மந்திரம் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே. 05,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது கலை. மற்ற இரண்டு கலைகள் ஒன்று சோதிடம் சாதகம் உள்ளடங்கிய நிமித்தகம், இரண்டு கணியம் ஆகும். ஒன்னே முக்கால் அடியில் மந்திரக்கலையின் முழு விழுமியங்கள். என்கிற எனது எட்டாவது கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டியது, இந்த 'முதல் மந்திரம்' என்கிற ஒன்பதாவது கட்டுரையைப் புரிந்து கொள்ளும் வகைக்கான அடிப்படைத் தேவையாய் இருக்கிறது. நீங்கள் அந்தக்கட்டுரையைப் படித்து விட்டு வந்து இதைப் படியுங்கள் என்று, இந்தக் கட்டுரை படிக்க வந்த உங்கள் முயற்சிக்கு தடை போடுவதை விட அந்த எட்டாவது கட்டுரையை எழுதி விட்டு ஒன்பதாவது கட்டுரையைத் தொடர்வது சிறப்பு என்று கருதுகிறேன். எட்டாவது கட்டுரை: மந்திரக்கலையை முன்னேற்றக்கலையாக உங்கள் முன்னேற்றத்திற்கு முழுமையாக நீங்கள் முன்னெடுக்கும்போது மற்ற இரண்டு கலைகள் குறித்து நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் மந்திரக்கலை மற்ற இரண்டு கலைகளில் இருந்து மேம்படுத்தப்பட்ட கலையாகும். நிமித்தகக் கலையில் மற்றவரின் வழிகாட்டல் முதன்மையாக உள்ளது. நிமித்தகக் கலையை நாமே முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற தேவை எழவில்லை. கணியக்கலையில் மற்றவரின் வழிகாட்டல் பகுதியாக இயல்புகள் குறித்த சில அடிப்படைகளை கற்றுக்கொள்வதற்குப் பயன்பட்டாலும் அதில் நாம் விரும்பும் ஒற்றை இயல்பை தொடர்ந்து வலுப்படுத்துவது நம்முடைய கடமையாகும். மந்திரக்கலை- நமது தலைஎழுத்தை, நமது விதியை நாமே எழுதிக் கொள்வதற்கானதாகும். இதில் யாருடைய வழிகாட்டலும் நம்முடைய தலைஎழுத்;தை, நம்முடைய விதியை நாம் எழுதிக் கொள்வதற்கு ஒரு வாழ்த்தாக மட்டுமே அமைய முடியும். நிமித்தகம் உங்களுக்கு நாற்பது விழுக்காட்டு முன்னேற்றத்தை தரமுடியும். கணியம் உங்களுக்கு அறுபது விழுக்காட்டு முன்னேற்றத்தைத் தரமுடியும். மந்திரத்தில் எண்ணுவது என்கிற பகுதி எண்பது விழுக்காட்டு முன்னேற்றத்தையும், திண்ணியராதல் என்கிற பகுதியில் நூறு விழுக்காட்டு முன்னேற்றமும் சாத்தியம் என்கிறது ஓர் ஒன்னே முக்கால் அடி திருக்குறள். உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். அப்படி நினைப்பதோடு விட்டு விடாமல் அந்த நினைப்பு உங்களிடம் கேட்கும் வேலைகளை நீங்கள் கட்டாயம் முடித்துத் தரவேண்டும் என்பதே இந்த திண்ணியராதல் என்பதற்கான விளக்கமாகும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும், நீங்கள் முன்னெடுக்கும் பதிவில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். அவைகளை நீங்கள் கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும். என்பதே இந்த திண்ணியராதல் என்பதற்கான விளக்கமாகும். ஒன்பதாவது கட்டுரை: உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் பதிவில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும், நீங்கள் முன்னெடுக்கும் பதிவு எதுவாக அல்லது எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதே 'நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம்' கட்டுரை பேசும் செய்தியாகும். ஒவ்வொரு நாளும் ஒரு எட்டு மணி நேரமாவது ஒவ்வொரு மனிதனுக்கும் உறக்கம் தேவையாய் இருக்கிறது. அந்த உறக்கம் நமது உடலுக்கானது அல்ல. நமது உள்ளத்திற்கானது. அதனால் நீங்கள் உறங்கி எழும்போது முதலில் விழிப்பது உங்கள் எண்ணமே. எண்ணம் என்பது என்ன? உங்கள் மொழி. அந்த உங்கள் மொழி- ஒன்றிய அரசில் பதவியில் உள்ள ஹிந்தி வெறியர்கள் திணிக்கிற ஹிந்தி மொழியா? இல்லை! உங்கள் முளையிலேயே உங்கள் கல்வியில் திணித்துக் கொண்டிருக்கிறதே உங்கள் சமூகம், அந்த ஆங்கிலமா? இல்லை! உங்கள் தாய் தன் குருதியை பாலாக்கி உங்களுக்குத் தந்த உங்கள் உடலும், உங்கள் தாய் தன் மூச்சுக்காற்றை மொழியாக்கி, 'தாய்மடி பல்கலைக்கழகத்தில்' உங்களுக்கு கற்றுத்தந்த தமிழும் உங்கள் தாய் உங்களுக்குத் தந்த முதல் உடைமைகள். உங்களுக்குக் கிடைத்த முதல் உடைமைகள் இரண்டில் ஒன்றான தமிழே உங்கள் மொழி! படுக்கையில் இருந்து என்ன நினைத்துக் கொண்டு எழுவீர்கள்? அம்மா தாயே என்று நினைத்துக் கொண்டு எழலாம். முருகா என்று நினைத்துக் கொண்டு எழலாம். கர்த்தாவே என்று நினைத்துக் கொண்டு எழலாம். அல்லாவே என்று நினைத்துக் கொண்டு எழலாம். பெருமாளே என்று நினைத்துக் கொண்டு எழலாம். இப்படி உங்கள் முனைப்பு எதுவானாலும் உங்கள் உயிர்ப்பு தமிழே! நாம் நமது முனைப்புகளுக்கும் முனைப்புகளில் வெற்றிகளுக்கும் இரண்டாவதாக மூன்றாவதாக என்று எத்தனையாவதாக வேண்டுமானலும் மந்திரக்கட்டுக்கு இடம் தரலாம். அனால் நாம் கட்ட வேண்டிய முதல் மந்திரம் நமது உயிர்ப்பான தமிழுக்காக இருக்க வேண்டும். நீங்கள் சார்ந்திருக்கும் முனைப்புகளுக்கு நீங்கள் கட்டும் மந்திரம்- உங்களுக்கு மட்டுமானதாக, உங்கள் 58 அகவை வரைக்கானது மட்டுமாக மட்டுமே அமையும். ஆனால் நீங்கள் உங்கள் உயிர்ப்பான தமிழுக்காக கட்டும் மந்திரம் இந்த உலகம் பெருவெடியில் முடிந்து போகும் காலம் வரைக்கும் உங்கள் அனைத்து தலைமுறைகளுக்கும் வேராக நின்று பயன்தரும். மந்திரக்கலைக்குத், தமிழர்கள் பாடநூலாக கொண்டாடும் வகைக்கான திருக்குறள், தமிழுக்கே தமிழின் முதல் எழுத்தான அகரத்திற்கே மந்திரம் கட்டி அடுத்தடுத்த குறள்களைத் தொடர்கிறது. அகர முதல! (என் தாய்த்தமிழுக்கு முதலான அகரம் வாழ்க) நீங்கள் உறக்கத்தில் இருந்து விழித்ததும், உங்கள் தொடர் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த, கட்ட வேண்டிய முதல் மந்திரம், தமிழ் வாழ்த்தாகவே அமைய வேண்டும். நீங்கள், உங்கள் சொந்த முயற்சியில், சொந்த அனுபவத்தில் ஒரு மொழி வாழ்த்தைக் கட்டுவது சிறப்பு. அதுவரை திருவள்ளுவரின் மொழி வாழ்த்தான
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
எழுத்தெல்லாம் (ஒட்டுமொத்த தாய்த்தமிழ்)
ஆதி பகவன் (தமிழன் கண்ட முதல் கோளான ஞாயிறு)
முதற்றே உலகு (கோள்களுக்கு எல்லாம் முதலானது போல)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்ற குறளையோ,
சுந்தரனாரின்
நீராருங் கடலுடுத்த என்கிற தமிழ்நாடு அரசின் தமிழ்நாட்டு அடையாளப் பாடலையோ,
சங்கே முழங்கு என்கிற பாவேந்தர் பாரதிதாசன் பாடலையோ
பெருஞ்சித்திரனாரின் மொழி வாழ்த்தான
அன்னை மொழியே
அழகான செந்தமிழே
முன்னைக்கும் முன்னையான நறுங்கனியே
கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் அரசாண்ட மண்ணுலகப் பேரரசே
பாண்டியனின் மகளே
திருக்குறளின் பெருமைக்குரியவளே
பத்துப்பாட்டே
எட்டுத்தொகையே
பதினெண் கீழ்க்கணக்கே
நிலைத்த சிலப்பதிகாரமே
அழகான மணிமேகலையே
நினைவுகளால் தலை பணிந்து வாழ்த்துகின்றோம்.
என்கிற பாடலைக்கூட முதல் மந்திரமாக ஏற்று,
தமிழை ஒவ்வொரு நாள் அதிகாலையும்
வாழ்த்திப் பாடி வாழ்க்கையின் வெற்றியை வென்றெடுக்கலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,192.