Show all

ஆஸ்மாசிஸ் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் என்ன! தேடலுக்கு வாய்ப்பு வழங்கிய பீட்டர்ராசன் ஐயா அவர்களுக்கு நன்றி

சான்றோர்த்தளம் அமைப்பின் நிறுவனரும், வேண்டும்- துறைதோறும் தமிழ், சிறப்பாக வணிகத்தமிழ் என்கிற முழக்கத்திற்கு சொந்தக்காரரும், நீரியல் துறையில் நெடிய தேடலும் அனுபவமும் உள்ளவரும், நீரியல் சார்ந்து நூல்கள் வெளியிட்டும், தொடர்ந்து நூல்வெளியிடும் முன்னெடுப்பில் உள்ளவரும் ஆன இனிய நண்பர் பீட்டர்ராசன் ஐயா அவர்கள் ஆஸ்மாசிஸ் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் சொற்கள் சிலவற்றை தேடி வைத்திருந்தாலும், இன்னும் சிறப்பான சொல்லைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், எனக்கும் அந்த வகைக்கு ஒரு வாய்ப்பை வழங்கினார். ஆதில் நான் முன்னெடுத்த தமிழாக்கம் குறித்தது இந்தக் கட்டுரை.

26,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆஸ்மாசிஸ் என்ற ஆங்கிலச் சொல் ஒருவகையான நிறைவுப்பாட்டை குறிக்கும் வகைக்கான சொல்லாகத் தெரியவருகிறது. பேராலிசிஸ்;, சிஸ்டமேடிக் சிஸ்டோலிக் போன்ற ஆங்கில சொற்களில் சிஸ் என்பதற்கு ஒரு வகையான ஒரு மாதிரியான அல்லது ஒரு 'முறை' என்பதாகப் பொருள் கொள்ளும் வகைக்கு அந்த சொற்கள் ஒத்துழைக்கின்றன. ஆஸ்மோ என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு பின்னிய சொல் வேர்ச்சொல் என்பது போல தேடல் முடிவுகள் கிடைக்கின்றன. ஆஸ்மோ என்பது வாசனை, காற்று, போன்ற சொற்களுக்கு தொடர்புடையதாக அறிந்து கொள்ள முடிகிறது.

நடைமுறையில் நாம் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிற சவ்வூடு பரவல் என்கிற சொல்லாக்கம் ஆஸ்மாசிஸ் செயல்பாட்டினை விவரிக்கிற வகைக்கு சவ்வு ஊடுதல் பரவுதல் என்று முன்று சொற்களை இணைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த மொழியாக்;கத்தில் பரவுதல் என்ற செயலுக்கு வேலையில்லை. பரவுதலிலோ பரப்புதலிலோ தடையேதும் இருக்க வாய்ப்பு இல்லை. 

இங்கே ஆஸ்மாசிஸ் செயலில் சவ்வு ஒரு மெல்லிய தடையாக இருப்பதால் ஊடல் மட்டும் போதுமானது.

தலைவனின் நெஞ்சை தலைவி ஊடி உண்மையறிவதற்கான செயலே ஊடல் என்கிறது திருக்குறள்.
ஊடல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் 
கூடி முயங்கப் பெறின்
என்கிறது திருக்குறள். 
மெல்லிய சவ்வை நீரடர்த்தி மிகுந்த கரைசல் நீரடர்த்தி குறைந்த கரைசலின் நிரடர்த்தியை நிறைக்க சவ்வை ஊடுகிறது. 

நிறைத்தல் என்பது வினை நிறைவடைந்ததை நிரை என்று குறிக்கிறது யாப்பிலக்கணம். 
யாப்பிலக்கணத்தில் கவிதையின் ஓசைக்கான அசைகளை நிரை என்றும் நேர் என்றும் சொல்லப்படுகிறது. 
குறில் தனித்தும் ஒற்றுப் பெற்றும், நெடில் தனித்தும் ஒன்றுப் பெற்றும் வருவது நேர் (நேரசை) ஆகும். 
குறில் இணைந்தும் ஒற்றுப் பெற்றும், குறில் நெடில் இணைந்தும் ஒற்றுப் பெற்றும் வருவது நிரை (நிரையசை) ஆகும்.

ஆக ஆஸ்மாசிஸ்சுக்கு ஊடல் நிரை என்கிற இரண்டு சொற்களை இணைத்துப் பயன்படுத்திக் கொள்வது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆஸ்மாசிஸ் என்பதைத் தமிழில் நிரையூடல் என்று மொழியாக்கம் செய்யலாம்! 
தாவரங்கள், தரை நீரை உறிஞ்சும் வகைக்கு கொண்டுள்ள ஒரு செயல்பாடே ஆஸ்மாசிஸ் எனப்படுகிறது. நீரியல் தொழில் நுட்பத்தில் ஆஸ்மாசிஸ்சுக்கு மாறுபாடன ரிவர்ஸ் ஆஸ்மாஸ்சிஸ் என்கிற நடைமுறை பேரளவாக பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 
ஆக இந்த ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் என்கிற சொல்லுக்கான தமிழாக்கத்தின் தேவை இன்னும் கூடுதலாகவே உள்ளது. ஆஸ்மாசிசுக்கு நிரையூடல் என்றால் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்சுக்கு என்ன சொல்;லலாம் என்பதற்கு மீண்டும் யாப்பிலக்கணத்தில் துணையையே நாடலாம். யாப்பிலக்கணத்தில் நிரைக்கு எதிரான சொல் நேர் என்கிற நிலையில்- 
ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் என்பதை தமிழில் நேரூடல் என்று மொழியாக்கம் செய்யலாம்! 
ரிவர்ஸ் என்கிற சொல்லை தனியாக மொழிபெயர்த்து நிரையூடல் என்கிற சொல்லுக்கு முன் தலைகீழ் என்கிற ஒட்டைச் சேர்த்து தலைகீழ் நிரையூடல் என்று சொல் அமைப்பது தமிழ் அடிப்படைக்குப் பொருந்தாது. வாய்ப்புக்கு நன்றி ஐயா. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,213. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.