Show all

மனிதர்களைப் பற்றி நீங்கள் அறிந்த சில உளவியல் உண்மைகளைக் கூற முடியுமா?

வேறொரு தளத்தில், மனிதர்களைப் பற்றி நீங்கள் அறிந்த சில உளவியல் உண்மைகளைக் கூற முடியுமா? என்று என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இன்றைய நாளில், ஐரோப்பிய இயல்அறிவு (சயின்ஸ்) சார்பில், உளவியல் என்று முன்னெடுக்கப்படுகிற தலைப்பை பழந்தமிழ்நாட்டில், தமிழ்முன்னோர் அகத்தியம் என்ற தலைப்பில் ஆய்ந்தனர். அந்த அடிப்படையில் தமிழர் முன்னேற்றத்திற்கு நிமித்தகம், கணியம், மந்திரம் என்று மூன்று முன்னேற்றக் கலைகளை உருவாக்கினர். 

கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலமாக பார்ப்பனியர்கள் அந்தக் கலைகளின் அடிப்படைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முயலாமல், தங்கள் அறியாமைகளை கற்பனைகளால் நிறைத்து தங்கள் கலைபோல அந்தக் கலைகளில் மக்களை முட்டாள்கள் ஆக்கியும், வருமானம் ஈட்டியும், கொண்டாடி வருகின்றனர். 

இன்றைய ஐரோப்பிய இயல்அறிவு சார்பில் அந்தக் கலைகளுக்கு மாற்றாக உளவியல் என்ற துறையை முன்னெடுத்து நடைமுறைப்படுத்த முயன்று வருகிறோம். அந்தக் கலைகளில் பார்ப்பனியர் திணித்த கற்பனைகளை அகற்றி மீட்டெடுக்கமாட்டா சோம்பலில் இன்றைய தமிழ்அறிவர்களும் அவற்றை மூடநம்பிக்கை என்ற போர்வையில் முற்றாக மறைக்கும் அவலத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நீங்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு, தமிழ்அறிவர்களின் அந்த மூடநம்பிக்கைப் போர்வையை அகற்றி, அங்கே பார்ப்பனியக் கற்பனைகளுக்குப் பின்னால் ஒளிரும் செய்திகளைக் கொஞ்சமாக உங்களுக்குக் காட்டிட முனைகிறேன்.

இயற்கை என்ற பொருள் பொதிந்த தமிழ்ச் சொல்லின் உருவாக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

இயல் பொருந்தியது இயற்கை. இயல் என்பதில் இயமும் இயக்கமும் இருக்கிறது. இயம் என்பது கோட்பாடு. தமிழியம், பார்ப்பனியம், மார்க்சியம் என்றெல்லாம் சொல்லுகிறோம் அல்லவா? இயக்கம் என்பது நடைமுறை. 
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தௌளிய ராதலும் வேறு.
என்கிற திருக்குறளில் நாம் தெளிவு படுத்த விரும்புகிற இயற்கை என்பது இயல் பொருந்தியது. இயல் என்பது இயமும் (தௌளியராதல்) இயக்கமும் (திரு) இணைந்தே இயங்குவது. 

இன்றைக்கு கருத்து முதல்வாதம் என்றும் பொருள்முதல் வாதம் என்று பிரித்துப் பேசுகிற செய்தியில் தமிழ்முன்னோருக்கு உடன்பாடில்லை. இரண்டும் சேர்ந்தே இயங்குவன என்கிறது இந்தக் குறள்.

ஆக உங்கள் கேள்வியில் இருக்கிற மனிதர்களுக்கு மட்டுமல்ல இயற்கையில் அனைத்திற்கும் அடிப்படை இயல்பு இரண்டுதாம்  அவை கருத்தும் பொருளும். அதாவது நிருவாகமும் உழைப்பும். அந்த இரண்டு இயல்புகள் ஈன்றெடுக்கிற மூன்றாவது இயல்புதான் முனைப்பு. அதாவது அம்மாவிடம் தூக்கலாக இருக்கிற உழைப்பு இயல்பு, அப்பாவிடம் தூக்கலாக இருக்கிற நிருவாக இயல்பு, பிள்ளைகளிடம் தூக்கலாக இருக்கிற முனைப்பு இயல்பு. 
இந்த மூன்று இயல்புகளும் அமைந்து அதில் ஏதாவதொன்று தூக்கலாக அமைந்து வர மூன்றை மூன்றால் பெருக்கிவரும் ஒன்பது இயல்புகள் கிடைக்கின்றன. 

அந்த ஒன்பதின் அடிப்படையை எண்ணத்திற்கும் எண்ணிற்கும் அமைத்தான் தமிழன். ஆக முதல் அடிப்படை இயல்புகள் உழைப்பு, நிருவாகம் என இரண்டு. சார்பு அடிப்படை இயல்புகள் உழைப்பு, நிருவாகம், முனைப்பு என்கிற மூன்று. கிளை அடிப்படை இயல்புகள் உழைப்பு, நிருவாகம், முனைப்பு, பயணம், கலை, தொழல்நுட்பம், கமுக்கம், புகழ், போரியல் என்று  ஒன்பது ஆகும். அந்த ஒன்பது இயல்புகள் எண்ணங்களுக்கு ஒன்றிலிருந்து ஒன்பது வரை எண்கள் பொருத்தப்பட்டன. 

ஆக மனிதர்கள் உழைப்பு, நிருவாகம், முனைப்பு, பயணம், கலை, தொழல்நுட்பம், கமுக்கம், புகழ், போரியல் என்கிற ஒன்பது உளவியல் இயல்புகளில் இருப்பார்கள். 

மனிதர்கள், தங்கள் பெயரை மாதுளம் பழத்திற்கான இயல்பில் அமைத்துக் கொண்டு, ஆசையை மாம்பழம் தின்பதில் வைத்துக் கொண்டு, தென்னந்தோப்பில் தேடலை முன்னெடுக்கின்றனர் என்பதே- மனிதர்களைப் பற்றி நான் அறிந்த சில உளவியல் உண்மை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறக முன்னெடுத்தால், வாழ்க்கையின் பெரும்பகுதி விரக்தியில் கழியும் என்று தெரிவித்து தேடலை ஒழுங்கு படுத்துகிற கலைகளே நிமித்தகம், கணியம், மந்திரம் என்கிற முன்னேற்றத்திற்கு தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்று கலைகள். 

இவை நீங்களே கற்றுத்தேர்வதற்கான கலைகளாகவே தமிழர் முன்னெடுத்தனர். பார்ப்பனியர் இவைகளை தங்கள் வாழ்மானத்திற்காக, மூடநம்பிக்கைகளோடு பொருத்தி, நம்மை வழிநடத்தும் வகைக்கு வருமானம் ஈட்டி வருகின்றனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.