Show all

திடீரென ஏற்படும் மரணத்தினை சாதகத்தின் மூலம் கண்டறிய முடியுமா!

திடீரென ஏற்படும் மரணத்தினை சாதகத்தின் மூலம் கண்டறிய முடியுமா? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு, நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: திடீரென ஏற்படும் மரணத்தினை சாதகத்தில் கண்டறிய முடியுமா? என்றால், கண்டறிய முடியும் என்பதே விடை. கண்டறிந்ததுபோலவே மரணம் நிகழுமா என்றால் நிகழும் என்றோ நிகழாது என்றே அடித்துச் சொல்வதற்கு சாதகம் சோதிடம் என்று சொல்லப்படுகிற நிமித்தகக் கலையில் வழிஇல்லை. 

தமிழர்கள் இயல்கணக்கு என்ற தலைப்பில் முன்னெடுத்த மூன்று கலைகள் நிமித்தகம், கணியம், மந்திரம் என்பனவாகும். இவற்றுள் நிமித்தகத்தை விட மேம்படுத்தப்பட்ட முன்னேற்றக்கலை கணியம் ஆகும். கணியத்தை விட மேம்படுத்தப்பட்ட கலை மந்திரம் ஆகும். ஆக மந்திரம்தான் உறுதியானதும் தீர்மானமானதும் ஆகும்.

அந்த மந்திரக்கலை என்பது உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்கிற கலை ஆகும். ஆக சாதகக் கணிப்பில் கண்டறியப்பட்ட எந்தப் பலனையும் கணியத்தாலும் மந்திரத்தாலும் மாற்றிக் கொள்ள முடியும் என்பது உண்மையாகும். 

ஆகவே எந்தச் சோதிடரும் நடந்து முடிந்ததைச் சொல்லும் போது வியப்பூட்டுவதாக அமையும். ஆனால் அவர் சொன்னதொரு நல்ல பலன் நடக்காமல் போனதற்கு சாதகக் கணிப்போ, சோதிடரோ காரணமல்லர். உங்கள் தலையெழுத்தை உங்கள் விதியை அந்தப்பலன் உங்களுக்கு கிடைக்காது என்று நீங்கள் எழுதிக் கொண்டதுதான் பிழை. 

எந்தச் சோதிடரும் தங்கள் பிழைப்பிற்காக நிமித்தகம் கற்பதால் அதைவிட மேம்படுத்தப்பட்ட கலைகளான கணியம் மந்திரம் கற்பதில்லை. அப்படிக் கற்றால் சோதிடத்தின் மீதான நம்பிக்கையை அவர்களே தகர்க்க வேண்டியதாகிவிடும். 

மந்திரக்கலை குறித்து இந்த இணைப்பில் சென்று படித்துப் பாருங்கள்: http://www.news.mowval.in/Editorial/katturai/Manthiram-262.html

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.