தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும், ஐம்பது அகவைக்கு மேற்பட்ட தொன்னூற்று ஒன்பது விழுக்காட்டு தமிழ் அறிஞர்களிடம் மீடுக்கு பேசிகூட இல்லை என்பது உலக வியப்புக்கள் பட்டியலில் இணைக்க வேண்டிய செய்தியாகும். 07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: என்ன மச்சி! என்று ஒருவர் கீச்சு பதிவிட, அதை பத்தாயிரம் பேர்கள் விருப்பம் தெரிவிப்பதும், ஆயிரம் பேர்கள் பகிர்வு செய்வதுமான மிடுக்குபேசி ஆளுமை காலம் இது. இந்தக் காலத்தில்தான், தமிழகம் முழுவதும் பல நூறாயிரம் தமிழ் அறிஞர்கள் அவர்கள் சக்திக்கு உட்பட்டு நூறு இருநூறு பேர்களிடம் மிக அதிக பட்சமாக ஓர் ஆயிரம் பேரிடம் தொடர்ப்பில் இருப்பது வியப்பான செய்தியாகும். அதிலும் ஐம்பது அகவைக்கு மேற்பட்ட தொன்னூற்று ஒன்பது விழுக்காட்டு தமிழ் அறிஞர்களிடம் மீடுக்கு பேசிகூட இல்லை என்பது உலக வியப்புக்கள் பட்டியலில் இணைக்க வேண்டிய செய்தியாகும். என்ன மச்சிகள், எண்ணிமத்தளத்தில்- பத்தாயிரம் பேர்கள் விருப்பம், ஆயிரம் பேர்கள் பகிர்வு என்பதை மாதக்கணக்கில் சாதித்து விடுவார்கள். தமிழகம் முழுவதும் பல நூறாயிரம் தமிழ் அறிஞர்கள், அவர்கள் சக்திக்கு உட்பட்டு நூறு இருநூறு பேர்களிடம் மிக அதிக பட்சமாக ஓர் ஆயிரம் பேரிடம் தொடர்ப்பில் என்கிற சாதிப்புக்கு தங்கள் அகவை காலம் முழுவதையும் அதற்கே செலவிட்டவர்களே. இந்தத் தமிழறிஞர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? 1.தங்கள் நட்பு மற்றும் சுற்றங்களிடம் அவர்களின் குழந்தைகளுக்குப் தமிழ் பெயரிட வற்புறுத்துகின்றார்கள். தமிழகத்தில் தற்போது இப்படி இருக்கும் தமிழ்அறிஞர்கள், சங்க கால தமிழகத்தில் அப்படி இருந்தார்கள். முழுமையாக அனைத்து ஒலிப்புகளையும் எழுதிவிடக் கூடிய, உயிர் பனிரெண்டு மெய் பதினெட்டு என்கிற முப்பது ஒலியன்களை உருவாக்கி, உலக மொழிகளில் தமிழ் எழுத்து ஒலிப்பு முறைகளே தற்கால கணினிக்கும் பயன்படுத்தத் தக்கது என்பதாக சாதித்தார்கள். இன்றைக்கும் தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் வகைக்கான தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை எழுதி வைத்துள்ளார்கள். மோசிகீரனார் என்பவர் ஒரு புலவர். சேரமான், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணக் சென்றார். அப்போது அவன் அரண்மனையில் இல்லை. புலவர் நெடுந்தொலைவிலிருந்து வந்த இளைப்பால், அரச முரசு வைக்கப்படும் கட்டிலில் ஏறிப் படுத்து உறங்கிவிட்டார். அப்போது முரசும் நீராட்டி தூய்மைப்படுத்த வெளியே சென்றுளது. அம்முரசு கட்டில் குலதெய்வம்போல் கருதப்படும் முரசு வைக்கப்படும் சீரிய இருக்கையாகும். மெத்தென்று அமைக்கப்பட்டதாகும். அதன்மீது எவர் ஏறினும் கொலைக் குற்றத்திற்கு ஆளாவார். இவ்வளவு சட்ட திட்டங்களோடு கூடிய முரசு கட்டிலில் புலவர் ஏறி நன்கு உறங்குவாராயினர். வெளியே சென்ற அரசன் அரண்மனைக்குள் வந்தனன். முரசு கட்டிலில் படுத்துறங்கும் புலவரைக் கண்டனன். வேறு எவரேனும் அங்குப் படுத்திருந்திருப்பரேல், அவரை தனது வாளால் இரு கூறு படுத்தி இருப்பன். ஆனால், யாது செய்தனன்? புலவர் உறங்கி எழுந்துணையும் விசிறி கொண்டு வீசலானான். இப்படியான வரலாற்றுக் சொந்தக்காரர்கள் இந்த தமிழ்அறிஞர்கள். நினைவு கூர்வோம். தமிழ்அறிஞர்களின் அதிகாரங்களை மீட்டெடுத்து தமிழுக்கு மீண்டும் உயர்வு கொடுப்போம்.
2.சிலர் கையெழுத்துப் பிரதி இதழ்கள் நடத்தி சுற்றுக்கு விடுகின்றார்கள்.
3.சிலர் ஐநூறு ஆயிரம் அச்சுப்பிரதிகள் வெளியிட்டு சிற்றிதழ்கள் நடத்துகின்றார்கள்.
4.திருக்குறளின் பெருமையைப் பரப்புகின்றார்கள்
5.தூய தமிழிலேயே பேசுகின்றார்கள்.
6.சின்ன சின்ன அறைக்கூட்டங்களில் பேச்சரங்கம் கவியரங்கம் நடத்துகின்றார்கள்.
7.பெரிய இதழ்களுக்கு தங்கள் படைப்புகளை அனுப்பி வெளிவருமா வெளிவருமா என்று காத்திருக்கிறார்கள்.
8.பேரக்குழந்தைகளிடம் தமிழின் பெருமை குறித்து பேசுகின்றார்கள்.
9.திமுகவின் தொடக்க கால உறுப்பினர் என்று சொல்லி சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
10.குறைந்தது பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்விதான் தமிழர்களை உலக அரங்கில் நிமிர்த்த உதவும் என்று கருத்துப் பரப்புதல் செய்து வருகின்றார்கள்.
11.விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பெருமிதத்தைத் தொடர்ந்து கொண்டாடி வருகின்றார்கள்.