எழுத்துக்களால் அமையும் சொற்களின் பொருளை தெரிவிக்கிற சொற்களின் பட்டியல்நூலை நாம் அகராதி என்று அழைக்கிறோம். ஆதி என்கிற சொல் தமிழ்ச் சொல் அன்று என்கிற கருதுகோளில் அகரமுதலி என்றும், சொற்களின் பொருளை தெரிவிக்கிற சொற்கள் பட்டியல் நூலை அழைத்து வந்தோம். ஆனால் முதன்மையைக் கொண்டாடுகிற அதிகாலை, அதிகம், அதிகாரம், அதிமதுரம், அதியமான், அதிர்வு, அதிர்ச்சி, என்கிற சொற்களும், அதி என்கிற சொல்லின் முதனிலை திரிந்த வடிவமான ஆதி, ஆதித்தியன், ஆதிக்கம், ஆதிரை, ஆதிபகவன் ஆகிய சொற்கள் எல்லாம், ஆதி என்கிற சொல்வடிவம் தமிழே என்று உறுதி செய்ய காரணமாகிறது. அகரத்தை முதலாகக் கொண்டு அமைக்கிற சொற்பட்டியலை அகராதி என்று வழங்குவதைப் போல கணியக்கலையில் முன்னெடுக்கப் படுகிற எண்களின் ஒன்றை முதலாக கொண்டு அமைக்கிற இயல்புகளுக்கான பெண்பிள்ளை பெயர்கள் பட்டியலை வழங்க ஒரு புதிய சொல்லாக ஒன்றாதி என்கிற சொல்லை இந்த இயல்புகளுக்கான பெயர்கள் பட்டியலுக்கு நான் சூட்டியது தமிழுக்கு ஒரு புதிய சொல் கொணர்நத மகிழ்ச்சியாக கருதுகிறேன். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரில். அந்தப் பெயரின் ஒலியனுக்கு ஏற்ப உங்கள் குழந்தைகளுக்கான ஓர் இயல்பு வலுப்பெற்று வருகிறது. அதை பயன்படுத்தி முன்னேறும் வகையாக ஒரு கலையை நம் தமிழ் முன்னோர் கணியம் என்ற பெயரில் வடிவமைத்து இருந்திருக்கிறார்கள். அந்தக் கணியக்கலையின் அடிப்படையில் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்பும் இயல்புக்கான வகையில் பெயர் சூட்டி உங்கள் பிள்ளைகளுக்கான முன்னேற்றத்தை பெற்றுதர இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணிக்கைதான் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவதற்கான அடிப்படை என்பது கணியக் கலை முன்னிறுத்தும் முதன்மையான செய்தியாகும். உலகில் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்கள் அனைத்தும் அடிப்படையான நேர்கள் (எலக்ட்ரான்) நிறைகளால் (புரட்டான்) ஆனவைகள்தாம். ஆனாலும் அவைகள் வௌ;வேறு தனிமங்களாக இருப்பதற்கு அவைகளில் அமைந்த நேர்கள், நிறைகளின் எண்ணிக்கை மாறுபடே காரணம் என்பதை இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவியிருக்கிறது அல்லவா? எடுத்துக்காட்டாக இரும்பு அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 26 ஆகும். தங்கத்தின் அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 79 ஆகும். அது போலவே உங்கள் அடையாளமாக இருக்கிற உங்கள் பெயரில் அமைந்த ஒலியன் எண்ணிக்கை உங்களுக்கு ஓர் இயல்பு அடையாளத்தைத் தருகிறது. ஐந்திர (பஞ்சபூத) ஆற்றல்களில் ஒன்றான, இயக்கம் இல்லாத வெளியாக அமைந்து- அந்த வெளியில் உலா வருகிற நிலம், நீர், காற்று, தீ என்கிற நான்கு ஆற்றல்களால், அந்த இயக்கம் இல்லா வெளி, இயக்கம் பெற்று- விண்வெளியாகி, அந்த நான்கு ஆற்றல்களுக்கு எதிர் இயக்கம் தருகிற விசும்பு என்கிற ஆற்றல் என்று தமிழ் முன்னோர் கணித்திருக்கிறார்கள். தமிழ்முன்னோர் சுட்டும் ஐந்திர (பஞ்சபூத) ஆற்றல்கள்: நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பவைகள் ஆகும். இவற்றுள் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல் தான்தோன்றி இயக்கம் உடைய ஆற்றல்கள். ஐந்தாவது ஆற்றலானது:- இயக்கம் இல்லாத வெளி, அந்த வெளியில் இயங்குகிற நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல்களால் இயக்கம் பெற்ற விண்வெளி, எதிர் இயக்கமாக மற்ற நான்கு ஆற்றல்களை இயக்கும் விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடையது. இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவியிருக்கிற நியூட்டனின் மூன்றாவது விதியில் சொல்லப்படுகிற 'ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு' என்பதில் அந்த எதிர்வினைதான் இந்த விசும்பு என்று நிறுவியிருக்கின்றனர் நம் தமிழ் முன்னோர். விசும்பைப் பேரறிவு பேரற்றல் என்கின்றனர் தமிழ் முன்னோர். நம்மால் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலியனும் விசும்பில் பதிவாகிறது. இன்றைக்கு கணினியை அவரவர்கள் தரவேற்றம் செய்த மென்பொருள் வகைக்கு இயக்கிக் கொள்ள முடிகிறது இல்லையா? ஒவ்வொருவரும் அவரவர் விதியை விசும்பு என்கிற வண்தட்டில், மென்பொருளாக எழுதிக் கொள்கின்றனர். இதைத்தான் திருக்குறள் ஆக உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரால் ஒவ்வொரு முறையும் அவர் அழைக்கப்படும் போதும் அவர் அந்த பெயருக்குரிய ஒலியனின் எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட இயல்புக்கு உரியவர் என்று விசும்பில் பதிவு செய்யப்படுகிறார். அவர் அவ்வாறே அவருக்கான இயல்பில் வலுப்பெற்று அந்த இயல்புக்கான துறையில் ஈடுபடும் போது சிறப்பான வெற்றியை ஈட்டுகிறார். இனி இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:- அமேசான் கிண்டில் பதிப்பில் எனது, பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் மின்நூல் வெளியாகியுள்ளது. அதில் கூடுதல் பெயர்களுக்கு கணியக்கலை இயல்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நூலை விலை கொடுத்து உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும், அமேசான் கிண்டில் பதிப்பகம் வாய்ப்பு வழங்குகிறது. அதற்கான இணைப்பு: https://amzn.to/3jPvI64
பெண் குழந்தைகளுக்கான கணியக்கலை இயல்பு அடிப்படையில் தமிழ்ப் பெயர்கள்:
இயல்எண்
இயல்பு
பெயர்கள்
ஒன்று
உழைப்பு
அமுதா
ஒன்று
உழைப்பு
இறைவி
ஒன்று
உழைப்பு
பொன்மதி
இரண்டு
நிருவாகம்
அமுதினி
இரண்டு
நிருவாகம்
இயற்கை
இரண்டு
நிருவாகம்
குமுதா
மூன்று
முனைப்பு
அருள்விழி
மூன்று
முனைப்பு
இளமயில்
நான்கு
பயணம்
அல்லிக்கொடி
நான்கு
பயணம்
இளநகை
ஐந்து
கலை
அமுதரசி
ஐந்து
கலை
இளம்பிறை
ஆறு
இலக்கியம், தொழில் நுட்பம்
அல்லி
ஆறு
இலக்கியம், தொழில் நுட்பம்
இறைஎழிலி
ஏழு
கமுக்கம், பொருளாதாரம்
இசை
ஏழு
கமுக்கம், பொருளாதாரம்
இசையரசி
எட்டு
புகழ்
அருவி
எட்டு
புகழ்
ஒப்பிலாமொழி
ஒன்பது
போரியல், கண்ணேறு
இன்மொழி
ஒன்பது
போரியல், கண்ணேறு
குயிலி
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று தெரிவிக்கிறது.
ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு
ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம்
ஒலியன் 3க்கு இயல்பு முனைப்பு
ஒலியன் 4க்கு இயல்பு பயணம்
ஒலியன் 5க்கு இயல்பு கலை
ஒலியன் 6க்கு இயல்பு தொழில்நுட்பம்
ஒலியன் 7க்கு இயல்பு கமுக்கம்
ஒலியன் 8க்கு இயல்பு புகழ்
ஒலியன் 9க்கு இயல்பு போரியல்
இயல்பை ஒற்றைச் சொல்லில் நாம் தெரிவித்திருக்கிறோம். அந்த ஒற்றைச் சொல்லின் விரிவாக உங்கள் பிள்ளைகள் இயங்கும்.