தமிழில் உள்ள பெரிய என்ற ஒப்பீட்டுச் சொல்லை வியந்த பார்ப்பனியர்கள் அதை பிர என்று சமஸ்கிருதத்தில் ஒலிமாற்றம் செய்து, உயர்த்திப் பிடிக்கும் வகைமைகளுக்கான நிறைய சொற்களை சமஸ்கிருத்ததில் உருவாக்கிக் கொண்டார்கள். அது குறித்து இந்தக் கட்டுரை பேசுகிறது. 07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122. தமிழில் உள்ள பெரிய என்ற ஒப்பீட்டுச் சொல்லை வியந்த பார்ப்பனியர்கள் அதை பிர என்று சமஸ்கிருதத்தில் ஒலிமாற்றம் செய்து, உயர்த்திப் பிடிக்கும் வகைமைகளுக்கான நிறைய சொற்களை சமஸ்கிருத்ததில் உருவாக்கிக் கொண்டார்கள். இந்த வகைக்கு அவர்கள் முதலாவதாக முன்னெடுத்த சொல்லாக பிரம்மணர் இருக்கலாம் என்று நிறுவிட வாய்ப்பு உள்ளது. தமிழ்த்தொடராண்டின் தொடக்க காலத்தில் வட நாவலந்தேயத்தில், நடப்பில் 'சிந்துவெளி நாகரிகம்' என்று தலைப்பிடப்படுகிற நாகரிகத்திலும், தென் நாவலந்தேயத்தில் சேர,சோழ,பாண்டிய மற்றும் குறுநில மன்னர்கள் ஆட்சி என்கிற நாகரிகத்திலும் தமிழ் என்கிற ஒற்றை மொழிமட்டுமே தளைத்து வந்தது. உலகின் முதல் கடலோடியாக தமிழ்முன்னோர், உலகின் கடற்கரை அமைந்த நாடுகளுக்கு எல்லாம் சென்று வணிகமாற்றி வந்தனர். அவர்களின் வணிகப்பொருட்கள் மெல்லிய துணி வகைகள், மயில்தோகை, முத்து, சுவையும் மணமும் கூட்டும் சமையல் பொருட்கள் ஆகியனவாக இருந்தன. வணிகமாற்றிய பொருள்களுக்கு பண்டமாற்றாக தமிழ்முன்னோர் வங்கியன பொன்னும் குதிரைகளும் ஆகும். தமிழ்த்தொடராண்டு 1100லிருந்து 1600க்குள் பாரசீக மண்ணில், ஆடை நாகரிகம் எய்தாத காலத்தில், அங்கிருந்து ஆடு, மாடு மேய்ப்பவர்களாக பெருங்கூட்டமாக ஆற்றங்கரை தேடியவர்களுக்கு கிடைத்தது வடபுல நாவலந்தேயம் ஆகும். வரலாற்றில் அவர்கள் ஆரியர்கள் என்று பேசப்பட்டாலும் தமிழ்மக்கள் அவர்களுக்குச் சூட்டிய தலைப்பு பேரம்மணர்கள் என்பது ஆகும். காரணம் அந்தப் பெருங்கூட்டத்தினர் வடநாவலந்தேயம் வந்தபோது ஆடை அணியக் கற்றிருக்க வில்லை என்பது ஆகும். இதே போன்ற நிகழ்வு தென் நாவலந்தேயமான தமிழ்நாட்டிற்கும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அம்மணக் கூட்டமாக வந்தவர்கள் சமணர்கள் ஆவார்கள். அவர்களுக்கு தமிழ்மன்னர்கள் ஊருக்கு வெளியே கல்படுக்கை அமைத்துக் கொடுத்தது வரலாறு ஆகும். வடநாவலந்தேயத் தமிழர்கள் பேரம்மணர்கள் என்றழைத்ததை பிரம்மணர் என்று அங்கீகரித்துக் கொண்டனர் பெருங்கூட்ட ஆரியர்கள். அம்மணமாக பெருங்கூட்டமாக வந்த ஆரியர்களை பேரம்மணர்கள் என்று நாவலந்தேய வடபுலத் தமிழர்கள் அழைக்க, அந்தப் பெயரிலேயே தங்களை பிரம்மணர்கள் என்று நிறுவிக்கொண்டார்கள் ஆரியர்கள். உடையுடுத்தி நாகரிகம் அடைந்த ஆரியர்கள், தங்களோடு கலந்த வடபுலத்தமிழர்களை இணைத்துக்கொண்டு அனைவரையும், பிரம்மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பதான நான்கு இனங்களில் தொழில் அடிப்படையாக முதன்மைத் படுத்தினார்கள். பின்பு அது பிறப்பு அடிப்படையாகக் கொண்டாடப்பட்டது. இந்தப் பட்டியலில் ஆரியர்களோடு கலக்காத நாவலந்தேய தென்புலத் தமிழர்கள் இடம்பெற மாட்டார்கள். ஆரியர்கள் நாவலந்தேய தென்புலத் தமிழர்களைத் திராவிடர்கள் என்றார்கள். தமிழைத் திரமிளம் திரமிடம் என்றே அவர்களால் ஒலிக்க முடிகிற காரணம் பற்றி. திராவிட இயக்கங்கள் ஆரியர் அழைத்த பெயரிலேயே தமிழினத்தை முடக்கும் வேலையை கடந்த ஐம்பதுக்கு மேலான ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர். 2. பிரம்மா இனி இந்த வரிசைச் சொற்கள் பலவற்றை பட்டியல் இடுவோம். இன்னும் தேடினால் நிறைய சொற்கள் கிடைக்கும். இந்தச் சொற்களின் தமிழ் மூலச் சொற்கள் எல்லாம் ஒப்பீட்டு அளவில் பெரியதானவைகளை குறிக்கப் பயன்பட்டிருப்பதை தாண்டி அவைகள் மட்டுமே பெரியவைகள் என்று பாகுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன இந்த பிர முன்னொட்டில் அமைந்த சமஸ்கிருதச் சொற்கள் அனைத்தும். இன்றைக்கும் ஒவ்வொரு தொழிலுக்கும் தொழிற்சங்கங்கள் இருப்பதைப் போல, சாதிகைளைத் தொழிற்சங்கங்களாக உரிமை பெறுவதற்கு பயன்படுத்தி வந்தனர் தமிழர். சாதிகளை ஜாதி என்று பிறப்படிப்படையாக்கி எற்றதாழ்வு கற்பிக்க நாம் கற்றுக் கொண்டது பார்ப்பனியர்களிடம் இருந்து. நாம் ஜாதிகளாக ஏற்றதாழ்வு கற்பித்து அடித்துக் கொண்டாலும் நம் எல்லாத் தமிழ்சாதிகளை விடவும் உயர்ந்த ஜாதியாக அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பனியர்களை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறோம்.
இவர்களின் இந்த வகை முன்னெடுப்பில் உருவான இரண்டாவது சொல் பிரம்மா என்கிற சொல்லாக இருக்க முடியும்.
பிரம்மாவை படைக்கும் தெய்வமாக, பிள்ளைகளை ஈன்றெடுக்கும் தாயை அம்மா என்பது போல, பெருமை கொள்ளத்தக்க அம்மாவாக பேர் அம்மாவை பிரம்மா என்று உருவாக்கியிருந்திருப்பார்கள் என்று கருதும் வகைக்கு, பிரம்மா என்ற பெயரில் பொருள் பொதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தெய்வத்திற்கு ஆண்பால் கற்பித்தது பிற்கால வழக்காக இருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.
3. பிரத்யோகம்
பிரத்யோகம் என்பது பெரிய அல்லது பேரளவான சிறப்பான பயன்பாடு என்பதை குறிப்பது ஆகிறது.
4. பிரம்மாண்டம்
பிரமாண்டம் என்பது பேரளவு
5. பிரபலம்
பிரபலம் என்பது பேரறிமுகம்
6. பிரமுகர்
பேரறிமுகர்
7. பிரசன்னம்
பேரளவான தோற்றம்
8. பிராகிருதம்
பேரளவான எழுத்துக்களைக் கொண்ட மொழி
9. பிரமோற்சவம்
பேரளவான விழா
10. பிரபல்யம்
பேரளவாக அறியப்பட்டவர்
11. பிரச்சனை
பெருஞ்சிக்கல்
12. பிரசாதம்
பெருஞ்சோறு
13. பிரக்கியாதி
14. பிரகடனம்
15. பிரகஸ்பதி
16. பிரகாசம்
17. பிரகாரம்
18. பிரகிருதி
19. பிரசங்கம்
20. பிரசண்டம்
21. பிரசம்
22. பிரசவம்
23. பிரசாபதி
24. பிரச்சாரம்
25. பிரசுரம்
26. பிரசித்தம்
27. பிரஞ்ஞை
28. பிரட்டம்
29. பிரட்டன்
30. பிரடை
31. பிரணவம்
32. பிரத்தியக்கம்
33. பிரதமர்
34. பிரதேசம்
35. பிரதோஷம்
36. பிரபஞ்சம்
37. பிரமசரியம்
38. பிரயத்தனம்
39. பிரமாணம்
40. பிரமாணி
41. பிரமாதம்
42. பிரமி
43. பிரமை
44. பிரயத்தனம்
45. பிரளயம்
46. பிரவாகம்
47. பிரயோசனம்
48. பிரவாளம்
49. பிரவீணன்
50. பிராணன்