Show all

இன்று பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்! இது உலகியல்; பழந்தமிழகம் வேறுவகை

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் நாள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச நாள் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுஅவை பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச நாள் ஒன்றினைப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 

இது பெண்களுக்கு பாதுகாப்பளிக்கிற உலகளாவிய இன்றைய நிலையாகும். பெண்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து முன்னேற வாய்ப்பளிக்காமல், பெண்கள் சட்டத்தின், சமுதாயத்தின் சந்து பொந்து இண்டு இடுக்குகளில் அவர்களாக முனைந்து முன்னுக்கு வர முயல்வதால் மட்டுமே பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். 

பத்து ஆண்டு, இருபது ஆண்டு கழித்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை எனக்குந்தான் இயக்கம் (மீடூஇயக்கம்) என்று சொல்லி அதிலும் அசிங்கப் பட்டுப் போகிற அவலத்தைதான் தற்போது காண்கிறோம்.

அனிதா மருத்துவம் படிக்க விரும்பினால் நிட்டை வைத்து கதவை மூடுகிறோம். இதற்காகத்தான் பெரும்பாலான தமிழ்ப் பெண்கள், திருமணத்தைத் தேர்ந்தெடுத்து குடும்பத் தலைவி என்ற பணியைத் தேர்வு செய்து விடுகிறார்கள்.

இது இக்கால தமிழக நிலைதான். ஆரியர், ஆரியரைத் தொடர்ந்து பல்வேறு அயலவர் வருகைக்கு முந்;தைய தமிழகத்தில் தமிழகப் பெண்கள் எல்லாத்துறைகளிலும் சிறப்பாக உலா வந்திருக்கிறார்கள். அரசியாகவும் இருந்திருக்கிறார்கள், அமைச்சராகவும் இருந்திருக்கிறார்கள். அரசர்களையே நெறிப்படுத்துகிற புலவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். 

தமிழகத்தில் மன்னன் அதியமானை நெறிப்படுத்தி நெல்லிக்கனி பெற்ற ஒளவையார் போல, யாரெல்லாம் பெண்பாற் புலவர்களாக அன்றைய தமிழக அரசியலில் கோலோச்சியிருக்கிறார்கள் என்று தேடினால் மனம் நிறைவடையும் அளவிற்கு பட்டியல் நீள்கிறது. 

1.அச்சியத்தை மகள் நாகையார்

2.அள்ளுரர் நன்முல்லை

3.ஆதிமந்தி

4.இளவெயினி

5.உப்பை

6.ஒக்கூர் மாசாத்தியார்

7.கரீனா கண்கணையார்

8.கவியரசி

9.கழார் கீரன் எயிற்றியார்

10.கள்ளில் ஆத்திரையனார்

11.காக்கை பாடினியார் 

12.காமக்கணிப் பசலையார்

13.காரைக்காலம்மையார்

14.காவற்பெண்டு

15.காவற்பெண்டு

16.கிழார் கீரனெயிற்றியார்

17.குட புலவியனார்

18.குமிழிநாழல் நாப்பசலையார்

19.குமுழி ஞாழல் நப்பசையார்

20.குறமகள் இளவெயினி

21.குறமகள் குறிஎயினி

22.குற மகள் இளவெயினியார்

23.கூகைக்கோழியார்

24.தமிழறியும் பெருமாள்

25.தாயங்கண்ணி

26.நக்கண்ணையார்

27.நல்லிசைப் புலமை மெல்லியார்

28.நல்வெள்ளியார்

29.நெட்டிமையார்

30.நெடும்பல்லியத்தை

31.பசலையார்

32.பாரிமகளிர்

33.பூங்கண்ணுத்திரையார்

34.பூங்கண் உத்திரையார்

35.பூதபாண்டியன் தேவியார்

36.பெண்மணிப் பூதியார்

37.பெருங்கோப்பெண்டு

38.பேய்மகள் இளவெயினி

39.பேயனார்

40.பேரெயென் முறுவலார்

41.பொத்தியார்

42.பொன்மணியார்

43.பொன்முடியார்

44.போந்தலைப் பசலையார்

45.மதுவோலைக் கடையத்தார்

46.மாற்பித்தியார்

47.மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி

48.மாறோக்கத்து நாப்பசலையார்

49.முள்ளியூர் பூதியார்

50.முன்னியூப் பூதியார்

51.வரதுங்க தேவியார்

52.வில்லிபுத்தூர்க் கோதையார்

53.வெண்ணிக் குயத்தியார்

54.வெள்ளி வீதியார்

55.வெறிபாடிய காமக்கண்ணியர்

என பட்டியல் நீளுகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கே கூட அவர்கள் விரும்பும் துறைக்கு செல்ல தடைபடுத்தாமல் இருந்ததுதான் பழந்தமிழகம். ஒற்றை நாள் அறிவித்து பெண்களுக்கெதிரான வன்முறை களைந்தவர்கள் அல்லர் பழந்தமிழர். அற்றை நாளும் பெண்கள்; பேணும் கருத்தினராக இருந்தனர் தமிழர்.

பாவம்! சசிகலா என்னும் ஒரு தமிழ்ப் பெண், ஆரியப் பெண்ணுக்குப் பின், அகத்தே இருந்து தமிழகத்தை ஆண்ட போது, பாதுகாப்பாய் இருந்தவர், புறத்தே வரவிரும்பியபோது கிடைத்தது சிறைச்சாலையல்லவா? அப்படியானல் புறத்தே களத்தில் நின்றிருந்த செயலலிதா அவர்கள் எத்தனை விழுப்புண்களை ஏற்று வாழ்ந்திருப்பார்.

இன்றைக்கு பெரும்பாலும் தமிழ்ப் பெண்கள் புறத்திற்கு வருவதில்லை. அப்படி வரும் போது பாதுகாப்பான துறைகளை அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பம் தேர்ந்தெடுத்துத் தருகிறது. நமது பழந்தமிழகம் போன்று, மீண்டும் எல்லாத் தமிழ்ப் பெண்களும் அவர்கள் விரும்பும் எல்லாத்துறைக்கும், புறத்தே வந்து ஒளிர, நமது பழந்தமிழகத்தின் நெறியான, 'தமிழியல்' மீட்கப் பட்டாக வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,982.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.