறித்தது இயல்கணக்கு 4. தமிழ்முன்னோர் நிறுவலில்- எண்ணின் அடிப்படையானது இயல்கணக்கு 5. தமிழ்முன்னோர் நிறுவலில்- மாற்றத்தின் அடிப்படையானது இயல்கணக்கு 6. உலகினரில் தனிமனிதச் சான்றோர்களால் அவரவர் விருப்பத்திற்கு இடுகுறியாக கற்பிக்கப்படுவது இயல்கணக்கு 7. தமிழ்முன்னோர்கள் ஆசிரியர் தளத்தில் இருந்து தெளிவாக நிறுவியதும், உலகினரில் தனிமனித வழிகாட்டிகளால் மதமாகவும் அரசியல் கோட்பாடாகவும் திணிக்கப்படுவதும் இயல்கணக்கு 9. இயல்அறிவு வளர்ச்சியையும், கடவுளிடம் கேட்டுப்பெற முடிகிற, சாத்தியம் உள்ளது இயல்கணக்கு 10. தமிழ்முன்னோர் நிறுவலில்- விசும்பு என்கிற கடவுளின் முயக்கத்தின் பாற்பட்டது இயல்கணக்கு 11. தமிழ்முன்னோர் நிறுவலில்- கடவுளிடம் சொந்த இடத்தைக் உருவாக்குவதற்கு கற்றுத்தருகிறது இயல்கணக்கு 12. தமிழ்த்தொடராண்டு 1400ல் பிராமணர்கள் வரவுக்கு முந்தைய ஒட்டு மொத்த நாவலந்தேய இந்தியாவிலும் தமிழினத்தால் நிறுவப்பட்டிருந்த ஒப்புரவுக்குக் காரணமாய் அமைந்தது இயல்கணக்கு 13. கல்வித்திட்டத்தில் இணைத்து, ஒட்டுமொத்த உலகமும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட, நடப்பில் உள்ள மதங்கள் அரசியல் கோட்பாடுகளை நீர்த்துப்போகச்செய்யும் இயல்கணக்கு. 14. கல்வித்திட்டத்தில் இணைத்து, ஒட்டுமொத்த உலகமும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட, உலக ஒப்புரவை சாத்தியப்படுத்தும் இயல்கணக்கு.
ஒட்டுமொத்த உலகமும் செம்மையாகவும் தெளிவாகவும் நிறுவியது சயின்ஸ் என்கிற இயல்அறிவு.
உலகினரால் நிறுவப்பட்ட பரியியல் (பிசிக்ஸ்) வேதியியல் (கெமிஸ்டிரி) உயிரிஇயல் (பயாலஜி) கணக்கு (ஒர்க்ஷாப் கால்குலேசன்) வரைபடம் (என்ஜினியரங் டிராயிங்) எனும் ஐந்து பெரும்பகுதிகளைக் கொண்டது இயல்அறிவு.
காலத்தின் அடிப்படையானது இயல்அறிவு
நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு திரங்களின் இயக்கம் குறித்தது இயல்அறிவு.
எழுத்தின் அடிப்படையானது இயல்அறிவு
மாறா இயல்புகள் குறித்தது இயல்அறிவு.
உலகினரின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பறைசாற்றுவது இயல்அறிவு.
தமிழினம் உள்ளிட்ட ஒட்டு மொத்த உலகினரால் ஆசிரியர்களைக் கொண்டு வளர்த்தெடுக்கப்படுவது இயல்அறிவு.
இயல்கணக்கில் எந்த மாற்றத்தையும் தடுத்திடும் கணிப்புகளை நிறுவஇயலாதது இயல்அறிவு.
தமிழ்முன்னோர் நிறுவலில்- நிலம், நீர், தீ, காற்று என்கிற இறையின் இயக்கத்தின் பாற்பட்டது இயல்அறிவு.
புவியில் சொந்த இடத்தை உருவாக்குவதற்குக் கற்றுத்தருகிறது இயல்அறிவு
இன்றுவரை உலகில் ஒப்புரவு அமைந்து விடாமல் பாகுபாட்டையுடம் முரணபாட்டையும் தக்கவைக்க காரணமாய் இருந்து கொண்டிருப்பது இயல்கணக்கைக் கொண்டாடாத உலகினரின் இயல்அறிவு.
இயல்கணக்கை கொண்டாடி, முன்னெடுக்கப்படும் போது, மதங்களும் அரசியல் கோட்பாடுகளும் மறைவதால், பாகுபாடு முரண்பாட்டின் வீழ்ச்சியைச் சாத்தியப்படுத்தும் இயல்அறிவு.
இயல்கணக்கை கொண்டாடி, முன்னெடுக்கப்படும் போது, பாகுபாடும் முரண்பாடும் மறைந்து, ஒப்புரவில் உயிரிய பொருளாதார மேம்பாட்டைச் சாத்தியப்படுத்தும் இயல்அறிவு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,091.