மக்களின் ஒற்றுமை மதத்திலா, இனத்திலா அல்லது மொழியிலா எதன் அடிப்படையில் அமைதல் வேண்டும்? என்று என்னிடம் வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடை இக்கட்டுரை. 22,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகின் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு தனிமனிதச் சான்றோரால் முன்னெடுக்கப்பட்டு விரும்புவோரால் பின்பற்றப் பட்டு வருகிறது. அந்த மதத்தை முன்னெடுத்த அந்தச் சான்றோரைத் தாண்டி அந்த மதத்தினர் புதிதாக சிந்திக்க உலக மதங்கள் எதுவும் அனுமதிக்காது. உலகில் பேராதிக்க மதங்களாக இருப்பவை கிறித்துவம், மகமதியம், புத்தம், சமனம், ஹிந்து, என்கிற ஐந்து மதங்கள் மட்டுமே. இவற்றுள் புத்தம், சமனம், ஹிந்து, என்கிற மூன்று மதங்களும் பாரதம், காந்தாரம், ஹிந்துஸ்தான் என்கிற தலைப்புகளில் கொண்டாடப்படுகிற வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள் ஆகும். அவற்றுள் ஒவ்வொரு மதத்திலும் வௌ;வேறு கிளைப்பிரிவுகளை பின்பற்ற வேண்டிய அடிப்படைகளை மாற்றி மாற்றி புரிந்து கொள்ளும் வகைக்கு தனிமதங்கள் போல இயங்குகின்றன. மேலும் வட இந்தியாவின் சீக்கிய மதம், சீன பாரம்பரிய மதம், இனக்குழு மதங்கள், ஆப்பரிக்க பாரம்பரிய மதங்கள் ஸ்பிரிட்டிசம், யூதம் என்கிற மதங்களும் உலகில் தனித்து இயங்கி வருகின்றன. உலகில் தமிழர்கள் மட்டும், மதம் இல்லாத தனித்துவமானவர்கள். தமிழ்மொழிக்கு தொடர் சங்கங்கள் வைத்து எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற வளமையான தமிழை கட்டமைத்தும்- தமிழுக்கு மட்டுமல்லாமல் தமிழர் வாழ்க்;கைக்கும காப்பியம் என்கிற பொருள் இலக்கணத்தைக் கட்டமைத்தும்- வாழ்ந்து வரும் பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்களாக இயங்கி வருகின்றோம். தம்மின் தம்மக்கள் அறிவுடைமையை கொண்டாடி புதுமைகளையும் வரவேற்று பண்பாடு பிறழாமல் வாழ்ந்து வருகிறோம். ஆனல், தம்மின் தம்மக்கள் அறிவுடைமையை மறுக்கிற உலக மதம் எப்படி ஒற்றுமைக்கான அமைப்பாக இருக்க முடியும்? மதங்கள் இருக்கும் வரை மதங்களின் பேராதிக்கவாதம் இருந்து கொண்டே இருக்கும். அடுத்து இனம் என்கிற தலைப்பிற்கு வருகிறபோது- இனம் என்பதைத் தூய்மையாகப் பேணிக் கொண்டிருப்பதாக எந்த இனமாவது மார்தட்டிக் கொள்ள முடியுமா? இனத்தை ஆண்வழியாக மட்டும் அடையாளப்படுத்துகிற ஆணாதிக்கவாத அமைப்பு முறை இருந்து வருகிறது. இப்படிப் பெண்ணடிமைத் தனம் தொடரும் வரை இன ஒற்றுமை எப்படி சாத்தியமாகும்? மொழி என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் தாய் தன்மூச்சுக்காற்றால் தந்த முதல் உடைமை ஆகும். அவன் எத்தனை மொழி படித்தாலும் அவன் சிந்தனை மொழியும் ஆளுமை மொழியும் அவன் தாய்தந்த மொழியாகவே அமையும். அவன் எத்தனை பல்கலைக் கழகங்களில் எத்தனைப் பட்டம் பெற்றாலும் அவனுக்கான இயல்பு அவனின் தாய்மடிபல்கலைக்கழத்தில்தான் உருவாகி அவன் ஆளுமையில் அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருகிறது. மொழி என்பது ஒவ்வொரு தனிமனிதனின் தனிஉடைமை. மொழியின் மூலமாக கட்டமையும் ஒற்றுமை மட்டுமே எத்தனை தலைமுறைக்கும் இந்த உலகம் பெருவெடியில் அழிந்து போகும் காலம் வரை தொடர முடியும். கூகுள் மொழிபெயர்ப்பில் 120 மொழிகளில் மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும். எட்டுத்திக்கின் எத்தனை மொழிகளின் கலைச்செல்வங்களையும் ஒற்றை நிறுவனத்தால் திரட்டித் தரமுடிகிறது. தனிப்பட்ட மொழித்திணிப்பையோ தனிப்பட்ட மொழி ஆதிக்கத்தையோ முன்னெடுக்க வேண்டிய நிலை இந்த நிறுவனத்திற்கு ஏற்படவில்லை. ஆக மொழி அடிப்படையில் மட்டுமே- ஒவ்வொரு மனிதனும் தனித்துவமாகவும், மொழிஅடிப்படையான இனங்களாகவும், ஒட்டுமொத்த உலகத்தை புரிந்து கொள்ளும் வகையாகவும் இயங்க முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,209.