வானத்தைப் பார்த்தால் மனதில் ஏதோ மாற்றம் வரும் என்று கூறுகின்றனரே உண்மையா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு ஆம் உண்மைதான் என்று தெரிவிப்பதற்கும் தெளிவு படுத்துவதற்குமாக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126: உண்மைதான்! 1. கடவுளைப் பேரளவாகப் பார்க்கிற இந்தவகையில் உறுதியாக மனதில் மாற்றம் வரும். 2. தமிழ்ப் பெயர்களை ஒலிக்கிற போது மனதில் மாற்றம் வரும். எடுத்துக்காட்டு: தொல்காப்பியம், திருக்குறள், கணியன் பூங்குன்றனார், புறநானூறு இப்படிப் பல. 3. தமிழ்ப்பெயர் கொண்டவர்களுக்கு கடவுளில் சொந்தஇடம் இருக்கிறது. சொந்த இடம் கொண்ட அந்த மனிதர்களின் பெயரை ஒலிக்கும் போது உங்களில் ஒரு மாற்றம் வரும். 4. உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டும் போது அவர்கள் கடவுளில் சொந்த இடம் பெறுகிறார்கள். உங்கள் பிள்ளைகளை ஏதாவது செல்லப் பெயர் சொல்லி அழைக்காமல் நீங்கள் அவர்களுக்குச் சூட்டிய தமிழ்ப்பெயரில் அழைக்கும் போது உங்கள் மனதில் ஒரு மாற்றம் வரும். 5. உங்கள் தலைவியை (மனைவி) ஒரு ஐந்து மணித்துளிகள் உற்று நோக்கியிருங்கள். உங்கள் மனதில் ஒரு மாற்றம் வரும். எனெனில் உங்கள் மனைவி நீங்கள் இயங்கும் கடவுளாக இருக்கிறாள். உங்களின் இயக்கத்திற்கு உங்களை முயக்குகிறவள் உங்கள் தலைவி. கடவுள் கூறுகள் அனைத்தும், கடவுள் கூறு ஆன மனதில் உறுதியாக மாற்றத்தை உருவாக்கும். கடவுள் கட்டுரையையும், கடவுள் கூறு தெய்வம் குறித்த கட்டுரையையும் படித்தால் இந்தத் கருத்தை உங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் வண்டி, உங்கள் வீடு, உங்கள் கருவி, உங்கள் புத்தகம், நீங்கள் வடித்த படைப்பு என்று உங்கள் உருவாக்கங்கள், உடைமைகள் எதையும் கொண்டாடக் கொண்டாட உங்கள் மனதில் மட்டுமல்ல ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் உறுதியாக மாற்றம் வரும். எச்சரிக்கை: நீங்கள் இப்படியெல்லாம் கடவுள்கூறுகளைப் பார்ப்பதில் கட்டாயம் கமுக்கம் பேணவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வானம் என்பது கடவுளின் விரிந்த வெளி வடிவம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,068.