Show all

தேவை முதல் பத்து உடைமையாளர்கள்! தமிழர்களில்

பணத்தின் மீதான தீண்டாமையே, தமிழினத்தை பணத்தைக் கொண்டாடுகிறவர்களுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. பணம் என்பது உடைமை. பணம் என்பது அதிகாரம். 

29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகில், ஏன் இந்தியாவில், 
முதல் பத்து பணக்காரர்களில் ஒரு தமிழன் இல்லை.
முதல் பத்து அரசியல்வாதிகளில் ஒரு தமிழன் இல்லை.
முதல் பத்து நடிகர்களில் ஒரு தமிழன் இல்லை.
முதல் பத்து ஊடகங்களில் ஒன்றும் தமிழனுடையது இல்லை.
எந்த அலைக்கற்றை வரிசையும் தமிழனுடையது இல்லை.
உச்ச அறங்கூற்றுமன்றத்தில் இருந்து உலக அறங்கூற்றுமன்றம் வரை தமிழன் இல்லை.
முதல் பத்து அறக்கட்டளைகளில் ஒன்றும் தமிழனுடையது இல்லை.
1.கல்வி
2.கலை
3.இலக்கியம்
4.தொழில்
5.கருவிகள்
6.உடை,அணிகலன்
7.உணவுகள்
8.வணிகம்
9.நாடு
10.அரசு
11.நீராதாரம்
12.கோயில்
13.நிதி
14.அறங்கூற்று
15.பாதுகாப்பு
16.பண்பாடு
17.வரலாறு
ஆகியவற்றில் எல்லாம் உடைமையாளனாக எந்தத் தமிழனும் இல்லாத போது,
தமிழர்களின் வாழ்மானம்-
எல்லா தளத்திலும் அயலவர்களை உடைமையாளர்களாக நிறுத்தி,
நிருவாகக் கூலியாகவோ உடலுழைப்புக் கூலியாகவோ இயங்குவதாகத்தாகவே யிருக்கிற போது,
எந்தத் தமிழனும் எந்தத் துறையிலும் உடைமையாளனாக மாறுகிற முயற்சியேயில்லாமல்
வெறுமனே, தமிழனாக இருப்போம்!
என்றெல்லாம்,
உணர்வுகளை மட்டுமே பரிமாற்றம் செய்து கொள்வதில் என்ன பயன் விளைந்து விட முடியும்.
தமிழா!
நீ!
பகுதி நேரமாக வாவேயினும் ஏதாவதொரு துறையில் உடைமையாளனாக நுழைய முற்படு!
படிப்படியாக முழுமையாக மீட்டெடு!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,068.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.