Show all

ஆரியர்களின் தொல்லிடம்

ஆரியர்கள், பிராமணர்கள், பார்ப்பனியர்கள் என்கிற தலைப்புகளில் கிடைக்கும் தரவுகளில் இருந்து, ஆரியர்கள் என்பதே அவர்கள் அவர்களுக்கு வைத்துக் கொண்ட தலைப்பு என்பதை விளக்கியும், நிலவாழ் உயிரிகள் உயிர்த்த இடம் இமயமே என்கிற அடிப்படையில், ஆரியரின் தொல்லிடம் இமயத்தின் வடக்குச்சாரல் என்று நிறுவும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.

02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126:

ஆரியர்கள் என்கிற தலைப்பு பிராமணர்கள் தங்களுக்குத் தாங்களே வைத்துக் கொண்ட தலைப்பு.

பிராமணர்கள் என்கிற தலைப்பு வடநாவலந்தேயத்திற்கு வருகை புரிந்த ஆரியர்களுக்குத் தமிழர் வைத்த தலைப்பு.

பார்ப்பனியர்கள் என்கிற தலைப்பு தமிழர்களில் சிலர் தங்களைப் பிராமணர்கள் ஆக்கிக் கொள்ள முயன்று இன்றுவரை தனிஇனமாக இருந்து வருகிறவர்களுக்கு அமைந்த தலைப்பு.

ஆரியர்களின் பிறப்பிடம் இமயத்தின் வடக்குச் சாரல்.

ஆரியர்கள் தங்கள் வாழும் பகுதியை செருமானியம் வரை விரித்துக் கொண்டே சென்றனர்.

அவர்களில் சிலரால் தொடங்கப்பட்ட, மீண்டும் இமயம் காண கிளம்பிய பிராமணப் பயணக்குழுவின் தொல்லிடம் (பூர்வீகம்) செருமானியத்திலிருந்து ஈரான் வரையிலான பகுதியாகும். 

செருமானியத்தில் தொடங்கிய பிராமணியப் பயணக்குழுவில் ஈரானியம் வரையிலாக பலரும் கலந்து கொண்டனர்.
அவர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக இமயத்தின் தெற்கு சாரலுக்கு வந்து சேர்ந்தனர். 

அப்போது நாவலந்தேயம் என்கிற பெயரில் அமைந்திருந்த இந்தியாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள், ஆடை நாகரிகம் அடையாத அவர்களைப் பேரம்மணர் என்று அழைத்து புகலிடம் அளித்தனர்.

பேரம்மணர்கள் தங்களை தங்கள் மொழியில் பிராமணர் என்று மாற்றிக் கொண்டனர்.

வட நாவலந்தேய தமிழ்ப்பெண்களோடு திருமண உறவு கொண்டு தங்கள் இனத்தை படிப்படியாக விரித்துக் கொண்டனர். அவர்களின் வழித்தோன்றல்களே வட இந்தியாவில் இருக்கிற அத்தனை இனங்களும்.

தமிழர்கள் என்கிற தலைப்பு தமிழர்கள் தங்களுக்கு வைத்துக் கொண்ட தலைப்பு.

திராவிடர்கள் என்கிற தலைப்பு பிராமணர்கள் தமிழர்களுக்கு வைத்த தலைப்பு.

ஆரியச்சார்பு கலாச்சாரத்தைக் கொண்டாடிய காரணம் பற்றி தமிழரில் இருந்து தனித்தனி இனங்களாகப் பிரிந்த, தமிழர்களின் வழித்தோன்றல்கள் ஆன தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகிய இனங்களை திராவிடர் என்கிற தலைப்பில் அழைத்தனர் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்.

ஆனால் இந்தியாவின் தென் இந்திய இனங்கள் எதுவும் தங்களை திராவிடர் என்று அழைத்துக் கொள்ள விரும்பவில்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,166.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.