மின்சாரம் குறித்தான இந்த ஒன்பதாவது கட்டுரையில், வீட்டு மின் அமைப்பு வேலைகளுக்கு மின்வடம் (ஒயரிங்) அமைப்பது எப்படி? என்பது குறித்து விளக்கும் வகைக்கானது இந்தக் கட்டுரை. 07,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நீங்கள் உங்கள் கனவு இல்லத்தை மிக விரைவில் கட்ட திட்டமிட்டிருந்தால், இந்தக் கட்டுரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலாக இருக்கலாம். உங்கள் வீட்டிற்கு மின்அமைப்பு வேலைகளைச் செய்வதற்கு கம்பிகளை வாங்குவதற்கு முன் உங்கள் மின் தேவைகளை முன்வைப்பது நல்லது. உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் குளிரூட்டிகள் (ஏர் கண்டிஷனர்கள்), கொதிகலன்கள் (வாட்டர் ஹீட்டர்கள், சலவை இயந்திரங்கள் (வாஷிங் மெஷின்), உலர்த்திகள் (ட்ரையர்கள்) போன்ற மின் சாதனங்களின் பட்டியலை உருவாக்கவும். ஒவ்வொரு சாதனங்களின் திறனை வாட்களில் சரிபார்க்கவும். ஒரு நாளைக்கு மணிநேரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சராசரி பயன்பாட்டைக் கணக்கிடுங்கள். உங்களின் எதிர்கால தேவைகளையும் மனதில் கொள்ளுங்கள். உங்களுக் தேவையான மின் அளவைக் கணக்கிடுவதன் மூலம், உங்கள் மின் அமைப்பிற்கு பயன்படுத்த வேண்டிய கம்பியின் அளவை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனால் உங்கள் வீட்டிற்கு மின் அமைப்புப் பணிகள் செய்யும் மின்பணியாளர் இந்தத் தகவலை நீங்கள் கேட்கும் போது நுனி நாக்கில் இருந்து உடனடியாக விடை அளிப்பார். உங்கள் வீட்டிற்கு மின்வடம் (வயரிங்) அமைப்பதில் இரண்டாவது பகுதி மின்வடம் அமைப்பை கூரை கான்கீரிட் மற்றும் சுவரில் மறைத்துப் பதிப்பதாகும். இதற்கு கூரை கான்கிரிட்டுக்கு கம்பிகட்டியவுடன் காலி பிவிசி குழாய்களை அமைத்து விடுவது, மற்றும் சுவர்களை வெட்டி குழாய்களை நிலைநிறுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. மறைக்கப்பட்ட வழித்தடம் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், மின்சாரம் தாக்கும் வாய்ப்புகளையும் குறைக்கிறது. உங்கள் மின்வடம் (வயரிங்) மற்றும் குழாய்களின் ஒற்றை வரி வரைபடத்தை வைத்திருக்க மறக்காதீர்கள், ஏனெனில் இது எதிர்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் வேறு எந்த கட்டுமான அல்லது மின்அமைப்புப் பணிகளுக்கும் தேவைப்படும். உங்கள் வீட்டிற்கு மின் அமைப்புப் பணிகள் செய்யும் மின்பணியாளர் இதற்கான வரைபடத்தை மனப்பாடமாகவே வைத்திருப்பார். காரணம் அவர் மின் அமைப்பு செய்யும் எல்லா வீடுகளிலும் ஒரே மாதிரியான வரைபடத்திலேயே பணியை மேற்கொள்வார். பொறியாளர் வைத்துக் கட்டுகிற கட்டிடங்களில் இந்த வரைபடம் வீட்டு உரிமையாளருக்கு நீலஅச்சுப்படமாகவும் வழங்கப்படுகிறது. கம்பிகளின் வண்ண குறியீட்டு முறை முறையாக அமைப்பதன் மூலம் உங்கள் வீட்டை மறுமின்வடம் (ரீவயரிங்) அமைப்பதற்குத் தேவையான காரணிகளில் ஒன்றாகும். கம்பிகளின் வண்ணக் குறியீட்டு முறை பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தாலும் அவற்றை அடையாளம் காண உதவுகிறது. கம்பிகள் சிவப்பு, பச்சை, நீலம், கருப்பு, மஞ்சள் போன்ற பல்வேறு வண்ணங்களில் வருகின்றன. தேவையான மின்பளு, சுவிட்சுகள் மற்றும் கம்பிகள் தொடர்பான உங்கள் எல்லா முடிவுகளிலும், முன்கூட்டி யோசித்து, எதிர்காலத் தேவைக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நீங்கள் வாங்கும் அனைத்து மின் தயாரிப்புகளும் உயர் பாதுகாப்புத் தரங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்யவும்.
வீட்டிற்கு மின்அமைப்புப் பணியில், தரையிடல் என்பது மனித உயிரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உங்கள் மின் சாதனங்களைப் பாதுகாப்பதற்கும் புவியில் பொருத்துவது கட்டாயம். தரையிடல் இல்லாமல், நீங்கள் பயன்படுத்தும் சலவை இயந்திரம் போன்ற சாதனங்கள் பழுது அடைந்தால், நீங்கள் இயந்திரத்தைத் தொட்டால் மின் அதிர்ச்சி ஏற்படலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,164.