23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகில் தமிழன் மட்டுந்தான் தனது கோளான இந்தப் புவியை உலகம் என்றும், தனது பெருநிலப் பரப்பை நாவலந்தேயம் என்றும், தான் உழுது விளைத்து வாழும் மண்ணை தமிழ்நாடு என்றும் அவனே பெயர் வைத்துக் கொண்டு அவன் வைத்த பெயரிலேயே அந்தப் பகுதிகளை அவன் அழைக்கிறான். அந்தப் பெயர்களையே உலகம் முழுவதும் அந்தப் பகுதிகளை அழைக்கப் பயன் படுத்துகிறார்கள். தமிழன் உலகம் (உல்- உருண்டையான) என்று வைத்த பெயரிலேயே உல்டு என உலகம் வழங்கி வருகிறது. தமிழன் நாவலந்தேயம் என்று அழைத்த பெயரிலேயே உலகம் இந்தேயா- இந்தியா என்று அழைத்து வருகிறது. தமிழன் தன்னுடைய நாட்டை தமிழ்நாடு என்று சொல்ல உலகமும் டமில்நாடு என்றே அழைக்கிறது. அமெரிக்காவிற்கு அமெரிக்கன் வெஸ்புகி என்பவன் வைத்த பெயர் விளங்குகிறது. இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா. மத்தியபிரதேசம், உத்தரப் பிரதேசம் என்பனவெல்லாம் அந்த மண்ணின் மக்கள் தங்கள் நிலத்தை அடுத்தவர் அழைத்த பெயரில் புழங்கி வருகிறார்கள். உத்தரப் பிரதேசம். மத்தியப் பிரதேசம், வங்காள தேசம் என்பவைகளில் உள்ள நாட்டைக் குறிக்கும் தேசம் என்கிற சொல் தேயம் என்கிற பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழில் இருக்கிற தமிழ்ச்சொல். 'பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ்' என்று தான் காங்கிரஸ் கட்சி ஹிந்தியில் எழுதும். நாடு என்பதை ஹிந்தி, சமஸ்கிருதம் மற்றும் உருது மொழிகளில் ராஷ்டிரம் என்ற சொல்தான் புழங்கி வருகிறது. ஹிந்தி மொழிக்கு ஹிந்தி என்று பெயர் வைத்தவர்கள் முகமதியர்கள். உலகில் தமிழன் மட்டுமே தனக்குத் தானே பெயரிட்டுக் கொண்டு மற்றவர்களை அந்தப் பெயரில் அழைக்கச் செய்கிற ஆற்றல் பொருந்தியவன். நாவலந்தேயமே இந்தியாவானது: நான்காயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர். இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர். அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம். உலகம்- தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம். உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம். இந்தியா குறித்து ‘நாவலந்தேயம்’ என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது. அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - India என்று பதிவு செய்தனர். அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே. வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற்றை ஒப்பு நோக்குங்கள். அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது- ஆரியர் அராபியர் மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால், அவர்கள் வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவலindiaம் இல்லை. நாகரிகத் தமிழர் இல்லை. பிந்தைய வரலாறு நாம் அறிந்ததுதானே. நாவலந்தேயத்தை- ஆங்கிலத்தில் india என்கிறோம் வடஇந்தியர்கள் பாரத் என்றே எழுதுகின்றார்கள் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,054.