தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் கொண்டாடும் போது, அந்தக் கொண்டாட்டம் உங்கள் அதிகாரம் ஆகிறது. மாறாக அயல் அடையாளத்தில் கொண்டாடும் போது உங்கள் கேட்புகள் கடவுளை நேரடியாகச் சென்றடையாமல், அயலின் வரிசைப்பாட்டுக்கு உள்ளாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். என்று தெரிவித்து, மாயோனை இழந்த நாளில் மாயேன் மீட்பு நாளாகக் கொண்டாடி மனமகிழ்ச்சி பெறுவோம் என்று அறிவுறுத்துவதற்கானது இந்தக் கட்டுரை. 10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5126: இன்று மாயோன் திருநாள். இன்று இரவு ஒன்பது நாற்பதுக்கு தொடங்குகிறது தேர் நாள்மீன். மயோன் திருநாளை ஆவணி மாதத்து தேர் நாள்மீனில் நெடுங்காலமாக கொண்டாடி வந்திருந்தனர் தமிழ்முன்னோர். மனமகிழ்ச்சி என்கிற மாட்சிக்குரிய மாயோனை கிருஷ்ணனாக பிராமணர் மடைமாற்றிய நாளும் இந்த நாளே. பிராமணர்களுக்கு திதியே அடிப்படை என்கிற காரணம் பற்றி, மாயோன் திருநாளை கோகுலஷ்டமி என்றும் கிருஷ்ண ஜெயந்தி என்றும் திதி அடிப்படையாகக் கொண்டாடத் தொடங்கினர். சில ஆயிரம் ஆண்டுகளாக நாமும் பிராமணிய அடிப்படையிலேயே மாயோன் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் கொண்டாடும் போது, அந்தக் கொண்டாட்டம் உங்கள் அதிகாரம் ஆகிறது. என்பதைப் புரிந்து கொண்டு இன்றைய நாளை மாயோன் திருநாளாக தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தி மகிழ்கிறோம். இன்றைய நாளில் ஒற்றை மந்திரத்தில் நம் வாழ்க்கையை முற்றாக மாற்ற முடியும் என்று ஐந்திணைக் கோயில் நமக்கு வடிமைத்துக் கொடுத்திருக்கிற குடும்ப, குடும்ப உறுப்பினர் காப்பு மந்திரத்தை ஓதத் தொடங்குவோம். இன்று முதல் தமிழ்அடிப்படையிலேயே அனைத்துத் தெய்வங்களையும் வழிபடுவோம் என்று உறுதி எடுப்போம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,083.