மந்திரம் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே. உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் நினைப்பில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். அதை நீங்கள் நிறைவேற்றிதரும் வகைக்கு உங்களுக்கான வெற்றி சாத்தியமாகும். நமக்கு நமது தாய் தந்த இரண்டு உடைமைகள்: அவளின் குருதிப்பாலில் வளர்ந்த நம் உடம்பும் அவளின் மூச்சுக்காற்றில் நாம் கற்ற தமிழ்மொழியும். முதலாவது மந்திரத்தை தமிழுக்கே எழுத வேண்டும் என்றும், ஏன் என்றும் முந்தைய கட்டுரைகளில் விளங்கிக் கொண்டுள்ளோம். இந்த கட்டுரையில் இரண்டாவது மந்திரத்தை நமது உடம்புக்கு எழுதவேண்டுவது குறித்து விளங்கிக் கொள்வோம். தமிழில் உடம்பை பேணுவதற்கு நலங்கு என்கிற ஒரு நடைமுறை பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வளைகாப்பு, திருமணம் ஆகியவற்றின் போது கருவுற்றுள்ள தாயுக்கும், மணமக்களுக்கும் நலங்கு வைத்து அவர்களுக்கு காப்பு செய்கிற முறை தொடர்ந்து வந்து கொண்டுதாம் இருக்கிறது. மகளிரின் பூப்பு நன்னீராட்டின் போதும் நலங்கு வைக்கிற முறைமை தொடர்கிறது. குழந்தைகளுக்கு ஐம்பொன், வசம்பு வளைவியால் காப்பு செய்து நலங்கு பேணுகிற முறையும், பொங்கலின் போது ஆவாரை, பீளைப்பூ, வேப்பங் கொழுந்து அகியவைகள் மூலம் காப்பு கட்டி நலங்கு செய்கிற முறையும் தொடர்ந்தே வருகிறது. அம்மன் கோயில் திருவிழாக்களில் பூ மிதிக்கிறவர்களுக்கும், காவடி எடுக்கிறவர்களுக்கும், திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கும் கங்கணம் கட்டி நலங்கு பேணுகிற முறையும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் முன்னிலை, பாடர்க்கையில் தமிழ்மக்கள் நலங்கு பேணுகிற முறையாக உள்ளது. ஆனால் ஒவ்வொருவரும் தனக்கு என்று நலங்கு பேணுகிற முறை ஒரு நடைமுறையாக முன்னெடுக்கப் படுவதில்லை. தற்போதைக்கு நாம் உடம்பு சரியில்லாமல் போனால் மட்டும் மருத்துவரை நாடுகிறோம். நமது நலங்காக இருப்பது பல்துலக்குதலும், குளித்தலும் மட்டுமாக உள்ளது. உணவு பேணல் கூட அவ்வளவாக இல்லை. நாம் சுவைக்காக சாப்பிட்டு வருகிறோம். எது எப்படி இருந்தாலும் சரி. பல் துலக்குவதற்கும், குளிப்பதற்கும் முன்பு உங்கள் தாய் உங்களுக்குத் தந்த முதல் உடைமையான உடம்புக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதாக ஒரு மந்திரத்தைக் கட்டி அன்றாடம் ஓதி வாருங்கள். இந்த வகைக்கு உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்பார் திருமூலர் அவர்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பது தமிழ்ப் பழமொழியும் கூட.
11,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது கலை. மற்ற இரண்டு கலைகள் ஒன்று சோதிடம் சாதகம் உள்ளடங்கிய நிமித்தகம், இரண்டு கணியம் ஆகும்.
நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா
நலங்கு பாடவா பாடவா
என்றெல்லாம் பாடப்பட்ட பாடல்கள் எல்லாம் தற்போது நடைமுறையில் இல்லாமல் போய்விட்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,198.