Show all

மூன்று அகவை குழந்தை மீதான எப்படியும் ஏனும்

 

தற்காலத் தமிழன், முழுக்க முழுக்க பல்வேறு அயல்களின் மலைப்பில், குழந்தையின் இயல்பூக்கமான ஆற்றலைத் தொலைப்பதற்கு, ஆங்கில வழிக் கல்வி, அதற்கான பள்ளிகளைக் கருவியாகப் பயன்படுத்தி ஏதோ ஒரு அயலுக்கு பிள்ளைகளை அடிமையாக்கி அடிப்படை அற்ற வாழ்மானம் தருகின்றனர்.

16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: அயல்வழிக்கு தன் பிள்ளையை அடிமையாக்கும் முயற்சிக்கு அந்த பிள்ளையின் மறுப்பே முரண்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியாத இன்றைய தமிழ்ப் பெற்றோர்களின் ஆதங்கமான வினா.

அதிகாலை அன்றாடம் பள்ளிக்கு செல்ல தேம்பி தேம்பி அழும் மூன்று அகவை சின்ன பாப்பாவை எப்படி மகிழ்ச்சியாக அனுப்புவது? அவளே பள்ளியை அடைந்ததும் அழுகை நிறுத்தி அமைதியாகி விடுவது ஏன்? 

எட்டு மாதத்தில் உங்கள் குழந்தை அப்பா அம்மாவை போல என்னாலும் நடக்க முடியும்- நடக்க வேண்டும் என்று விசும்பில் பதிவு செய்தது. 

உங்கள் குழந்தை தனக்கான விதியை விசும்பில் எழுதிக் கொண்டு அந்த வகைக்கு சாதித்தது. 

மூன்றாவது அகவையில் அப்பா அம்மாவைப் போல என்னாலும் பேச முடியும்- பேசுவேன் என்று விசும்பில் பதிவிட்டு சாதிக்க முயலும் போது, அந்த வகைக்கு- 

அந்தக் குழந்தைக்கு ஒத்துழைப்பு அளிக்க தாயின் மடி வேண்டும். 

அந்தக் குழந்தைக்கு, தாத்தா பாட்டியின் கழுத்து வேண்டும். அந்த குழந்தைக்கு, பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் தோள் வேண்டும். 

ஆனால் அந்தக் குழந்தையின் விதியை அந்தக் குழந்தையால் எழுதமுடியாது இனிஎன்று, 

அதற்கு அதைப் பயிற்றுவிக்கும் வகைக்கு ஒரு அன்னிய ஆசிரியையிடம், ஆயாவிடம், ஒரு அன்னிய மொழி நிருவாகத்திடம் நீங்கள் கையளித்தால், 

அருவியில்கூட எதிர்நீச்சல் போடும் மீனைப்போல முரண்டு பிடிக்கத்தான் செய்யும் உங்கள் குழந்தை. 

உங்கள் குழந்தை பிடிக்கிற முரண்டை புரிந்து கொள்ளவும் மாட்டீர்கள், பணியவும் மாட்டீர்கள் நீங்கள், என்பதை உங்கள் குழந்தை புரிந்து கொண்டதால் அழுகையை நிறுத்தி அமைதியாகிறது. 

இந்தப் பிஞ்சுக் குழந்தையின் இயல்பூக்கத்தில் அந்தக் குழந்தை, குப்புற விழுவது. தவழ்வது, மண்டி போடுவது, எழுந்து நிற்பது, நடப்பது என்பதிலிருந்து கற்றுக்கொண்டவைகளின் அடிப்படையில் ஓகக் கலையை நிறுவினர் தமிழ்முன்னோர். 

அந்தக் குழந்தை மூன்று அகவையில், நான் என் தாயைப்போல, தந்தையைப் போல பேசுவேன் என்று விசும்பில் பதிவிட்டு ஐந்து அகவைக்குள் முற்றாக தமிழைக் கற்றுவிடும் அடிப்படையில் இருந்து மந்திரக்கலையை நிறுவினர் தமிழ்முன்னோர்.

ஆனால் தற்காலத் தமிழன், முழுக்க முழுக்க பல்வேறு அயல்களின் மலைப்பில், குழந்தையின் இயல்பூக்கமான ஆற்றலைத் தொலைப்பதற்கு, ஆங்கில வழிக் கல்வி, அதற்கான பள்ளிகளைக் கருவியாகப் பயன்படுத்தி ஏதோ ஒரு அயலுக்கு பிள்ளைகளை அடிமையாக்கி அடிப்படை அற்ற வாழ்மானம் தருகின்றனர்.

அது அந்தப் பிள்ளைகளின் ஐம்பத்தெட்டு அகவை வரைக்குமான வாழ்மானம் மட்டுமே. அடுத்த தலைமுறையும் இதேபோல காலங்காலத்திற்கும் முயலவேண்டி இருப்பதற்கான முன்னெடுப்பாக இது அமையும்.

உங்கள் பிள்ளையை மகிழ்ச்சியாக பள்ளிக்கு அனுப்புதற்கான அகவை ஆறு ஆகும். அதற்கு அந்தப்பிள்ளை முழுமையாக தமிழை (தாய்மொழி) பேசக்கற்றிருக்கும். 

பள்ளியில், தான் முற்றாக அறிந்திருக்கிற அந்த பேச்சையே எழுத்தாக்கும் பயிற்சியில் அந்தக் குழந்தை தனித்துவமான படைபாற்றலை கற்றுக் கொள்ளும். அழகிய தமிழில் எண்களையும் வாய்பாடுகளையும் கற்றுக் கொள்ளும் போது, நாம் கற்றது கைமண்ணளவு நாம் இந்தக் கல்வியில் கற்கப்போவது கடலளவு என்று உலகின் விரிவை இயல்பூக்கமாக புரிந்து கொள்ளும். 

தம்மின் தம்மக்கள் அறிவுடைமையை கொண்டாடும் தமிழ்மண்ணில் ஆசிரியரின் தோளில் அமர்ந்து உலகை விரித்துப் பார்க்கும் ஆற்றல் பெறும், உங்கள் பிள்ளை.

அந்த வகையில் தமிழ்மக்கள் அனைவரும் முயன்றால்-

தமிழர்களில்- உலகின் முதல் பத்து தொழில் அதிபர்கள் இயல்பாகக் கிடைப்பார்கள்

தமிழர்களில்- உலகின் முதல் பத்து வணிகர்கள் இயல்பாகக் கிடைப்பார்கள். 

தமிழர்களில்- உலகின் முதல் பத்து வேளாண் பெருமக்கள் இயல்பாகக் கிடைப்பார்கள்.

தமிழர்களில்- உலகின் முதல் பத்து ஊடகப் பெருமக்கள் இயல்பாகக் கிடைப்பார்கள்.

தமிழர்களில்- உலகின் முதல் பத்து கல்வியாளர்கள் இயல்பாகக் கிடைப்பார்கள்.

தமிழர்களில்- உலகின் முதல் பத்து அறிஞர் பெருமக்கள் இயல்பாகக் கிடைப்பார்கள்.

தமிழர்களில்- உலகின் முதல் பத்து கலைஞர்கள் இயல்பாகக் கிடைப்பார்கள்.

தமிழர்களில்- உலகின் முதல் பத்து ஊடகப் பெருமக்கள் இயல்பாகக் கிடைப்பார்கள்.

இப்படி உலகின் எல்லாத் துறைகளிலும் தமிழ்மக்கள் நிறைந்து காணப்படுவார்கள்:-

உடைமையாளர்களாக, வணிகர்களாக, தனித்திறமையாளர்களாக, வேளாண் பெருமக்களாக, ஒப்பந்தக்காரர்களாக! நிருவாகக் கூலிகளாகவோ உடல்உழைப்புக் கூலிகளாகவோ அல்லாமல்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,450.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.