சமஸ்கிருத மொழி பேசுவோர் எண்ணிக்கை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வெறுமனே 24,821 மட்டுமே என்று தெரியவருகிறது. 26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சமஸ்கிருத மொழி எப்போதும் யாருக்கும் தாய்மொழியாக இருந்தது இல்லை. அப்படி ஒரு சாராருக்கு தாய்மொழியாக சமஸ்கிருதம் இருந்திருக்குமேயானால், அந்த இனத்தில் தோன்றும் குழந்தைகள் வெறுமனே ஐந்து அகவைக்குள் கற்றுத் தேர்ந்து சமஸ்கிருத மொழியை இந்தியாவில் அதிக மக்கள் பேசும்மொழியாக நிலை நிறுத்தியிருந்திருப்பார்கள். உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் கலவை மொழியான ஹிந்தி தோன்றியிருக்கவே வாய்ப்பு இல்லாமல் போயிருந்திருக்கும். இந்தியாவில், உத்தராகண்ட் மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது. ஆரியர்களின் நான்கு வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் 22ல் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலான சமஸ்கிருத சொற்கள் சிற்சில விதிகளை அமைத்து ஏராளமான சொற்களை தமிழ் மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் கூறுவர். இப்படி சமஸ்கிருதத்தைக் கொண்டாடுவதற்கு நிறைய பெருமைப்பாடுகள் உள்ளன. ஆனால் சம்ஸ்கிருதத்தை கொண்டாடியவர்கள்- இன்றும் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள் அதை தமிழுக்குப் போட்டியாக நிலை நிறுத்த முயல்வதுதாம் சமஸ்கிருத மொழிக்கான தொடர் தோல்வியாக அமைந்து வருகிறது. தமிழ் இலக்கணத்தில் வழக்கு என்பது மக்களின் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறை ஆகும். நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ நாமும் அவ்வாறே வழங்கி வருவதைக் குறிக்கும். வழக்கு என்பது மரபு அல்லது பழக்கம் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது. ஒரு சில காலத்தில் இலக்கண விதிகளுக்கு மற்றாகச் சொற்கள் பயின்றுவரின் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே வழக்காகும். தமிழ் இலக்கணம் சொல்லுகிற இந்த வழக்கு இரண்டு வகைப்படும். ஒன்று இயல்பு வழக்கு மற்றது தகுதி வழக்கு என்பதாகும். இயல்பு வழக்கு: ஒரு பொருளுக்கு அமைந்துள்ள இயல்பான சொல்லால் அப்பொருளை வழங்குவது இயல்பு வழக்கு எனப்படும். இது தகுதி வழக்கு: பொருள்களுக்கு அல்லது செயல்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை வழங்குவது தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியானது என்று கருதும் வேறு சொற்களால் அப்பொருள்களை அல்லது செயல்களை வழங்குதல் தகுதி வழக்கு எனப்படும். அனைவரின் முன்னும் பேசவிரும்பாத சொற்களுக்குப் பதிலாக வேறு சொற்களைப் பேசுதலாம். என்பது தகுதி வழக்கு என்று தமிழ் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கிற்கு தம்இன மக்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்வதற்கு, வால்காவிலிருந்து கங்கை வரை என்கிற நீண்ட நெடியப் பயணப் பேரனுபவமும், அதில் முனைப்பும் மிக்க பார்ப்பனிய அறிவாளர்கள் சிலரால், உருவாக்கப்பட்டு, அந்த மொழி தேவபாஷா என்றும் பெருமைகொண்டாடப்பட்ட, உலகின் முதலாவது செயற்கை மொழிதான் சமஸ்கிருதம். இந்தியாவில் இந்த சமஸ்கிருதம் வடபுல தமிழின் திசைமொழிகளோடு கலந்து அஸ்ஸாமிய மொழி, வங்காள மொழி, குஜராத்தி மொழி, ஹிந்தி மொழி, மைதிலி மொழி, மராட்டி மொழி, நேபாளி மொழி, ஒரியா மொழி, பாளி, பஞ்சாபி மொழி, ஜிப்சிகளின் மொழி, சிந்தி மொழி, திவெயி மொழி, சிங்கள மொழி, உருது ஆகிய புதிய மொழிகளை உருவாக்கியதே அன்றி சம்ஸ்கிருதம் வளர்ச்சி பெறவில்லை. அதே போல தென்புல செந்தமிழோடு கலந்து தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் போன்ற புதிய மொழிகளை உருவாக்கியதே அன்றி சம்ஸ்கிருதம் வளர்ச்சி பெறவில்லை. காரணம்: சம்ஸ்கிருதம் தேவபாஷா என்றும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் நீசபாஷா என்று இயல்பு வழக்கை இழிவு படுத்தியமைதான். சமஸ்கிருதம் வளராவிட்டாலும் இன்றைக்கும் நிற்பதற்குக் காரணம் பார்ப்பனியர்கள் எந்த மொழியைத் தாய்மொழியாக கொண்டாலும் சமஸ்கிருதத்தை தவறாமல் கொண்டாடி வருகின்றனர்.
1.இலக்கணம் உடையது
2.இலக்கணப்போலி
3.மரூஉ
என மூவகைப்படும். இந்த அடிப்படையில்தான் எந்தமொழியின் 99.99 விழுக்காட்டுச் சொற்களும் அமைந்திருக்கும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,034.