விதி என்றால் என்ன? வாழ்க்கை விதிப்படிதான் அமையுமா? இளம் அகவை இறப்புகள் எதனால் ஏற்படுகின்றன? அதற்கு விதி காரணமா? தலைஎழுத்து விதி ஒன்றா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. நீங்கள் ஐந்து வினாக்களை எழுப்பியுள்ளீர்கள். ஒவ்வொரு வினாவிற்கும் உரியவிடை, தமிழ்முன்னோர் தளத்தில் இருந்து எளிதாகக் கிடைக்கிறது. 1. விதி என்றால் என்ன? உங்களுடைய அடிப்படை எண்ணிக்கையையும் இயல்பையும் எதற்கு கணித்துக் கொண்டிருக்க வேண்டும்? நீங்கள் கடவுளில் இயங்குகிற அடிப்படைக்குத்தானே கடவுள் உங்களை முயக்குகிறது. உங்களுக்கு விருப்பமானதைக் கடவுளிடம் கேட்டுப் பெற முடியுமே என்று தெரிவித்து அதற்கு மந்திரம் என்கிற மூன்றாவது முன்னேற்றக் கலையை நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். 2. வாழ்க்கை விதிப்படிதான் அமையுமா? 3. இளம் வயது இறப்புகள் எதனால் ஏற்படுகிறது? 4. அதற்கு விதி காரணமா? 5. தலை எழுத்து விதி ஒன்றா?
உங்களுடைய அடிப்படை எண்ணிக்கையும் இயல்புமே உங்களுக்கான விதி. அதைக் கணிப்பதற்கு தமிழ்முன்னோர் இரண்டு கலைகளை முன்னெடுத்துள்ளனர். முதலாவது: சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம். இரண்டாவது: கணியம்.
நீங்கள் முயாலதிருந்தால், உங்களுடைய அடிப்படை எண்ணிக்கையும் இயல்பும் என்பதான விதிப்படியும், நீங்கள் முயன்றால் உங்கள் முயற்சிப்படியும் அமையும்.
மனித உயிரிக்கான பொதுவான காலக்கெடுவே அனைவருக்கானதும் ஆகும். இறப்பு ஒருவரின் சொந்த பிழை அல்லது அறியாமை சார்ந்த முயற்சியாலும், அந்த ஒருவர் ஒப்புக்கொடுத்தவரின் அல்லது ஒப்புக்கொடுத்தவர்களின் பிழை அல்லது அறியாமை சார்ந்த முயற்சியாலும், அந்த ஒருவரின் காலக்கெடு முடிவு அல்லது இறப்பு முன்னதாக அமைந்து விடுகிறது.
இறப்பிற்கு ஒருவருடைய அடிப்படை எண்ணிக்கையும் இயல்பும் என்பதான விதி காரணம் இல்லை.
உங்களுடைய அடிப்படை எண்ணிக்கையும் இயல்பும் என்பதானது மட்டுமே விதி. தலையெழுத்து என்பது நீங்கள் கடவுளில் இயங்குவதால் கடவுள் உங்களை எப்படி இயக்க வேண்டும் என்று நீங்கள்தான் எழுதிக் கொள்கின்றீர். அது மண்யோட்டில் உள்ள கீறல்கள் அல்ல. தலைமைத்துவமான கடவுளுக்கு நீங்கள் வகுத்தளித்த சட்டப்புத்தகம். உங்கள் தலையெழுத்தை நீங்களும், நீங்கள் ஒப்புக் கொடுத்தவர்களும் எழுத முடியும். நீங்கள் ஒப்புக் கொடுக்காதவரால் உங்கள் தலையெழுத்தை எழுதவோ மாற்றவோ முடியாது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,672.