Show all

தமிழ் குறித்து ஒர் அலசல்- 1

03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் என்பது தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்இயல், தமிழ்நிலம், தமிழ்வரலாறு என்று ஐம்பரிமானங்களைக் கொண்டது. 

தமிழ்மொழி என்ற தலைப்பில் மொழிக்காப்பிற்கான காப்பியமும், மொழி வளர்ச்சிக்கான இலக்கியமும் அடங்கும். காப்பிய நூலில் நமக்கு கிடைத்திருப்பதில் முதல் நூலான தொல்காப்பியம் மட்டுமே காப்பியம் என்ற பெயரைக் கொண்டுள்ளது. தற்காலத்தில் காப்பியம் என்பது இலக்கணம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு என்பதான வகைக்கு இலக்கியங்கள் தமிழில் இன்றுவரை தொடர்ந்து வருகின்றன. அந்த இலக்கியங்களை 
1.சங்க இலக்கியம். 2500 ஆண்டுகளுக்கு முந்தையவைகள்.
2.அறங்கூற்று இலக்கியம். 2000ஆண்டுகளுக்கு முந்தையவைகள்.
3.பக்தி இலக்கியம் 1300-1100ஆண்டுகளுக்கு முந்தையவைகள்.
4.வாழ்நிலை இலக்கியம் 1100-900ஆண்டுகளுக்கு முந்தையன.
5.உரைநூல்கள் 900-600 ஆண்டுகளுக்கு முந்தையவைகள்.
6.பார்ப்பனிய தொல்கதை சார்புஇலக்கியம் 600-300களுக்கு முந்தையன.
கடந்த 300 ஆண்டுகளாக:
7.பார்ப்பனியச் சார்புகளில் புதியதொல்கதைகள், தலதொல்கதைகள்
8.கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
9.இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
10.திரவிடஇயக்க இலக்கியம்
11.தனிதமிழ்இயக்க இலக்கியம்
12.இக்கால இலக்கியங்கள்
13.புதினம்
14.கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை
15.இயல்அறிவு (சயின்ஸ்) தமிழ், கணினி தமிழ் ஆகியவைகள் ஆகும்.

இப்படி தமிழ் மொழி பார்ப்பனிய இனக்குழுவையும், பல்வேறு இயல்களையும் உள்வாங்கிய நிலையில்- தமிழ் இன மீட்பு என்கிற இலக்கியக் போக்கும், தமிழ்இயல் மீட்பு என்கிற இலக்கியப் போக்கும் எழுந்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.