இயல்அறிவில் (சயின்ஸ்) பாதுகாப்பு நடவடிக்கை (சேப்டிபிரிகாசன்) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது வாழ்க்கை இயக்கத்தில் காப்புமந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம் என்கிறது இயல்கணிப்பு அல்லது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரம். தமிழ்மக்கள் அனைவரும் அன்றாடம் ஓதிவரும் வகைக்கு பொதுவானதொரு காப்புமந்திரத்தை கட்டி அளிப்பதற்கானது இந்தக் கட்டுரை. 23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: இதுவரை உங்களுக்கு கிடைத்திருந்தது அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டது மட்டுமே என்பது மந்திரம் நிறுவியுள்ள செய்தியாகும். ஒவ்வொரு தற்பரை நேரமும்- செயலாலும், எண்ணத்தாலும், தமிழாலும் (எண்ணமொழி அல்லது தாய்மொழி) கடவுளிடம் கேட்டிருப்பதே மந்திரம் ஆகும். இந்த மூன்றுவகையாக கடவுளிடம் பதிவு செய்யப்படுகிற நம்மந்திர இயக்கம், கடவுளில் பதிவாக, அந்த இயக்கத்தால் இயக்கம் பெற்ற கடவுள் நம்மை முயக்குகிறது. நாம் அன்றாடம் ஆற்றிவருகிற கடமைகள் செயல்பதிவு ஆகும். ஒவ்வொரு தற்பரை நேரமும் நம் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிற சிந்தனை எண்ணப்பதிவு ஆகும். உறுதியான கடவுள் கேட்பாக அமைகிற நம்முடைய தெளிவான பதிவு தமிழின் (எண்ணமொழி அல்லது தாய்மொழி) மூலமே கடவுளில் பதிவாகிறது. இயல்அறிவில் (சயின்ஸ்) பாதுகாப்பு நடவடிக்கை (சேப்டிபிரிகாசன்) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது வாழ்க்கை இயக்கத்தில் காப்பு மந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம் என்கிறது இயல்கணிப்பு அல்லது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரம். தமிழ்மக்கள் அனைவருக்கும் பொதுவான இந்தக் காப்பு மந்திரத்தை அன்றாடம் ஓதிவாருங்கள் என்று அறிவுறுத்தி மகிழ்கிறோம். தற்போதைக்கு தமிழ்க் குடும்பங்கள் அனைத்திலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், பொங்கல்விழாவுக்கு முந்தைய நாளில் காப்புக்கட்டு என்ற தலைப்பில் இந்த காப்பு மந்திரம் கடமை ஆற்றுதலாக (செயல்பதிவாக) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உறுதியான கடவுள் கேட்பாக அமைகிற, நாம் நம் தமிழின் மூலம் கட்டமைக்கிற, நம்முடைய தெளிவான பதிவுக்கான, காப்புமந்திரம் கடவுளே! இந்த மந்திரக்காப்பில் உறவு முறைகளையும் உறவுகளின் பெயரையும் உங்களுக்கானவைகளாக மாற்றி மந்திரம் கட்டிக்கொண்டு அன்றாடம் ஓதி வாருங்கள். நீங்கள் திருமணம் ஆனவர் என்றால்- நீங்கள், உங்கள் தலைவி, உங்கள் பிள்ளைகள், உங்கள் மருமக்கள், உங்கள் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு நீங்கள் மந்திரக்காப்பு கட்டலாம். நீங்கள் திருமணம் ஆகாதவர் எனில்- நீங்கள், உங்கள் தாய், உங்கள் தந்தை, உங்கள் அக்கா, உங்கள் தங்கை, உங்கள் அண்ணன் உங்கள் தம்பி, அண்ணன் அக்காவின் துணைகள் மற்றும் பிள்ளைகள் ஆகியோருக்கு நீங்கள் மந்திரக்காப்பு கட்டலாம். ஐந்திணைக் கோயில் மூலமாக நாங்களே உங்களுக்குக் காப்புமந்திரம் தெளிவாக வடிவமைத்துத்தர kumarinadanr@gmail.com மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்குக் காப்பு மந்திரம் வடிமைத்துத்தர தாங்கள் தெரிவிக்க வேண்டிய தகவல்கள்: நீங்கள் திருமணம் ஆகாதவர் எனில் உங்கள் உங்கள் செல்பேசி எண். மின்அஞ்சல் முகவரி ஆகிய தகவல்களையும் தெரிவிக்கவும்.
விசும்புதெய்வமே!
எனக்கும்
என் மனைவி குமுதாவிற்கும்
என் மகன் செழியனுக்கும்
என் மருமகள் ஓவியாவிற்கும்
என் பேரப் பிள்ளைகள் நிலாவிற்கும் பெருவழுதிக்கும்
என் மகள் எழல்மதிக்கும்
என் மருமகன் ஆதவனுக்கும்
என் பேரப்பிள்ளைகள் புதியனுக்கும் வெண்பாவிற்கும்
உடல் நலத்தையும்
மன மகிழ்ச்சியையும்
பொருளாதார முன்னேற்றத்தையும்
பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பையும்
தொடர்புகளின் ஒத்துழைப்பையும்
வழங்கி ஆவன செய்ய வேண்டுகிறேன்.
கடவுளே!
விசும்புதெய்வமே!
அருள் செய்க.
என்று இரண்டு முறையோ ஐந்து முறையோ அன்றாடம் ஓதி வாருங்கள்
1.உங்கள் பெயர் தமிழில்.
2.உங்கள் மனைவியின் பெயர் தமிழில்.
3.உங்கள் பிள்ளைகளின் பெயர்கள் பாலினத்துடன்.
4.உங்கள் மருமக்கள் பெயர்கள்
5.உங்கள் பேரப்பிள்ளைகள் பெயர்கள்
ஆகியன.
1.பெற்றோர் பெயர்கள்.
2.உடன் பிறந்தவர்கள் பெயர்கள் உறவு முறைகளோடு தெரிவிக்கவும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,605.