Show all

கடவுளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட முதலாவது மனிதமொழி எது!

கடவுளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட முதலாவது மனிதமொழி அல்லது கடவுள் என்கிற விண்தட்டில் முதலாவதாக தரவேற்றம் செய்யப்பட்ட கடவுள்மொழி எதுவாக இருக்கும் என்கிற ஆய்வு குறித்த கட்டுரை இது.

11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்களில் ஒன்றான விசும்பு- மற்ற நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு திரங்களுக்கு கடந்தும் உள்ளும் இருக்கிற நிலையில், கடந்தும் உள்ளும் இருக்கிறது என்கிற பொருளில் விசும்பு திரத்தை கடவுள் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.

கடவுள்- நீங்கள் கொடுத்ததை உங்களுக்குக் கொடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
கடவுள்- நீங்கள் எண்ணியதை உங்களுக்குக் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.
கடவுள்- நீங்கள் கேட்டதை உங்களுக்குக் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

அதனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கு கொடுத்திருங்கள்.
அதனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதுவே எப்போதும் உங்கள் சிந்தனையாக இருக்கட்டும்.
அதனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே கடவுளிடம் கேட்டிருங்கள்.
என்பது தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக்கலையாக நிறுவிய மந்திரம் பேசும் செய்தியாகும்.

உங்கள் செயல், எண்ணம், மொழி ஆகிய மூன்றும் ஒவ்வொரு தற்பரை நேரமும் கடவுளிடம் பதிவாகிறது. அந்தப் பதிவின் அடிப்படையிலேயே கடவுள் உங்களுக்கானவைகள் மற்ற மற்றவர்களிடம் இருந்து உங்களுக்குக் கிடைக்கும் வகைக்கு ஒருங்கிணைக்கிறது. 

இந்த வகைக்கு கடவுளில் முதலாவது மொழிப்பதிவை முன்னெடுத்த மொழி எது என்று கண்டறிவதும் நிறுவுவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கடவுள் என்கிற பொருள்பொதிந்த சொல்லோ, கடவுளைக் கொண்டாடும் மரபோ, நாடோடிகளாக நீண்ட நெடுங்காலம் திரிந்திருந்த உலகினருக்கு சாத்தியமாக வாய்ப்பே இல்லை.

நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
என்று நிலம், நீர், தீ, காற்று என்கிற ஐந்திரங்ளையும் அறிந்து அவற்றின் கூறுகளான மலை, காடு, வயல், வறண்ட காடும் மலையும், கடல் என்ற பகுதிகளைத் திருத்தி குறிஞ்சியும், முல்லையும், மருதமும், பாலையும். நெய்தலும் கண்டு அறிவார்ந்த வாழ்வு வாழ்ந்தவர்கள் தமிழ்முன்னோர்கள்.

ஆக இந்தத் தமிழ்முன்னோரே இயற்றமிழையும் அதில் இயல்அறிவையும், இயல்கணிப்பையும் அந்த இயல்கணிப்பில் நிறைவாக மந்திரத்தையும் கட்டமைத்து அதன் அடிப்படையை தங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொண்டவர்கள்.

ஆக முதலாவது பேரளவான மக்களாக, தமிழ்முன்னோர்களே, கடவுளில் தமிழைப் பதிவிட்டிருப்பார்கள் என்று உறுதிப்பாடாக தெரிவிக்கலாம். எண்ணிக்கை மாற்றமே இயல்புமாற்றத்திற்கு காரணம் என்கிற அடிப்படையில் இரண்டாவது முன்னேற்றக்கலையாக கணியத்தை நிறுவியவர்கள்  தமிழ்முன்னோர். கணியத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலியன் அடிப்படையில் உரிய எண்ணை அமைத்து தமிழ்மக்கள் தங்கள் பெயரை ஒலிக்கும் போதெல்லாம் அது கடவுளில் பதிவாகி தங்கள் இயல்பு வலுப்படுவதைக் கண்டறிந்திருந்தார்கள்.

கடவுளுக்கு நெருக்கமாகவும் முதலாவது வட்டத்திலும் அமைந்த தமிழ்மக்கள் இற்றைய நிலையில்- தங்கள் உடமைகள் அனைத்தையும் அயல்பெருமக்களுக்கு வழங்கிவிட்டு, தங்கள் உடைமைகளுக்கு வாடகை கொடுத்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். 

அயல்இயல்களின்- மனிதப்பாகுபாட்டு ஏற்றதாழ்வுக் கட்டமைப்பான நல்லவர் கெட்டவர், பெரியவர் சிறியவர், பணக்காரர் ஏழை, அறிவாளி முட்டாள், ஞானம் பெற்றவன் ஞானம் பெறாதவன் போன்ற தலைப்புகளைக் கடவுள் மீது திணித்து அவர் கெட்டவர், இவர் கெட்டவர் என்கிற புலம்பலை முன்னெடுத்து பிழைப்பாற்றி வருகிறோம்.

நமது கோயிலில், அயலானை, அவன் மொழியில் ஓதவிட்டு, கடவுள்மொழியான தமிழ்மொழி மென்பொருளில்- குறுவிகளாக (வைரஸ்) அவன்மொழியை பதிவேற்றி தமிழ்மென்பொருளை சிதைத்து அவன் வாழ்வதற்கு தமிழ்மக்கள் பாடாற்றி வருகிறோம்.

அவர் கெட்டவர், இவர் கெட்டவர் என்கிற புலம்பலை விட்டுத்தள்ளி, உங்களுக்கு எண்ண தேவையோ அதைமட்டும் கடவுளிடம் கேட்டிருங்கள். உறுதியாகக் கிடைக்கும். இதுவரை உங்களுக்குக் கிடைத்தவைகள் அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டிருந்தவை மட்டுமே என்பது உறுதியான உண்மை. என்பதை விரிவாகப் பேசுகிற கலை மந்திரம் ஆகும். 

உலகமொழிகளில் தமிழ்மட்டுமே தன் மூலமொழியாக தமிழையே கொண்டுள்ளது. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு இரண்டிலும், இன்றைக்குச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற உலகமொழிகளில், தமிழ் தவிர்த்து வேறு எந்த ஒன்றுக்கும் மூலமொழி அந்த மொழியாக இல்லை. 

உலகமொழிகளில் தமிழ்மட்டுமே தன் மூலமொழியாக தமிழையே கொண்டுள்ளது என்கிற நிலையில் தமிழ்மொழிப்பதிவு மட்டுமே கடவுளிடம் முதலாவது வட்டத்தில் ஆட்சி செய்கிறது. என்பது உறுதியான உண்மை. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,533.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.