Show all

உங்களால் மழை பெய்விக்க முடியும்!

கடவுளைப் புரிந்து கொண்டு, யாராலும், உறுதியாக மழையைக் கூட பெய்விக்க முடியும் என்பது தமிழ்முன்னோர் வாழ்ந்து அறிந்த உண்மை. என்பதைத் தெளிவு படுத்துவதற்கான முன்னேற்றத் தகுதிக்கான படிப்புகள் குறித்த அறிமுகத்திற்கானது இந்தக் கட்டுரை.

14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126:

உங்களால் மழை பெய்விக்க முடியுமா? முடியும்! என்பதும் உண்மை. முடியாது என்பதும் உண்மை.

யாரால் முடியும்? யாரால் முடியாது என்று கேட்டால்-
யாராலும் முடியும்! என்பதும் உண்மை. யாராலும் முடியாது என்பதும் உண்மை.

என்னால் முடியுமா? முடியாதா? என்று கேட்டால், அதற்கான எதிர் வினா: உங்களால் முடிய வேண்டுமா? உங்களால் முடிய வேண்டாமா? என்பதே ஆகும். 

இரண்டையும் சொல்லுங்கள் என்பது உங்கள் கேட்பு ஆனால்-

மழை பெய்ய வேண்டும் மழை பெய்ய வேண்டும் என்று எத்தனை முறை எந்தத் தெய்வத்திடம் கேட்டாலும் மழை பெய்யாது.

மழை பெய்ய வேண்டும் மழை பெய்ய வேண்டும் என்று எங்கிருந்து எந்தத் தெய்வத்திடம் கோட்டாலும் மழை பெய்யாது.

உங்கள் நஞ்சை நிலத்தில், இந்தப் பருவத்தில், சோளம் விதைக்க முடிவெடுத்திருக்கின்றீர்கள். அதற்கு மழை வேண்டும். உங்கள் நிலத்தில் உழவு ஓட்டி சோளத்தை விதைத்து விட்டு மழை வேண்டும் என்று காத்திருந்தாலும், எந்தத் தெய்வத்திடம் கெஞ்சி கூத்தாடினாலும் மழை பெய்யாது.

இந்தப் பருவத்தில் என்ன விதைக்கலாம் என்று கடவுளிடம் கேட்க வேண்டும். இந்த பருவத்தில் சோளம் விதைக்கலாம் என்று கடவுள் உங்கள் நினைவில் மீட்டிய பிறகு, 

சோளம் வாங்க எங்கு செல்லலாம், எப்போது செல்லலாம் என்று கடவுளிடம் கேட்க வேண்டும். உங்கள் நினைவில் எந்த இடம் எந்த நாள் என்று கடவுள் மீட்டிய பிறகு 

அநதக் கடைக்குப் போகும் போதே எனக்கு விதைகள் அனைத்தையும் முளைக்கும் விதைகளாக கொடு என்று கடவுளிடம் கேட்டு விதைகளை அந்தக் கடையில் வாங்க வேண்டும்.  

அடுத்து, எந்த நாளில் உழவு செய்து, விதை விதைக்கலாம் என்று கடவுளிடம் கேட்டு, உங்கள் நினைவில் மீட்டப்பட்ட நாளில் விதையும் விதைத்து விட்டு காத்திருந்தால், அந்த விதை முளைக்கத் தேவையான மழை அடுத்த நாளே உறுதியாகப் பெய்யும்.

உங்கள் தேவை விதை முளைத்து பயிர் அறுவடை செய்வது. அதைக் கேட்டாலே அதற்கான வெளி ஆதரங்களை கடவுளே உருவாக்கித் தந்து விடும். உங்கள் தேவைக்கான வெளி ஆதாரங்களை நீங்கள் பட்டியலிட்டு கடவுளிடம் கேட்கத் தேவையில்லை.

அதனால், மழை பெய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்க வேண்டியதில்லை. கேட்கவும் வேண்டாம். மழைவேண்டும் என்று பொதுவுக்கான அதாரத்தை  நீங்கள் கேட்டால் கடவுளால் கொடுக்க முடியாது.  ஆனால் உங்கள் தேவைக்கான வெளி ஆதாரமாக அமைகிற  மழையை உங்களுக்காக கடவுளால் ஒருங்கிணைக்க முடியும்.

கடவுளிடம் எப்படிக் கேட்க வேண்டும்? அதை எவ்வாறெல்லாம் தொடரவேண்டும் என்பதே- நமது எந்தவகையான, அத்தனைக் கடவுள் கேட்புகளும் நிறைவேறுவதற்கான வழி ஆகும். 

கேட்பது மந்திரம் நோற்பது தவம் என்று தமிழ்முன்னோர் இதற்கு சொலவடை உருவாக்கியுள்ளனர் 

கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே!
கடவுளைப் புரிந்து கொண்டு, யாராலும், உறுதியாக மழையைக் கூட பெய்விக்க முடியும் என்பது தமிழ்முன்னோர் வாழ்ந்து நிறுவிய உண்மை.

நீங்கள் கடவுளைப் புரிந்து கொள்ள தமிழ்முன்னோர் முன்னெடுத்திருந்த இரண்டாவது முன்னேற்றக்கலையான கணியம், மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரம் என்கிற இரண்டு படிப்புகளை வழங்கி வருகிறது மந்திரம் கோயில் என்கிற இயங்கலை கல்வி நிறுவனம். 

பயன்பெற, யார்வேண்டுமனாலும், இந்த படிப்பில் இணைந்து படிக்கலாம். இந்தப் படிப்புகள் கல்வித்தகுதிக்கான படிப்புகள் என்பதற்கு மேலாக, முன்னேற்றத் தகுதிக்கான படிப்புகள் என்று அறியவும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,047. 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.