Show all

இயல்கணக்கு, இயல்அறிவு ஒரு பார்வை

தமிழ் என்றாலே, முத்தமிழ் என்கிற நெடிய வரலாறும் பின்தொடர்ந்து வரும். முத்தமிழில் முதலாவது நாடகத்தமிழ், இரண்டாவது இசைத்தமிழ் மூன்றாவது இயற்றமிழ். இயற்றமிழுக்கு இயல்கணக்கு இயல்அறிவு என்கிற இருபெரும் பகுதிகள் உண்டு. என்று விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.

05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126:

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வளரத் தொடங்கிய, ஆங்கிலம் முன்னெடுத்துள்ள 'சயின்ஸ்' என்கிற தலைப்புக்கு நேரான தலைப்பாக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வளரத்தொடங்கிய தமிழ் கொண்டிருந்தது என்ன?
இயல்அறிவு!

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
என்று எண்ணையும் எழுத்தையும் சேர்த்தே கொண்டாடியிருந்த தமிழ்முன்னோர், எழுத்தின் விரிவான இயல்அறிவோடு, எண்ணின் விரிவான இயல்கணக்கையும் கொண்டிருந்தனர்.

உலகினர் இயல்அறிவு என்கிற சயின்சை மட்டுமே கொண்டுள்ளனர்.
இயல்கணக்கு குறித்த அறிதலோ, இயல்கணக்கு குறித்த தேடலோ, இயல்கணக்கை தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவியுள்ள நிலையில்- இயல்கணக்கு குறித்த புரிதலையோ இன்று வரை உலகினர் முன்னெடுத்திருக்கவில்லை.

இயல்கணக்கு, இயல்அறிவு இரண்டும் இயற்றமிழின் இரண்டு பகுதிகள் ஆகும்.

இயற்றமிழை ஆங்கிலத்தில் சயின்ஸ் இன் தமிழ் என்று சொல்ல முயலலாம்.

இயல்அறிவு என்கிற தமிழ்ச்சொல்லுக்கு நேர்ச்சொல்லாக ஆங்கிலத்தில் சயின்ஸ் என்கிற சொல் பயன்பாட்டில் உள்ளது.
சயின்ஸ் என்கிற ஆங்கிலச்சொல், சயின்டியா என்கிற இலத்தின் வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது. 

இயல்கணக்கை அவர்கள்; கையில் எடுக்கும்போது அதற்கு என்ன தலைப்பிடுவார்கள் என்று நாம் அறிய மாட்டோம்.

தற்போதைக்கு, இயல்கணக்கு என்கிற சொல்லில், தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருள் அடிப்படையில், இயல்கணக்கை தியோபிராக்ட் அரித்மெட்டிக் என்று நாம் ஆங்கிலப்படுத்தலாம். 

இயல்கணக்கை ஆங்கிலப்படுத்தும் அதே அடிப்படையில், இயல்அறிவை ஆங்கிலப்படுத்த முனைவோமானால் இயல்அறிவை தியோபிராக்ட் நாலொட்ஜ் என்று மொழிபெயர்க்க வேண்டியிருக்கும்.

இயல் என்கிற தமிழ்ச்சொல், இயம் என்கிற கோட்பாட்டையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் கொண்டுள்ளது. 

இயற்கை என்பதற்கு இயம் என்கிற கோட்பாட்டையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் கொண்டது என்று பொருள்.

இயல்அறிவு என்பது இயம் என்கிற கோட்பாட்டையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் பற்றிய அறிவு என்பதாகும்.

இயல்கணக்கு என்பதற்கு, இயம் என்கிற கோட்பாட்டையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் பற்றிய கணக்கு என்று பொருள் ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,047. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.