உங்கள் கடவுள் கேட்பில், உங்கள் குலதெய்வத்தையும் வேண்டியிருப்பது, உங்கள் வலிமையான வெற்றிக்கு வேண்டப்படுகிற காரணியாகும் என்பதை தெளிவாக விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை. 21,தை,தமிழ்த்தொடராண்டு-5124: உங்கள் கேட்பு எதுவானாலும் அதைக் கடவுள் உங்களுக்காக முன்னெடுக்க, கேட்புப் பதிவில், கடவுளின் உங்கள் அடையாளம்- உங்கள் பெயரும், உங்கள் பெயர் அமைந்த மொழியும். கடவுள் மட்டுமே உங்கள் கேட்புகளை ஒருங்கிணைக்கும் மற்றும் நிறைவேற்றித்தரும் ஆற்றல் மூலம். கடவுள் ஒன்று. நாம் இந்தக் கட்டுரையில் பேசவிருப்பது குலதெய்வங்கள் குறித்து ஆகும். கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு. கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு. இறைக்கூறு தெய்வங்கள் இருவகையின. முதலாம் வகை நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கும் ஆன மாயோன், வேந்தன், கொற்றவை, வருணன் ஆகியன. இறைக்கூறு தெய்வங்களில் இரண்டாம் வகையினவே இந்தக் கட்டுரையில் நாம் காணவிருக்கிற குலதெய்வங்கள். பெற்றோர் உள்ளிட்ட முன்னோர்களே குலதெய்வங்கள் ஆவார்கள். உயிர் காலமான முன்னோர்களின் கூட்டியக்கச் சுழியங்களே, சுழியங்கள் என்கிற தரவுகளே, குலதெய்வங்கள் ஆகும். ஒவ்வொரு குலதெய்வமும் ஒரு சுழியநூல் (மின்னூல் மாதிரி) ஆகும். தமிழ்முன்னோர் நிறுவிய முதனெப்படுவது இடமும் காலமும் என்பதில் இடம் என்பது கடவுள். காலம் என்பன தனிஒன்றுகள். தனிஒன்றுகள் அனைத்தும் நிலம், நீர், தீ, காற்று என்கிற இறைகள் ஆகிவிட்ட நிலையில், உயிர் காலமான முன்னோர்களின் கூட்டியக்கச் சுழியங்கள்- தனிஒன்றுகள் இருந்த இடத்தில் பதிவாகி சுழியங்களின் காலம் என்கிற சுழியநூல்களின் நூலகமாக விளங்குகிறது. ஆக குலதெய்வங்களின் தொகுப்பு சுழியநூலகமாகும். நீங்கள் சுழியநூலகத்தில் நுழைந்து உங்கள் குலதெய்வங்களின் அறிவைப் பெற்றிட- உங்களிடம், வேண்டப்படும் உங்களுக்கான அடையாளம்- உங்கள் பெயரும், பெயர் அமைந்த மொழியும் ஆகும். எனக்கு நன்றாகப் பாடும் ஆற்றல் வேண்டும் என்பது, குலதெய்வத்திடம் (சுழியநூலகத்தில்) உங்கள் கேட்பு (தேடல்) ஆனால்- உங்கள் பெயர் எந்த மொழியில் அமைந்திருக்கிறதோ- அந்த மொழித் தொகுப்புக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் பெயர் பிறமொழியில் இருந்தால் அந்த மொழியினர் தொகுப்புக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே உங்களைப் போல அயல்மொழி பெயர் சூட்டிக் கொண்டிருந்த உங்கள் முன்னோர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக உங்கள் பெயர் சமஸ்கிருதத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்குமேயானால், ஆரியர் வரவுக்கு முந்தைய காலத்து முன்னோரின் சுழியநூல்களுக்கு உங்கள் தேடல் செல்லாது. மேலும் அவர்களில் உங்களைப் போல சமஸ்கிருதப் பெயர் வைத்திருந்தவர்கள் சுழியநூல்களில் பாடும் ஆற்றல் பெற்றிருந்தவர்களின் சுழியநூல்களை மட்டுமே எடுக்கும். எடுத்துக்காட்டாக உங்கள் பெயர் ஆங்கிலத்தில்; முன்னெடுக்கப்பட்டிருக்குமேயானால், பிரித்தானியர் வரவுக்கு முந்தைய காலத்து முன்னோரின் சுழியநூல்களுக்கு உங்கள் தேடல் செல்லாது. மேலும் அவர்களில் உங்களைப் போல ஆங்கிலப் பெயர் வைத்திருந்தவர்கள் சுழியநூல்களில் பாடும் ஆற்றல் பெற்றிருந்தவர்களின் சுழியநூல்களை மட்டுமே எடுக்கும். உங்கள் பெயர் உங்கள் எண்ணமொழியான தமிழில் அமைந்திருந்தால், தமிழின் மூலமொழியான இசைத்தமிழ் தாண்டி, இசைத்தமிழின் மூலமொழியான நாடகத்தமிழ் வரை சென்று உங்கள் மரபின் முதல் பெற்றோர் வரை பாடும் ஆற்றல் பெற்றிருந்தவர்களின் சுழியநூல்கள் அனைத்தும் எடுக்கப்படும். கடவுள் அத்தனை சுழியநூல்களையும் உங்கள் எண்ணத்தில் மீட்டி, 'எனக்கு நன்றாகப் பாடும் ஆற்றல் வேண்டும்' என்கிற உங்கள் கேட்பை நிறைவேற்றித்தரும் வகைக்கு சில வேலைககைளக் கேட்கும் அதை நீங்கள் நிறைவேற்றித்தர நீங்கள் நன்றாகப் பாடும் ஆற்றலைப் பெறுவீர்கள். தற்போது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிற குலதெய்வம் உங்கள் குலதெய்வத் தொகுப்பின் ஒரு குறியீடு மட்டுமே. அது- உங்கள் அண்மை முன்னோரில் வலிமையான ஒருவரின் தாய் ஆகவோ, தந்தையாகவே இருக்கலாம். அது அவரால் நிறுவப்பட்டு, நம்முடைய குலதெய்வத் தொகுப்பின் குறியீடாகவும் தொடர்கிறது. குலதெய்வக் குறியீடு தெரியாதவர்கள், தங்கள் முன்னோரில் தங்களைப் பெரிதும் கவர்ந்த யாரை வேண்டுமானலும் குறியீடாகக் கொண்டால், அது தானாகக் கடவுளிடம் பதிவாகிவிடும். உங்கள் குலதெய்வத் தொகுப்பு உங்கள் பெற்றோர் இருவரில் தொடங்கி, அவர்களின் பெற்றோர் நால்வர் எனத் தொடர்ந்து, 8, 16, 32, 64, 128, என தமிழின் மூலமொழியான இசைத்தமிழ் தாண்டி, இசைத்தமிழின் மூலமொழியான நாடகத்தமிழ் வரை சென்று உங்கள் மரபின் முதல் பெற்றோர் வரை மிக மிக வலுவான பிணைப்புக்குச் சொந்தமானது ஆகும். ஆக உங்கள் கடவுள் கேட்பில், உங்கள் குலதெய்வத்தையும் வேண்டியிருப்பது, உங்கள் வலிமையான வெற்றிக்கு வேண்டப்படுகிற காரணியாகும்.
அது வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடையது.
இறை நான்கு.
அவை நிலம், நீர், தீ, காற்று என்பன.
தெய்வங்கள் பல.
கடவுள் கூறு தெய்வங்கள், இறைக்கூறு தெய்வங்கள், குலதெய்வங்கள் என தெய்வங்கள் மூன்று வகையின.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,514.